நூல் அறிமுகம்: திராவிட இயக்கமும் பெண்கள் முன்னேற்றமும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

நூல் அறிமுகம்: திராவிட இயக்கமும் பெண்கள் முன்னேற்றமும்

முனைவர் பெ. ஜெயா

புத்தா பப்ளிகேஷன்ஸ்

முதல் பதிப்பு 2021

பக்கங்கள் 202

விலை ரூ 200/-

தமிழர்களின் விடுதலைக்காக துவக்கப்பட்டதே திராவிட இயக்கம்! சாதிய கொடுமைகளி லிருந்து விடுதலை; பெண் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை ; மூட நம்பிக்கைகளி லிருந்து விடுதலை; அறியாமையி லிருந்து விடுதலை; ஆரிய ஆதிக் கத்திலிருந்து விடுதலை! நம் கைகளின் விலங்குகளை உடைத் தெறிவதற்கு தோன்றியதே - திராவிட இயக்கம்! அதன் தந்தைதான் பெரியார்!

தந்தை பெரியார் இரண்டு முக்கியமான அடிமைத்தனத்தை எதிர்த்து மிக தீவிரமாக போராடினார்! ஒன்று சாதிக்கு எதிரானது மற்றொன்று பெண்ணடிமைக்கு எதிரானது !

பெண்ணடிமையை எதிர்த்து தனது பேச்சுகளாலும் எழுத்து களாலும் செயல்களாலும் தொடர்ந்து பெரியார் போராடினார்! திராவிட இயக்கத்தை சேர்ந்த தலைவர்களையும் குறிப்பாக பெண் தலைவர்களையும் அவரோடு இணைத்து செயலாற்றினார்; போராடினார்; சிறை சென்றார்; வெற்றி பெற்றார்!

திராவிட இயக்கத்தின் பெண் விடுதலைக்கான போராட்டங்களையும் அதனால் கிடைத்த பயன்களைப் பற்றி ஆய்வு செய்து தரப்பட்ட தனது அறிக்கையை நூலாக தந்துள்ளார் - முனைவர் பெ. ஜெயா. 

தமிழகத்தில் பெண்களின் முன்னேற்றம் தந்தை பெரியாரின் திராவிட இயக்க செயல்பாடுகளின் பலன் என்று அதனால் பயனடைந்த ஒருவராக இந்த ஆய்வை நடத்தி, நமக்கு நூலாக வழங்கியுள்ளதாக நூலாசிரியரே தனது முன்னுரையில் தெரிவிக்கிறார்!

இந்த ஆய்வு நூலை நான்கு முக்கிய தலைப்புகளில் ஆய்வு செய்து அதன் முடிவுகளையும் தொகுத்து வழங்கியுள்ளார்.

திராவிட இயக்க வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு என்ற தலைப்பின் கீழுள்ள ஆய்வு கட்டுரை, திராவிட இயக்கத்தின் பெண் தலைவர்கள், முன்னோடிகள் பற்றிய தகவல் களஞ்சியமாக அமைந்துள்ளது! 

பெரியார் எவ்வாறு திராவிட இயக்கத்தில் பெண்களுக்கு முன்னுரிமை தந்து அவர்களை தலைவர்களாக, போராளிகளாக, செயல் வீராங்கனை களாக இயங்க செய்தார் என்பதை வியப்போடு அறிய முடிகிறது! இந்திய அரசியலில் இந்த அளவிற்கு வேறு அமைப்புகளில் காணாத வரலாறு! 

இவ்வளவு அரிய பாரம்பரியம் திராவிட இயக்கத்தின் பெண்களின் மீதான அக்கறையை எடுத்து காட்டுகிறது !

பெண் விடுதலை போராட்டங்களில், பெண்களின் முன்னேற்ற செயல்பாடு களில் திராவிட இயக்கத்தின் பங்கையும் தந்தை பெரியாரின் பங்கையும் மிகச் சிறப்பாக தனது ஆய்வு மூலம் வழங்கியுள்ள நூலாசிரியர் முனைவர் பெ.ஜெயா அவர்கள் பாராட்டுதலுக்கும் வாழ்த்துகளுக்கும் உரியவர்.

இந்த நூல் அனைவருக்குமானது !

பெரியார் பற்றி நச்சென்று நாலு வரிகளில் நான் சொல்வது :

பெண்ணடிமையை விரட்ட வந்தவர் - பெரியார் !

பெண்ணுரிமையை திரட்ட வந்தவர் - பெரியார் !

பெண் விடுதலைக்கு பாதை போட்டவர் - பெரியார் !

பெண் முன்னேற்றத்திற்து பதியம் போட்டவர் - பெரியார் !

- பொ. நாகராஜன், பெரியாரிய ஆய்வாளர், சென்னை - 13.09.2022.


No comments:

Post a Comment