பக்தியின் பெயரால் தொடரும் காட்டுமிராண்டித்தனங்கள் தலையில் தேங்காய் உடைத்தல், பேய் விரட்டுவதன்பெயரால் பெண்களுக்கு சாட்டையடியாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

பக்தியின் பெயரால் தொடரும் காட்டுமிராண்டித்தனங்கள் தலையில் தேங்காய் உடைத்தல், பேய் விரட்டுவதன்பெயரால் பெண்களுக்கு சாட்டையடியாம்

திருச்சி,அக்.10- திருச்சி மாவட்டம் முசிறி அருகே வெள்ளாளப் பட்டியிலுள்ள அச்சப்பன் கோயிலில் கடந்த 5.10.2022 அன்று  சாட்டையால் பெண்களை அடித்து பேய் விரட்டும் விநோத திருவிழா நடந்தது. முன்னதாக அச்சப்பன் சுவாமி மற்றும் பரிவார தெய் வங்களுக்கு சிறப்பு பூசைகள் நடந்தது. அதைத் தொடர்ந்து கடவுளர் சிலைகள் காட்டுகோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு கோயில் பூசாரிகள் சேர்வை அடித்து நடனமாடினர். 

பக்தர்களின் தலையில் தேங்காய் உடைத்து பெண்கள்மீது சாட்டையடி நடத்தப்பட்டது.

பின்னர் பக்தர்களின் தலையில் தேங்காய் உடைக் கப்பட்டது. இதன்பின்னர் அங்குள்ள மைதானத்தில் நீண்ட வரிசையில் தலைவிரி கோலமாக மண்டியிட்டு கைகளை உயர்த்தியவாறு அமர்ந்திருந்த பெண்களின் கைகளில் கோயில் பூசாரி சாட்டையால் அடித்தார். கோயில் பூசாரியிடம் சாட்டையால் அடி வாங்கினால் தன்னை பிடித்திருந்த பேய் விலகி விடும் என்றும், இதேபோல் குழந்தை வரம், திருமண தடை நீங்குதல், தொழில் மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு வரங்கள் கிடைக்குமென்றும் மூடநம்பிக்கை களால் அப்பாவி பாமர மக்கள் அந்தக் கோயிலுக்கு செல்கின்றனராம்.

பகுத்தறிவற்ற மக்களின் அறியாமையை மூல தனமாக்கி, அவர்களின் உழைப்பையும், பொருளையும் சுரண்டுவதோடு, தலையில் தேங்காய் உடைத்து காயப்படுத்துதல் மற்றும் பெண் களை சாட்டையால் அடித்து துன்புறுத்துவது போன்ற காட்டு விலங்காண்டித்தனங்கள் அரங்கேற்றப்பட்டு வருகின்றன. இவற்றுக்கெல்லாம் ஒரே தீர்வு மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டமியற்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டியதேயாகும்.


No comments:

Post a Comment