திருக்குறள் பிரெய்லி புத்தகமாக வெளியீடு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 21, 2022

திருக்குறள் பிரெய்லி புத்தகமாக வெளியீடு: தமிழ்நாடு அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு

மதுரை, அக்.21 திருக்குறளை பிரெய்லி (பார்வைக் குறை பாடுள்ளவர்கள் பயன்படுத்தும்) புத்தகமாக வெளியிடுவ தற்காக அரசுக்கு மதுரை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்தது.   மதுரையை சேர்ந்த வழக்குரைஞர் ராம் குமார், மதுரை உயர்நீதி மன்றக்கிளையில் தாக்கல் செய்த மனுவில், பார்வையற்ற மாற் றுத்திறனாளிகள் படிப்பதற்கு வசதியாக, தமிழ்-ஆங்கில மொழிகளில் பிரெய்லி முறையில் திருக்குறளை வெளியிட உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கை நீதிபதிகள் மகாதேவன், சத்திய நாராயண பிரசாத் ஆகியோர் விசாரித்தனர். அப்போது அரசு வழக்குரைஞர் திலக்குமார் ஆஜராகி, செம் மொழி தமிழாய்வு நிறு வனத்தில் தொல் காப்பியம், சிலப்பதி காரம், மணிமேகலை உள்ளிட்ட 45 சங்க கால இலக்கிய நூல்கள் பிரெய்லி முறையில் அச்சிடப்பட்டு இலவசமாக வழங்கப்படுகின்றன. பிரெய்லி முறையில் திருக்குறள் புத்தகத்தை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் உரு வாக்கும் பணி 75 சதவீதம் முடிந்து விட்டது. பணிகள் முடிந்ததும் இலவசமாக வழங்கப்படும் என்றார்.   விசாரணை முடிவில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு வருமாறு:- 

திருக்குறள் புத்தகத்தை பிரெய்லி முறையில் வெளியிடுவதற்கு தமிழ்நாடு அரசு நடவ டிக்கை எடுத்து வருவதால், இந்த வழக்கில் மேற்கொண்டு எந்த உத்தரவும் பிறப்பிக்கத் தேவையில்லை. அதே நேரம், பிரெய்லி முறையிலான திருக்குறளும், சங்க இலக்கிய நூல்களும் தாராளமாக கிடைக்கும் வகையில் உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான் பார்வைத்திறன் அற்ற மாற்றுத் திறனாளிகள், இந்த மண்ணின் பெருமை யையும், கலாசாரத்தையும் அனுபவிக்க முடியும். மனுதாரர் செம் மொழி தமிழாய்வு மய்யத்தை அணுகி பிரெய்லி திருக்குறள் புத்தகத்தை பெற் றுக் கொள்ளலாம். சங்க இலக்கியங்களை பிரெய்லி புத்தக மாக்கி அறிவையும், இனிமையை யும் பெற நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசு மற்றும் செம் மொழி தமிழாய்வு நிறுவனத் தின் பணியை இந்த நீதிமன்றம் பாராட்டு கிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்களது உத்தரவில் கூறியுள்ளனர்.


No comments:

Post a Comment