காந்தியார் கொலையும், காமராசர் கொலை முயற்சியும் - ஓர் ஒற்றுமை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, October 8, 2022

காந்தியார் கொலையும், காமராசர் கொலை முயற்சியும் - ஓர் ஒற்றுமை

 1.11.1966இல் கல்லக்குறிச்சியில் காமராசரது உறுதி வாய்ந்த சூளுரை பார்ப்பன - பணக்காரக் கும்பலுக்கு அதிர்வேட்டுபோல் இருந்தமையால் நீண்ட நாள் திட்டமாக அவர்கள் நினைத்ததை 7.11.1966இல் நடத்தினர். இவரது உயிரைக் குறிவைத்த அதே "கோட்சே  கும்பல்" தான் முன்பு காந்தியார் உயிரையும் குடித்தது.1948 ஜனவரி 30 அன்று காந்தியார் நாதூராம் விநாயகக் கோட்சே என்ற மராத்திப் பார்ப்பனனால். (அவன் ஆர்.எஸ்.எஸ். இந்துமகா சபை போன்ற பார்ப்பன ஸ்தாபனங்களைச் சேர்ந்தவன்) கொல்லப்பட்டார்.

"மதச்சார்பற்ற அரசாங்கம் இந்து மதக் கோவில்களுக்கு வரிப்பணத்தைச் செலவழிப்பதை என்னால் ஒருபோதும் ஒப்புக்கொள்ள முடியாது" என்று தமது பழைய போக்கை மாற்றிப் புதிய கண்ணோட்டத்திற்கு வந்ததுபோல் 1948 ஜனவரியில் மூன்றாவது வாரத்தில் தமது ஏட்டில் எழுதினார். அதற்காகவே, ஒருவார காலத்திற்குள் பறிக்கப்பட்டது. காமராசர் கொலை முயற்சிகளும், அதே அவர் உயிர் முறையைப் பிரதிபலிக்கிறது என்பதைக் கூர்ந்து கவனிக்கும் எவரும் உணரக்கூடும்.

No comments:

Post a Comment