தி.மு.க. சார்பில் நாடெங்கும் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு பொதுக் கூட்டங்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

தி.மு.க. சார்பில் நாடெங்கும் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு பொதுக் கூட்டங்கள்

சென்னை, அக்.28 தமிழ்நாடு முழுவதும் நவ.4இல் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நடைபெறும் என்று திமுக அறிவித்துள்ளது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையிலான அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு, ஒன்றியப் பல்கலைக்கழகங்கள் உட்பட அனைத்து தொழில்நுட்ப அல்லது தொழில்நுட்பம் அல்லாத கல்வி நிறுவனங்களிலும் பயிற்று மொழி கட்டாயமாக ஹிந்தியாக இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது.  

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய அரசின் கல்வி நிறுவனங்களான அய்அய்.டி, அய்.அய்.எம், எய்ம்ஸ் மற்றும் ஒன்றிய பல்கலைக்கழகங்களில் ஆங்கிலத்திற்கு பதில் ஹிந்தி மொழியே பயிற்று மொழியாக இருக்க வேண்டும், இளைஞர்களின் வேலை வாய்ப்பில், கட்டாயத் தாள்களில் ஆங்கிலத்தை நீக்கி விட்டு, ஹிந்தியை மட்டுமே முதன்மைப்படுத்த வேண்டும் என ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான குழுவால் பரிந்துரைக் கப்பட்டதாக குற்றம்சாட்டினார்.

இதனிடையே பாஜக சார்பாக திமுக அரசு தாய்மொழிக்கு முடிவுரை எழுத முயற்சிப்பதாகக் கூறி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப் பட்டது. இந்த நிலையில் ஹிந்தி திணிப்பை எதிர்த்து பொதுக் கூட்டங்கள் நடத்தத் திமுக திட்ட மிட்டுள்ளது. 

இதுகுறித்து திமுக தரப்பில் நவ.4இல் தமிழ்நாடு முழுவதும் ஹிந்தித் திணிப்பு எதிர்ப்பு தீர்மான விளக்க பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து திமுக தரப்பில், பெரம் பலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத் தில் முதலமைச்சர் ஸ்டாலினும் உரை யாற்ற உள்ளதாகவும் அறிவிக்கப்பட் டுள்ளது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறை வேற்றப்பட்ட தீர்மானத்தை மக்களி டையே விளக்கும் வகையில் நடைபெற உள்ளது. அதேபோல் அலுவல் மொழி தொடர்பான நாடாளுமன்றக் குழு அறிக்கையை ஏற்கக் கூடாது என்று ஒன்றிய அரசை வலியுறுத்தப்படவும் உள்ளது.ஹிந்தி திணிப்பு விவகாரத்தில் திமுக ஆர்ப்பாட்டம் நடத்தியதற்குப் போட்டியாக பாஜகவினர், திமுக அரசு தமிழை புறக்கணிப்பதாக பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதுமட்டு மல்லாமல் தாய்மொழிக்கு முடிவுரை எழுத திமுக முயற்சிப்பதாக ஆர்ப் பாட்டமும் நடத்தியுள்ளனர். இந்த நிலையில் பாஜகவுக்கு எதிராக மீண்டும் ஹிந்தி திணிப்பு எதிர்ப்பு தீர்மான பொதுக்கூட்டம் அறிவிக்கப்பட் டுள்ளது தி.மு.க.வினரிடையே உற்சா கத்தை ஏற்படுத்தியுள்ளது.


No comments:

Post a Comment