திராவிடர் கழகத்தின் முதல் பொருளாளர் பழையகோட்டை இளைய பட்டக்காரர் தளபதி ந.அர்ச்சுனன் நூற்றாண்டு தொடக்கவிழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 16, 2022

திராவிடர் கழகத்தின் முதல் பொருளாளர் பழையகோட்டை இளைய பட்டக்காரர் தளபதி ந.அர்ச்சுனன் நூற்றாண்டு தொடக்கவிழா

தளபதி ந.அர்ச்சுனன் அவர்களின் பணியை இந்தப் பகுதி 

கிராமப்புற மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்: தமிழர் தலைவர்

அன்று ஆடு, மாடு மேய்த்தவர்களைப் படிக்க வைத்தது திராவிடம்: கார்த்திகேய சிவசேனாபதி

ஈரோடு, அக்.16 சுயமரியாதைச் சுடரொளி, பழையகோட்டை இளைய பட்டக்காரரும், திராவிடர் கழகத்தின் முதல் பொருளாளருமான தளபதி ந .அர்ச்சுனன் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழா 14.10.2022 ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு ஈரோடு பெரியார் மன்றத்தில் எழுச்சியோடு நடைபெற்றது. 



நூல் வெளியீடு

 ‘‘நூற்றாண்டு விழா நாயகர் பழையகோட்டை தளபதி ந.அர்ச் சுனன் - திராவிடர் கழக முதல் பொருளாளர்'' என்ற நூலினை பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவர் நூற் றாண்டை கடந்த பொத்தனூர் க.சண்முகம் வெளியிட, தளபதி அர்ச்சுனன் அவர்களின் குடும்பத் தார் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பெற்றுக் கொண்டனர். தளபதி அவர்களின் பேரன் சி.நவீன் (மன்றாடியார்) 200 நூல்களையும், நம்பியூர் ஜவகர் 100 நூல்களையும், மேலும் வருகை தந்தோர் 50 நூல்கள் தொகுப் பையும் தமிழர் தலைவரிடம் பெற்றுக்கொண்டனர்.


தமிழர் தலைவர் ஆசிரியர்

தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் கள் தளபதி ந.அர்ச்சுனன் அவர்களின் படத்தைத் திறந்துவைத்து சிறப்புரையாற்றினார். 

அவரது சிறப்புரையில்,‘‘தந்தைபெரியாரின் நம்பிக்கைக்குரிய கழகத்தின்முதல் பொருளாளர் நம்முடைய தளபதி ந.அர்ச்சுனன் அவர்கள், சமூக மாற்றத்தை உருவாக்க வேண்டும் என்று இளம் வயதில் முடிவெடுத்து தந்தை பெரியார் தலைமையில் களப்பணியாற்றியவர். தளபதி அர்ச்சுனன் அவர்களின் நூற்றாண்டு தொடக்க விழாவில் அவருடைய பணியை, அவருடைய கொள்கையை கிராமப்புற மக்களிடம் எடுத்துச் செல்வோம். ஒரு லட்சம் ஏக்கர் நிலபுலன்களுடன் வாழ்ந்த மிகப்பெரிய செல்வந்தர். தந்தை பெரியா ருடன் இணைந்து பொதுவாழ்க்கைக்கு வந்தவர். தந்தை பெரியாரின் கொள்கையிலே நடை போட்டு, மதுரையில் நடைபெற்ற கருப்புச் சட்டை மாநாடு போன்ற இயக்க நிகழ்வுகளுக்கு முழுமூச்சோடு முன்னின்று பாடுபட்டவர்'' என அவருடைய கொள்கை உறுதியை எடுத்துக் கூறினார்.

பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தின் தலைவர் நூற்றாண்டு விழா கண்ட பொத் தனூர் க.சண்முகம் தலைமை தாங்கி உரையாற் றினார். முன்னதாக விழாநாயகர் தளபதி ந.அர்ச் சுனன் அவர்களின் மகன் வழிப் பேரன் சி.நவீன் (மன்றாடியார்) அனைவரையும் வரவேற்றுப் பேசினார். ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப் பினரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி உறுப்பின ருமான இ.திருமகன் ஈ.வெ.ரா. வாழ்த்துரையில் "எங்கள் குடும்பத்தோடு மிகவும் நெருக்கமாக இருந்த குடும்பம் பழையகோட்டை தளபதி அர்ச்சுனன் அவர்களது குடும்பம் என்பதை பழைய  "குடிஅரசு" வழியாகத் தெரிந்து கொண் டேன் அவரது பேச்சும், செயலும் அதில் உள்ளது. அதை மற்றவர்களுக்கு எடுத்துச் செல்வோம் என்று தமது உரையில் குறிப்பிட்டார். 

அந்தியூர் ப.செல்வராஜ்

தி.மு.கவின் துணைப் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான அந்தியூர் ப.செல்வராஜ் அவர்கள் தமது வாழ்த்துரையில் ‘‘சமத்துவ சமுதாயம் உருவாக்க தந்தைபெரியார் தலைமையில் பணிபுரிந்த பழையகோட்டை இளைய பட்டக்காரர் தளபதி அர்ச்சுனன் அவர்களின் பணியை தொடர்ந்து செய்வோம்'' என்றார். 

அ.கணேசமூர்த்தி

ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினரும் ம.தி. மு.க.வின் பொருளாளருமான அ.கணேசமூர்த்தி தமது வாழ்த்துரையில்‘‘80, 90 ஆண்டுகளுக்கு முன்பு தந்தை பெரியார் தலைமையில் பண் பாட்டுப் படையெடுப்பை எதிர்த்துப் போராடி னார் தளபதி அர்ச்சுனன். இன்று ஊர்ப்புற கோவில்களிலெல்லாம் சமஸ்கிருதமாகி வரு கிறது அதனை தடுத்துப் பண்பாட்டுப் படை யெடுப்பை முறியடிக்க அவரது நூற்றாண்டு தொடக்க விழாவில் அனைவரும் உறுதி ஏற்போம்" என்றார். 

கார்த்திகேய சிவசேனாபதி

தொடக்க உரையாற்றிய தி.மு.க சுற்றுச்சூழல் அணியின் மாநில செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி தமது  உரையில், ‘‘தந்தை பெரியார் தலைமையில் அனைவருக்கும் கல்வி, அனை வருக்கும் வேலைவாய்ப்பு என்ற சமத்துவ சமு தாயம் உருவாக்க களத்தில் நின்று போராடியவர்  நம்முடைய தளபதி அர்ச்சுனன் அவர்கள். படிக்காதவர்களைப் படித்துப் பட்டம் பெற, வேலை வாய்ப்புப் பெற  வைத்திருக்கிறது அவர் கொண்ட கொள்கை. அதற்கு நேர் எதிரான கொள்கை கொண்டவர்கள் இன்று படிப்பையும், வேலைவாய்ப்பு உரிமையையும் பறிக்க முயல் கிறார்கள். அன்று ஆடு மேய்த்தவர்களைப் படிக்க வைத்தது திராவிடம். படித்தவர்களை இன்றைக்கு ஆடு மேய்க்க வைப்பது சனாதனம். அதனை எதிர்கொள்ள தளபதி ந.அர்ச்சுனன் செய்த களப்பணியை தொடர்ந்து செய்வோம்'' என்றார். 

இந்த இனிய நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி மேயர் திருமதி நாகரத்தினம், ஈரோடு சமூகநீதிக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கண. குறிஞ்சி, பேரா.ப.காளிமுத்து ஆகியோர் கருத் துரை வழங்கினார்கள். 

இந்நிகழ்ச்சியை மாநில அமைப்புச் செய லாளர் ஈரோடு த.சண்முகம் ஒருங்கிணைத்தார். 

இறுதியாக மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு நன்றியுரையாற்ற கூட்டம் இனிமையாக நிறைவடைந்தது. 

வந்திருந்த விருந்தினர்களுக்குக்கும், தளபதி ந.அர்ச்சுனன் குடும்பத்தாருக்கும் கழகத்தின் சார்பாக சிறப்பு செய்யப்பட்டது திராவிடப் பேரவை தலைவர் பா.மாசிலாமணி  அனை வருக்கும் பயனாடை அணிவித்தார். மாநகர தி.மு.க செயலாளர் மு.சுப்பிரமணியம், பெரி யாரியல் சிந்தனையாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன், ஈரோடு வடக்கு மாவட்ட சுற்றுச்சூழல் அணி தி.மு.க அமைப்பாளர் கே.கே.செல்வம், மண்டல தலைவர் இரா.நற்குணன், மாவட்ட செயலாளர், கோவை மண்டல செயலாளர் சிற்றரசு மா.மணிமாறன், கோபி மாவட்ட தலைவர் ந.சிவலிங்கம், செயலாளர் வழக்குரைஞர் மு.சென் னியப்பன், கோபி. சீனிவாசன், யோகானந்தம், பொதுக்குழு உறுப்பினர்கள் கோ.பாலகிருட் டிணன், கார்த்திக்ராம்கண், செ.பிரகாசன், 

தி. இ.த.பேரவை தமிழ்க்குமரன்.மாவட்ட தொழிற் சங்க செயலாளர் தே.காமராஜ், மாநகர செயலாளர் வீ.தேவராஜ், மாவட்ட இளைஞரணி தலைவர் அச்சூரியா, செயலாளர் ந.மோகன்ராஜ், அமைப் பாளர் சசிதரன், கோ.திருநாவுகரசு, பி.என்.எம்.பெரியசாமி, மண்டல இளைஞரணி அமைப் பாளர் வெற்றிவேல், ஜெபராஜ் செல்லத்துரை, தமிழ்ச்செல்வன், கு.ரவிக்குமார், கி.பிரபு, டாக்டர் சக்திவேல், சி.கிருட்டிணசாமி, ப.சத்தியமூர்த்தி, ந.கிருட்டிணமூர்த்தி, கனிமொழி நடராஜன், நாமக்கல் மாவட்ட தலைவர் குமார், சரவணன், பள்ளிபாளையம் பொன்னுசாமி, கோபி. ப.க. தமிழ்ச் செல்வி, பாட்டுசாமி, பொன்முகிலன், தி.மு.க கவுன்சிலர் ராமச்சந்திரன், ம.தி.மு.க குணசேகரன், சாதிக், சிவகிரி  இளஞ்செழியன் (தி.மு.க.), தி.மு.க. பேச்சாளர் இளைய கோபால், ஆகிய முக்கிய பிரமுகர்கள், மனோ (மன்றாடி யார்) டாக்டர் சிவக்குமார், கிருத்திக சிவக்குமார், இந்திர ராணி சின்னச்சாமி, செந்தில், அகல்யா ரமேஷ், கவுரி தேவசேனாதிபதி ஆகிய தளபதி ந.அர்ச்சுனன் குடும்ப உறுப்பினர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவ்விழாவின்மூலம் மேற்கு மண்டலத்தில் ஒரு சிறப்புத்தாக்கம் ஏற் படுத்தப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment