யார்மீது காறித் துப்புகிறது ‘தினமலர்?' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 16, 2022

யார்மீது காறித் துப்புகிறது ‘தினமலர்?'

‘தினமலர்' (15.10.2022, பக்கம் 6) - ‘இது உங்கள் இடத்தில்' ஒரு கடிதம்.

தலைப்பு: ‘‘உங்கள் முகத்தில் நீங்கள் துப்பாதீர்கள்!''

இயக்குநர் வெற்றிமாறன் ‘பொன்னியின் செல்வன்' படத்தில் சோழர்கள் ஹிந்து என்று காட்டப்பட்டுள்ளதாகக் குற்றம் கூறினார்.

அதற்குத் ‘தினமலரின்' கடிதம் என்ன கூறுகிறது?

‘‘‘ஆங்கிலேயர்கள்தான் நமக்கு ஹிந்து என்று பெயரிட்டனர்'' என்றும் சில அதிமேதாவிகள் தெரிவித்துள்ளனர். இதைவிடக் கேவலம் வேறு எங்காவது உண்டா?'' என்று கேள்வி கேட்கிறது ‘தினமலர்' கடிதம்.

இதற்குப்பதில் சொன்னால், ‘தினமலர்' கூட்டம் அலறி அடித்து ஓடிவிடும்.

‘ஆங்கிலேயன்தான் ஹிந்து என்று பெயரிட்டான்' என்று சொன்னவர் யார்?

‘‘நமக்குள் சைவர்கள்,  வைஷ்ணவர்கள் என்று வேறாகச் சொல்லிக் கொண்டிருந்தாலும் வெள்ளைக்காரன் நமக்கு வைத்த பெயர் (ஹிந்துக்கள் என்று பொதுப் பெயர்) வைத்தானோ, நாம் பிழைத்தோம்.''

இதைச் சொன்னவர் யார் தெரியுமா? ‘தினமலர்' கூடாரத்தின் ஜெகத் குரு சங்கராச்சாரியார் ஸ்ரீலஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள்தான்.

(‘தெய்வத்தின் குரல்' முதல் பாகம் 267, 268).

இப்பொழுது ‘தினமலர்' கடிதத்தின் தலைப்புக்கு வாருங்கள், ‘‘உங்கள் முகத்தில் நீங்களே துப்பாதீர்கள்!''

யாரைச் சொல்லுகிறது ‘தினமலர்' புரிகிறதா?

No comments:

Post a Comment