ஓ, ‘தமிழ் இந்து'வே! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

ஓ, ‘தமிழ் இந்து'வே!

நேற்றைய (11.10.2022) ‘இந்து தமிழ்திசை' ஏட்டுத் தலையங்கத்தின் தலைப்பு ‘‘தீப்பொறி வார்த்தைகளுக்கு முற்றுப் புள்ளி வருமா?'' என்பதாகும்.

சந்தடி சாக்கில் கந்தப் பொடி தூவும் விஷம வேலையைச் செய்திருக்கிறது.

‘‘தி.மு.க.வினர் ஆங்காங்கே சர்ச்சைகளில் ஈடுபடுவது, ஆ.இராசா போன்றவர்கள் மதத் துவேஷம் பேசுவது போன்றவற்றை மனதில் வைத்து, தலைவராக இரண்டாம் முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்'' என்கிறது ‘இந்து தமிழ்திசை'.

ஆ.இராசா என்ன பேசினார்?

உண்மைக்கு மாறாக எதைப் பேசினார்?

‘‘ஹிந்து மதத்தின் வருணாசிரம அமைப்பு முறையில், மனுதர்ம அமைப்பில், பிறப்பின் அடிப்படையில் பிராமணன், சூத்திரன் என்று இருக்கலாமா? சூத்திரன் என்றால் தேவடியாள் மக்கள் என்று மனுதர்மம் கூறுகிறதா? இல்லையா?'' என்று பேசினார்.

இதில் எந்த இடத்தில் துவேஷமாகப் பேசினார் - இல்லாததைப் பேசினார்ஆ.இராசா?

பார்ப்பனர்களின் யோக்கியதை இந்த 2022 ஆம் ஆண்டிலும் எப்படி இருக்கிறது பார்த்தேளா? அவர்கள் நம்மை சூத்திரர்கள் என்று எழுதி வைப்பார்களாம்! மான, வெட்க, ரோஷத்தோடு அதனை ஆ.இராசா சுட்டிக்காட்டினால், அது துவேஷ உணர்வாம். அதைத்தான் முதலமைச்சர் மனதில் வைத்துப் பேசினாராம்.

அடிபட்டவன் அழக்கூடாது - அடித்தவனைப்பற்றிப் பேசக் கூடாது.

ஓ, தமிழ் இந்துவே, உன் பூணூல் புத்தி உன்னை விட்டுப் போகவே போகாதா?

No comments:

Post a Comment