மகேந்திரகிரி இஸ்ரோ மய்யத்தில் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 30, 2022

மகேந்திரகிரி இஸ்ரோ மய்யத்தில் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை

திருநெல்வேலி,அக்.30 பணகுடி அருகே மகேந்திரகிரி இஸ்ரோ மய்யத்தில் கிரையோஜெனிக் என்ஜின் பரிசோதனை வெற்றிகரமாக நடந்தது  நெல்லை மாவட்டம் பணகுடி அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி மகேந்திரகிரியில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மய்யம் அமைந்துள்ளது. இங்கு ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின்களின் சோதனை நடை பெறுகிறது. இங்கு ககன்யான் திட் டத்திற்காக அதாவது, விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டத்திற்கு ராக்கெட்டில் பயன்படுத்தப்படும் கிரையோஜெனிக் என்ஜின் பரி சோதனை பல்வேறு கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் மகேந்திரகிரி இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மய்யத்தில் கிரையோஜெனிக் என்ஜின் சி.20, இ11, எம்.கே.111 பரிசோதனை 28.10.2022 அன்று நடைபெற்றது. சுமார் 25 வினாடிகள் நீடித்த இந்த பரிசோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையானது மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மய்ய வளாக இயக்குநர் பத்ரி நாராயணமூர்த்தி மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் முன்னிலையில் நடைபெற்றது.

No comments:

Post a Comment