தசராவில் கொடும்பாவி எரிக்கப்படும் நேரத்தில் ராவணனை வழிபடும் அதிசய கிராம மக்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 10, 2022

தசராவில் கொடும்பாவி எரிக்கப்படும் நேரத்தில் ராவணனை வழிபடும் அதிசய கிராம மக்கள்

மும்பை, அக்.10- தசாரா தினத்தில் நாட் டின் பல பகுதிகளில் ராவணனின் கொடும்பாவி எரிக்கப்படுகிறது. அதே நாளில் மகாராட்டிரா மாநிலம் அகோலா மாவட்டத்தில் உள்ள சங்கோலா கிரா மத்தில் ராவணன் சிலைக்கு மக்கள் ‘ஆரத்தி' எடுத்து வழிபடுகின்றனர்.

இந்த கிராம மக்கள் அங்குள்ள ராவ ணன் சிலையை 300 ஆண்டுகளாக வழிபட்டு வருகிறார்கள். தசாரா அன்று. ராவணனின் கொடும்பாவி பல இடங் களிலும் எரிக்கப் படுகிறது. 

அன்றைய தினம் இந்த கிராமத்தில் உள்ள ராவணன் சிலைக்கு மக்கள் ‘ஆரத்தி' எடுத்து வழிபாடு செய்கிறார் கள். ஆண்டாண்டு காலம் இது பின் பற்றப்பட்டு வருகிறது. நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் ஏராளமான மக்கள் இந்த கிராமத்துக்கு வந்து ராவ ணன் சிலையை வழிபடுகிறார்கள்.

‘‘ராவணன் சீதையை அரசியல் கார ணத் துக்காகவே கடத்தினான். ஆனால். சீதையின் மானத்துக்கு பங்கம் ஏற்படா மல் காப்பாற்றினான், ராவணன் புத்தி சாலி: தூய எண்ணங்களைக் கொண்ட வன். இதனால்தான் மக்கள் ராவணனை வழிபடுகின்றனர்" என ராவணன் கோயில் அர்ச்சகர் ஹரிபாபு ஹடோலே கூறினார். 

இதனால்தான் மக்கள் ராவணனை வழிபடுவதாகவும் அவர் தெரிவித்தார். 

சங்கோலா கிராம மக்கள் கூறுகை யில், "ராவணனின் ‘ஆசி'யால்தான் கிரா மத்தில் எல்லோருக்கும் வேலை கிடைத் துள்ளது. அமைதி நிலவுகிறது. எல் லோரும் மனத் திருப்தியுடனும் அமை தியாகவும் வாழ்கிறார்கள்" என்றனர்.

No comments:

Post a Comment