கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 27, 2022

கலந்துரையாடல் கூட்டம்

 தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாளில் 

அதிக அளவில் ‘விடுதலை' சந்தா வழங்க 

ஈரோடு கழக மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு

ஈரோடு, அக்.27 ஈரோடுமாவட்ட திராவிடர் கழகப் பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் 26.10.2022 புதன் காலை 10.30 மணியளவில் ஈரோடு பெரியார் மன்றத்தில் நடைபெற்றது.

கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக் குமார், மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு த.சண்முகம் ஆகியோர் ‘விடுதலை' சந்தா சேர்ப்பில் இலகுவாக இலக்கை அடைவது எப்படி, கிராமப் பிரச்சாரம், அமைப்பு பணி கள் குறித்தும் விளக்கமாக உரையாற்றினர். மாவட்டத் தலைவர் கு.சிற்றரசு தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் மா.மணி மாறன் வரவேற்புரையுடன் தொடங்கிய கூட் டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.

தீர்மானங்கள்

1)  08.10.2022 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக தலைமைச் செயற்குழு கூட்ட தீர்மானங்களை ஏற்று செயல்படுத்துவது என தீர்மானிக்கப் படுகிறது.

2) தந்தை பெரியார் பிறந்த மண்ணில் மதவெறியைத் தூண்டி தமிழ்நாட்டை அமளிக் காடாக்க துடிக்கும் ஆர்.எஸ்.எஸ். திட்டத்தினை முறியடிக்கும் வகையில், மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் எழுதிய ‘‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை'' நூல்களை விளக்கி தெருமுனைக் கூட்டம் நடத்துவது என முடிவுசெய்யப் படுகிறது.

3) தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு (டிசம்பர்-2) பிறந்த நாள் விழாவை சுயமரியாதை நாள் விழாவாக எழுச்சியுடன் கொண்டாடுவது எனவும், பிறந்த நாள் விழாவை விளக்கி சுவரெழுத்து விளம்பரங்கள் செய்ய தீர்மானிக்கப்பட்டது.

டிசம்பர் 2 அன்று காலை சென்னை பெரியார் திடலில் கழகத் தோழர்களை தமிழர் தலைவர் ஆசிரியர் சந்திக்கும் நிகழ்ச்சியிலும், அன்று மாலை சென்னை கலைவாணர் அரங் கில் முதலமைச்சர் மற்றும் அனைத்துக் கட்சி தலைவர்கள் பங்கேற்கும் ஆசிரியர் அவர்களின் 90 ஆவது ஆண்டு பிறந்த நாள் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்கவும், மேலும் டிசம்பர் 17 திருப்பத்தூரில் நடைபெறும் முப்பெரும் விழாவிலும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்புப்பது என முடிவு செய்யப்பட்டது.

4) ஈரோடு கழக மாவட்டத்தில் உள்ள ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பவானி, பெருந்துறை, மொடக்குறிச்சி ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளில் உள்ள ஆதரவாளர்கள், தோழமை இயக்கங்களின் சட்டமன்ற, உள்ளாட்சி பிரதிநிதிகள் என அனைத்துத் தரப்பினரையும் சந்தித்து ‘விடுதலை' சந்தா திரட்டி தமிழர் தலைவர் ஆசிரியர் பிறந்த நாள் பரிசாக (டிசம்பர்  2) வழங்கி மகிழ்வது என தீர்மானிக்கப்படுகிறது.

கூட்டத்தில், பேராசிரியர் ப.காளிமுத்து, ஈரோடு மாநகரச் செயலாளர் வீ.தேவராஜ், ஈரோடு மாவட்ட தொழிற்சங்க செய லாளர் தே. காமராஜ், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ச.சசிதரன், கோ.திருநாவுக்கரசு, நாமக்கல் மாவட்ட துணைச் செயலாளர் பள்ளிப்பாளையம்.பொன்னுசாமி, ப.சத்தியமூர்த்தி, தமிழ்செல்வன், பெருந்துறை ஒன்றிய இளைஞரணி செயலாளர் ம.அன்புபிரசாத், மோகன்குமார், ஈரோடு மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் பி.என்.எம்.பெரியசாமி, ஒரிச்சேரி தே.தேவேந்திரன், பெருந்துறை பிரபு ஆகியோர் கலந்து கொண்டனர். 

மாவட்ட இளைஞரணிச் செயலாளர் நா.மோகன்ராஜ் நன்றியுரையுடன் கலந்துரையாடல் கூட்டம் நிறைவு பெற்றது.


No comments:

Post a Comment