ஹிந்தியைத் திணித்தால் - டில்லியிலும் போராட்டம் : தி.மு.க. அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 16, 2022

ஹிந்தியைத் திணித்தால் - டில்லியிலும் போராட்டம் : தி.மு.க. அறிவிப்பு

சென்னை,அக்.16- ஒன்றிய அரசின் ஹிந்தி திணிப்பைக் கண்டித்து திமுக இளைஞரணி,  மாணவரணி சார்பில் நேற்று (15.10.2022) தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய அரசு பிறப்பித்துள்ள ஹிந்தி திணிப்பு உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

சென்னை வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞர் அணி செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமாகிய உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய கண்டன உரையில் "திமுகவின் முக்கியமான கொள்கை ஹிந்தி எதிர்ப்பு, ஹிந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம். அதிலிருந்து நாங்கள் சற்றும் விலக மாட்டோம், விட்டுக் கொடுக்கமாட் டோம். அது எங்கள் மாநில உரிமை. இப்போது வெறும் ஆர்ப்பாட்டம்தான் நடத்தியிருக்கிறோம். இதை போராட் டமாக மாற்றுவதா வேண்டாமா என்பது உங்கள் கையில்தான் உள்ளது" என்று குறிப்பிட்டார்.

ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், கட்சியின் இளைஞர் அணி செயலாலர் உதயநிதி ஸ்டாலின், மாணவர் அணிச் செயலாளர் சி.வி.எம்.பி. எழிலரசன் ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆர்ப் பாட்டத்தில் கோரிக்கைகளை வலி யுறுத்தி கண்டன முழுக்கங்கள் எழுப் பப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டத்தில், இளைஞர் அணி மற்றும் மாணவர் அணிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக் கானோர் கலந்து கொண்டனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், "மத்திய என்பதை ஒன்றிய என்று கூறினால்தான் அவர்களுக்கு கோபம் வரும், அதனால் அப்படியே சொல்வோம். ஒன்றிய பிரதமர் மோடி அவர்களே, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களே, நீங்கள் நினைத்துக் கொண் டிருப்பதுபோல, முன்புபோல இங்கு நடந்துகொண்டிருப்பது அதிமுக ஆட்சி இல்லை. இப்போது முதலமைச் சராக இருப்பவர், எடப்பாடி பழனி சாமியோ, ஓ.பன்னீர்செல்வமோ அல்ல. தமிழ்நாட்டை ஆண்டு கொண்டிருப் பவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்.

எங்கள் மாநில உரிமை

இப்போது வெறும் ஆர்ப்பாட்டம் தான் நடத்தியிருக்கிறோம். இதை போராட்டமாக மாற்றுவதா வேண் டாமா என்பது உங்கள் கையில்தான் உள்ளது. திமுகவின் முக்கியமான கொள்கை ஹிந்தி எதிர்ப்பு, ஹிந்தி திணிப்பை எப்போதும் எதிர்ப்போம். அதிலிருந்து நாங்கள் சற்றும் விலகமாட்டோம், விட்டுக் கொடுக்க மாட்டோம். அது எங்கள் மாநில உரிமை.

நாங்கள் எதிர்க்கட்சியாக இருந் தாலும் சரி, ஆளுங்கட்சியாக இருந் தாலும் சரி எங்கள் தலைவர் அதனை விட்டுக்கொடுக்கமாட்டார். காரணம் நாங்கள் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில் வந்தவர்கள். ஹிந்தி திணிப்பை எதிர்த்து ஆட்சியில் அமர்ந்தது திமுக.

"ஹிந்தி தெரியாது போடா"

தற்போது ஆளுங்கட்சியாக இருப்பதால், ஒருநாள் ஆர்ப்பாட்டம் நடத்தினோம், கூடினோம், கலைந்து சென்றோம் என்று கண்டிப்பாக இருக்கமாட்டோம். நீங்கள் எந்த வழியில் ஹிந்தி திணிப்பை தமிழ்நாட்டிற்குள் கொண்டு வந்தாலும், நாங்கள் உங்களிடம் சொல்லப்போகிற ஒரே வார்த்தை "ஹிந்தி தெரியாது போடா". அதை எப்போதுமே சொல்லிக் கொண்டேயிருப்போம்.

3 மொழிப்போர்களை சந்தித்தது திமுக. அதில் இரண்டை நடத்தியது திமுகவின் மாணவர் அணிதான். தற்போது மாணவர் அணியுடன் இளைஞர் அணியும் சேர்ந்து இந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் களமிறங்கியிருக்கிறோம். இந்த இரு அணிகளும் இணைந்து கடந்த 4 ஆண்டுகளில் எடுத்த அனைத்து போராட்டங்களிலும் வெற்றி பெற்றி ருக்கிறோம். இந்த போராட்டத்திலும் எங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

பாசிச பாஜகவை விரட்டியடிப்பார்கள்

முதல்கட்டப் போராட்டம் கலைஞர் அவர்கள் கட்டிக் கொடுத்த வள்ளுவர் கோட்டத்தில் நடத்தி யிருக்கிறோம். நீங்கள் ஹிந்தி திணிப்பை கையில் எடுத்தால், அடுத்தக்கட்ட போராட்டம் தமிழ்நாட்டில் மட்டும் நடக்காது, தலைவரின் ஆணையைப் பெற்று டில்லியில் வந்து போராட்டம் நடத்துவோம். தமிழ்நாட்டு மக்கள் என்றும் உங்களுடைய ஹிந்தி திணிப்பை ஏற்கமாட்டார்கள்.  2019 தேர்தலில் பாசிச பாஜகவை எப்படி ஓடஓட விரட்டி அடித்தோமோ, மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன் கூறியதைப் போல, 2024 தேர்தல் பிரச்சாரத்துக்கு இது சிறந்த துவக்கமாக  இருக்கும். 2019 போலவே 2024 தேர் தலிலும் பாசிச பாஜகவை தமிழ்நாட்டு மக்கள் விரட்டியடிப்பார்கள்" என்று அவர் கூறினார்.


No comments:

Post a Comment