கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 20, 2022

கல்வியை பொதுப்பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்த வழக்கு

 சென்னை, அக்.20  கல்வியை பொதுப் பட்டியலுக்கு மாற்றி ஒன்றிய அரசு கொண்டு வந்த அரசமைப்பு சட்டத் திருத்தத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் அறம் செய்ய விரும்பு என்ற தொண்டு நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசமைப்பு சட்டப் பிரச்சினை தொடர்பான இந்த வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வுதான் விசாரிக்க வேண்டும் என்று உத்தர விட்டது. 

இந்த உத்தரவின்படி, நீதிபதிகள் ஆர்.மகாதேவன், எம்.சுந்தர், செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகியோர் கொண்ட முழு அமர்வு அமைக்கப்பட்டது. இந்த முழு அமர்வு முன்பு இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர், தமிழ்நாடு அரசு மற்றும் ஒன்றிய அரசு தரப்பில், இந்த வழக்கின் இறுதி விசாரணைக்கு முன்பு வழக்கு ஆவணங்களை பகிர்ந்துகொள்ள வேண்டியுள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. அந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், விசாரணையை நவம்பர் 7ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர். 


No comments:

Post a Comment