மாண்புமிகு முதலமைச்சருக்கு பணிவான வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 20, 2022

மாண்புமிகு முதலமைச்சருக்கு பணிவான வேண்டுகோள்

சில ஆண்டுகட்கு முன் ஒரு இளம்பெண் காதலிக்க மறுத்ததற்காக பட்டப்பகலில் ரயில் நிலையத்தில்  ஓர் இளைஞரால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட  கொடுமையைக் கண்டோம்.

சில நாட்களுக்குமுன் இதுபோன்றே காதலிக்க மறுத்த ஒரு மாணவி ஓர் இளைஞரால் ஓடும் ரயில் முன் பிடித்துத்தள்ளப்பட்டு கொலை செய்யப் பட்டார் என்பதையறிந்து  துயருற்றோம்.

இதுபோன்ற நிகழ்வுகளுக்கு என்ன காரணம்? காதல் என்பது காலங்காலமாக தமிழர் வாழ்வின் ஓர் அங்கமாக இருந்தாலும். கண்டதும் காதல் என்பது சங்ககாலம் முதலே இருந்துள்ளது என்பதை ”யாயும் ஞாயும் யாராகியரோ? எந்தையும் நுந்தையும் எம்முறைக்கேளிர்?”என்ற பாடல் வரிகள் புலப்படுத்தினாலும் காலத்திற்கு ஏற்ப அது மாற்றம் பெற்றாக வேண்டும். 

இதனைக்கருதியே ஆணாதிக்கம் நிறைந்த இச்சமுதாயத்தில் பெண்கள் உரிமையோடு வாழவேண்டும் என்ற எண்ணத்தை அன்றைக்கே கொண்டதால் பெண்களை அடிமைப்படுத்த சமுதாயத்தில் பயன்படுத்திய கற்பு, காதல், விதவை மறுமணத்தடை, விபச்சாரம், பிள்ளைப்பேறு போன் றவற்றை பற்றிய புரட்சிகரமான கருத்துகளைத் தந்தை பெரியார் ”பெண் ஏன் அடிமையானாள்” என்ற நூல் தொகுப்பில் 1942-லேயே வெளிப் படுத்தியது இன்றைக்கும் இளைய தலைமுறைக்கு ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒன்றாகவும். சரியான பாதையை தேர்ந்தெடுத்துத் தரக்கூடிய வழி காட்டியாகவும் உள்ளது. 

எனவே  இன்றைக்கு குறிப்பாக  மாணவப் பருவத்தினர் அவற்றைத்தெரிந்து வாழ்வில் தெளிவு பெறவேண்டி மேல்நிலை மற்றும் கல்லூரி பாடத்திட்டத்தில் “பெண் ஏன் அடிமையானாள்" நூலின் கட்டுரைகளை சேர்த்திட தக்க நடவடிக்கை மேற்கொள்ள சமுதாய அக்கறையுள்ள அனைவரின் சார்பாக மிக்க பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

- ஞான. வள்ளுவன்

வைத்தீசுவரன்கோயில்.


No comments:

Post a Comment