சனாதனத்தைஆதரிப்பவர்களை எதிர்த்து போராட வேண்டும் : ப.சிதம்பரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 11, 2022

சனாதனத்தைஆதரிப்பவர்களை எதிர்த்து போராட வேண்டும் : ப.சிதம்பரம்

கோவை,அக்.11- கோவை மாவட்டம் சிவானந்தாகாலனி பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தலைமையில் மணிவிழா பொதுக்கூட்டம் நடைபெற் றது.  

75 ஆண்டு கால சுதந்திர தினம் கொண்டாடுகிறோம். ஆனால், முழு மையாக 130 கோடி மக்களுக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. பல பேர் பேசவும் எழுதவும், போராடவும் சுதந்திரம் இல்லை. உணவு, இருப்பிடம் போன்றவையிலும் சுதந்திரம் கிடைக்க வில்லை. பழங்குடியினர், சிறுபான்மையினருக்கு இன்னும் முழு சுதந்திரம் கிடைக்கவில்லை. அமெரிக்காவில் கருப்பின மக்கள் 200 ஆண்டுகளுக்கு மேலாக போராடி வருகின்றனர்.

நம்முடைய நாட்டில் என்னுடைய வாழ்நாளுக்குப் பிறகும் இந்த போராட்டம் இருக்கும். இந்தியா முழுவதும் விவாதம் நடைபெற்று வருகிறது. அதை இந்த மேடையில் தவிர்க்க முடியாது. மனுஸ்மிருதியை எதிர்ப்பதாக அம்பேத்கர் அடித்து சொன்னார். அமெரிக்கா, லண்டன் உள்ளிட்ட உலக அரங்கிலும் உடைத்து சொன்னவர் அம்பேத்கர். இந்தியாவில் இருக்கக் கூடிய ஹிந்து மதம் பல மாடி கட்டடம். ஆனால் ஒரு மாடியில் இருந்து இன்னொரு மாடிக்கு போக முடியாது. இதுபோன்ற வேறுபாடு எந்த மதத்திலும் கிடையாது.

இந்தியாவில் இருக்கும் மத பேதங்கள் போன்று எந்த நாட்டிலும் இல்லை. இதை உடைத்து எறிய வேண்டி தான் வாழ்நாள் முழுவதும் அம்பேத்கர் போராடினார். சனதா னத்தை ஆதரிப்பவர்களை எதிர்த்து போராட வேண்டும். அவர்கள் நமக் கான சவால். காந்தியார் சனாதனத்தை பேசுனதை நான் ஏற்றுக்கொள்ள வில்லை, அதை அம்பேத்கரும் ஏற்றுக்கொள்ளவில்லை. மனுஸ்மிருதி பற்றிய விவாதம் 80 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது.

அண்ணாமலைக்கும், திமுக இராசாவிற்கும் இடையே நடக்கும் விவாதம் மட்டும் இல்லை. எல்லா மனிதருக்கும் ஒரே மாதிரியான மதிப்பு இன்னும் இந்தியாவில் கிடைக்கவில்லை. அது கிடைக்கும் வரைக்கும் போராட் டம் தொடரும் என்றார். கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி பெரியார் உணவகத்தை எப்படி திறக்கலாம் என கலவரத்தை நடத்தியுள்ளனர். இளை ஞர்கள் பலர் காவிக் கொடியை தூக்கிக் கொண்டு சென்றதாக அறிந்தேன்.

உணவகத்தை அடித்து நொறுக்கியதை பார்த்து வேதனை அடைந்தேன். சனாதனத்தை ஏற்றுக் கொள்ளும் இளைஞர்களைப் பார்த்து பரிதாபப் படுகிறேன். இந்த மண் திராவிடமும், தேசியமும் கலந்த மண் இது. ஆதிக்க உணர்வுகளையும், ஆதிக்க சக்திகளையும் அழிக்க போராட வேண்டும்.

காந்தியாரை மதிக்கிறேன், ஆனால் சனாதன கருத்தை ஒருபோதும் ஏற்க மாட்டேன். ஏற்றத் தாழ்வைக் கடுமையாக எதிர்க்கிறேன். ஜாதி ஒழிய வேண்டும். தடையாகவும், சுவராகவும் சாதி உள்ளது. ஜாதி ஒழிந்தால் தான் சானாதனத்தை ஒழிக்க முடியும். சனா தனத்தை ஒழிக்கும் போராட்டத்தில் திருமாவின் தலைமையில் செல்லத் தயார்” என ப.சிதம்பரம் கூறினார்.

நிகழ்ச்சி தொடக்கத்தில் நிமிர்வு கலையகம் சார்பில் பறையிசை நடை பெற்றது. பொதுக்கூட்டத்தில் மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம் பரம், தமிழ்நாடு மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் செந் தில் பாலாஜி, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா , தமிழக வாழ் வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் ஆகியோர் பங்கேற்று சிறப்புரை ஆற் றினர். வி.சி.க-வினர் சார்பில், திருமாவள வனுக்கு அன்பளிப்பாக தங்க நாண யங்கள் வழங்கப்பட்டது.

No comments:

Post a Comment