மருத்துவத்துக்கான நோபல் பரிசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 5, 2022

மருத்துவத்துக்கான நோபல் பரிசு

ஸ்டாக்ஹோம், அக்.5- 2022ஆம் ஆண்டு மருத்துவத்துக்கான நோபல் பரிசு சுவீடனை சேர்ந்த விஞ்ஞானி ஸ்வாந்தே பாபோவிற்கு அறிவிக்கப் பட்டுள்ளது.

2022ஆம் ஆண்டிற்கான உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசை "அழிந்துபோன மனிதர்களின் மரபணுக்கள் மற்றும் மனித பரிணா மத்தின் மரபணுக்கள்” பற்றிய கண்டுபிடிப்பு களுக்காக சுவீடன் நாட்டின் விஞ்ஞானி ஸ்வாந்தே பாபோ வென்றுள்ளார்.

சுவீடனின் கரோலின்ஸ்கா இன்ஸ்டிடியூட்டின் நோபல் அசெம்பிளியால் வழங்கப்படும் இந்த பரிசு, விஞ்ஞான உலகில் மிகவும் மதிப்புமிக்க விருதாக கருதப்படுகிறது. இந்த விருதுடன் ஒரு தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் 10 மில்லியன் ஸ்வீடிஷ் க்நன்கள் (900,357 டாலர்) அதாவது இந்திய மதிப்பில் ரூ.7.33 கோடி ரொக்கம் அடங்கிய பரிசுகள் விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான இது முதல் நோபல் பரிசு இதுவாகும். இதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகளுக்கான நோபல் பரிசுகளும் அறிவிக்கப்படவுள்ளன.

நோபல் பரிசு பெற்ற உயிர் வேதியியலாளர் சுனே பெர்க்ஸ்ட்ரோமின் மகன்தான் இந்த ஸ்வாந்தே பாபோ. தொல்பொருள் மற்றும் பழங்கால எச்சங்களிலிருந்து டிஎன்ஏ வரிசைகளை ஆய்வு செய்ய அனுமதிக்கும் அணுகுமுறைகளை உருவாக்கிய பின்னர், மனித தோற்றம் பற்றிய ஆய்வினை அடுத்தகட்டத்திற்கு கொண்டுசென்ற பெருமைக்குரியவர் இவர். அழிந்துபோன மனிதர்களுக்கும் நவீன மனிதர்களுக்கும் இடையிலான தொடர்பை வெளிப்படுத்த முழு நியண்டர்டால் மரபணுவை வரிசைப்படுத்துவது இவரது முக்கிய சாதனைகளில் ஒன்றாகும்.

சைபீரியாவில் கண்டுபிடிக்கப்பட்ட 40,000 ஆண்டுகள் பழைமையான விரல் எலும்பின் துண்டுகளிலிருந்து டெனிசோவன்ஸ் என்று அழைக்கப்படும் முன்னர் அறியப்படாத மனித இனம் இருப்பதையும் இவர் வெளிச்சத்திற்கு கொண்டு வந்தார்.

சுவீடன் நாட்டின் ஸ்டாக்ஹோம் நகரில் 1955ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதி பிறந்த ஸ்வாந்தே பாபோ, ஜெர்மனி மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள இரண்டு முக்கிய நிறுவனங்களுக்கு தனது ஆராய்ச்சி பங்களிப்பை வழங்கி வருகிறார்.

No comments:

Post a Comment