ரயில் தனியார்வசம் தாரைவார்ப்பா? எஸ்.ஆர்.எம்.யூ. கண்ணையா கேள்வி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 13, 2022

ரயில் தனியார்வசம் தாரைவார்ப்பா? எஸ்.ஆர்.எம்.யூ. கண்ணையா கேள்வி

சென்னை,அக்.13- ஒன்றிய பா.ஜ.க. அரசு ரயில்வே துறையை  தனியார்மயமாக்குவதற்கு கண்டனம் தெரிவித்து, தெற்கு ரயில்வே மஸ்தூர் யூனியன் (எஸ்ஆர்எம்யூ) சார்பில் சென்னையில் நேற்று (12-_10_2022) பட்டினிப் போராட்டம் சங்கத்தின் பொதுச் செயலா ளர் கண்ணையா தலைமையில் நடை பெற்றது. துணை பொதுச் செயலாளர்கள் ஈஸ்வர் லால், பால் மாக்ஸ்வெல் ஜான்சன் உட்பட100-க்கும் மேற்பட்டோர் கருப் புடையுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர், செய்தியாளர்களிடம் கண் ணையா கூறியதாவது: நாடாளுமன்றத்தில் பிரதமரும், ரயில்வே அமைச்சரும் ரயில்வே துறையை தனியார்மயமாக்க கூடாது என்கின்றனர். ஆனால், நவீன மயமாக்குதல் என்ற பெயரில் ரயில்வே துறையை தனியார் மயமாக்கி மக்களை ஒன்றிய அரசுஏமாற்றி வருகிறது. 150 சுற்றுலாரயில்களை தனியா ருக்கு கொடுத்துள்ளனர். கோயம்புத்தூரில் ஒருரயிலை தனியார் நிறுவனம் எடுத்துள் ளது. இந்த ரயிலை அரசுஇயக்கினால் ரூ.28 லட்சம்தான் மக்களிடம் இருந்து வசூலிக்கப் படும் ஆனால், மக்களிடம் இருந்து தனியார் நிறுவனம் ரூ.44 லட்சம் வசூலிக்கிறது. 

தேசியமயமாக்கல் என்ற பெயரில் 150 ரயில்கள், 450 ரயில்நிலையங்களை தனியாருக்கு கொடுக்க ஒன்றிய அரசு முடிவு எடுத்துள்ளது. 200 ‘வந்தே பாரத்’ ரயில்கள் தயாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதற்கு முன்பு, இதே ‘வந்தே பாரத்’ ரயிலை நமது ரயில்வே தொழிலாளர்கள் தயாரித்தபோது, ரூ.98 கோடிதான் செலவானது. ஆனால், இப்போது அந்த பணியை தனியாரிடம் கொடுத்துள்ளனர், அவர்கள் அந்த ரயிலை தயாரித்துரூ.137 கோடிக்கு ரயில்வே அமைச்சகத்துக்கு விற்கப்போகின்றனர். சென்னைக்கு 5 முதல் 6 வந்தேபாரத் ரயில்கள் விரைவில் வரும்என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. இதில் சாதாரண பொது வகுப்பு பெட்டியோ, தூங்கும் வசதி கொண்ட பெட்டியோ கிடையாது. முழுவதும் குளிர்சாதனம் பொருத்திய தூங்கும் வசதி பெட்டிகள் மட்டுமே இருக்கும் என்பதால், மக்கள் அதிக கட்டணம் கொடுத்து பயணிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். எனவே, கட்டணத்தை குறைக்க மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். ரயில்வே தனியார்மயமாவதை தடுக்க, மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு போராட வேண்டும் என்று அவர் கூறினார்.


No comments:

Post a Comment