மருத்துவ மாணவர் சேர்க்கை ஒன்றிய அரசு இடங்களில் இட ஒதுக்கீடு மீறல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 21, 2022

மருத்துவ மாணவர் சேர்க்கை ஒன்றிய அரசு இடங்களில் இட ஒதுக்கீடு மீறல்

நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் எதிர்ப்பு

மதுரை,அக்.21- அகில இந்திய மருத் துவக் கல்லூரி அனுமதி இடங்களுக்கான  ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் விதிமீறல் நடந்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற  உறுப்பினர் சு.வெங்க டேசன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: 

அகில இந்திய மருத்துவக் கல்லூரி அனுமதி இடங்களுக்கான ஓ.பி.சி இட ஒதுக்கீட்டில் விதி மீறல் நடந்திருப்பதாக செய்திகள் வந்துள்ளன.  இட ஒதுக்கீடு இடங்கள் என்றாலே பொதுப் போட் டியில் (Open Competition) இடங்கள் நிரப்பப்பட்ட பின்னர் இட ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்படும் என்பதே. அதா வது பொதுப் போட்டியில் அனுமதி பெறுகிற ஓ.பி.சி., எஸ்.சி, எஸ்.டி., பிரி வினர் இடஒதுக்கீடு எண்ணிக்கையில் கழிக்கப்படமாட்டார்கள். இது இடஒதுக் கீடு கோட்பாட்டின் அடிச்சுவடி. உச்சநீதி மன்ற தீர்ப்புகள், அரசின் வழிகாட்டல் கள் பல முறை தெளிவுபடுத்தப்பட்ட வழிமுறை. 

ஆனால் மருத்துவ இளநிலை பட் டப் படிப்பு அகில இந்திய இடங்களுக் கான அனுமதியில் இந்த கோட்பாடு அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது எனத் தெரிகிறது.  ஓபிசி மருத்துவ இளங்கலை இட  ஒதுக்கீடு இடங்கள் 2169. நிரப்பப் பட்ட ஓபிசி இடங்களோ ஆறு மட்டுமே. பொதுப் போட்டியில் தேர்வான 2163 ஓ.பி.சி மாணவர்  எண்ணிக்கை, இட ஒதுக்கீடு அனுமதியாக கணக்கு வைக் கப்பட்டுவிட்டதா என்ற கேள்வி எழுந் துள்ளது.    ஒன்றிய அரசின் சுகாதாரத் துறை  அமைச்சர் மான்சுக் மாண்டவியா வுக்கு கடிதம் எழுதியுள்ளேன். ஒன்றிய அரசுக்கு ஒப்படைக்கப்பட்ட மொத்த மருத்துவ இளங்கலை பட்ட காலியிடங் கள் எவ்வளவு? ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி இட ஒதுக்கீட்டில் நிரப்பப்பட வேண்டிய இடங்களின் எண்ணிக்கை பிரிவு வாரி யாக என்ன? பொதுப் போட்டியில் தேர் வான ஓ.பி.சி, எஸ்.சி, எஸ்.டி மாணவர்கள்  எண்ணிக்கை பிரிவு வாரியாக என்ன? ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி.  இடஒதுக்கீடு வாயிலாக அனுமதிக்கப்பட்டு இருப்ப வர்கள் (பொதுப் போட்டியில் இடம் பெற்ற இப்பிரிவினர் நீங்கலாக) பிரிவு வாரி எவ்வளவு? 

பொதுப் போட்டியின் வாயிலாக அனுமதி பெற்ற ஓ.பி.சி, எஸ்.சி,  எஸ்.டி மாணவர்கள், ஓ.பி.சி.எஸ்.சி எஸ்.டி இட ஒதுக்கீடு எண்ணிக்கை கணக்கிலும் சேர்க்கப்பட்டு உள்ளனரா? ஆம் எனில் எத்தனை?  முழு விவரங்களை வெளி யிடுமாறு  கோரியுள்ளேன். இட ஒதுக்கீடு மீறல் நடந்திருந்தால் பாதிக்கப்பட்ட, அனுமதி மறுக்கப்பட்ட ஓ.பி.சி. மாண வர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும்.  எஸ்.சி, எஸ்.டி மாணவர் அனுமதி யிலும் இக்கோட்பாடு மீறப்பட்டுள்ளதா என் பதை ஆய்வு செய்யவேண்டும்.  மருத் துவக் கல்வி அனுமதிகளில் ஓ.பி.சி இடஒதுக்கீடு என்பது ஒன்றிய அரசால் மறுக்கப்பட்டு போராடி, நீதிமன்றங்களில் வாதாடி பெறப்பட்ட ஒன்று. அதில் தமிழ் நாடு முன்னின்றது. ஆனால் இன்றும் அதை சிதைக்கிற முயற்சிகள் தொடர் கின்றன. இதை அனுமதிக்க இயலாது. 

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment