ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, October 13, 2022

ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் போனஸ்

புதுடில்லி,அக்.13- புதுடில்லியில் ஒன்றிய அமைச்சரவைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில்  நேற்று (12.10.2022) நடைபெற்றது. அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின்னர் ஒன்றிய அமைச்சர் அனுராக் தாக்கூர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘உலகம் முழுவதும் சமையல் எரிவாயுவின் விலை அதிகரித்து வருகிறது. சமையல் எரிவாயு உருளை விலை உயர்வால் மக்கள் பாதிக்கக் கூடாது என்பதற்காக பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களுக்கு ரூ.22 ஆயிரம் கோடி மானியம் வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் ஆகியவை இழப்பை ஈடுகட்ட இந்த தொகையை அரசு வழங்கும். கடந்த ஜூன் 2020 முதல் ஜூன் 2022ஆம் ஆண்டு வரை, எல்பிஜி.யின் பன்னாட்டு விலை 300 சதவீதம் உயர்ந்தது. இந்த காலகட்டத்தில் உள்நாட்டு எரிவாயு விலை 72 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது, இது அந்த நிறுவனங்களுக்கு இழப்பை ஏற்படுத்தியது,’ என்றார். மேலும், 11.27 லட்சம் ரயில்வே ஊழியர் களுக்கு 78  நாட்கள் ஊதியத்தை போனசாக வழங்கவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதிகபட்ச தொகை ரூ.17,951 ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு போனஸ் வழங்க, ரயில்வேக்கு ரூ.1,832 கோடி செலவாகும். குஜராத் மாநிலம், தீனதயாள் உபாத்யாய சரக்கு பெட்டக முனையத்தை ரூ.4,243 கோடி செலவில் மேம்படுத்தவும் அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றார்.


No comments:

Post a Comment