5-ஜி சேவை தொடக்கம் - தனியாருக்கே வாய்ப்பு அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அடுத்த ஆண்டில்தான் அனுமதியாம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, October 4, 2022

5-ஜி சேவை தொடக்கம் - தனியாருக்கே வாய்ப்பு அரசின் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு அடுத்த ஆண்டில்தான் அனுமதியாம்

புதுடில்லி,அக்.4-ஒன்றிய அரசின் தகவல் தொடர்புத் துறையின் கீழ் இயங்கும் பிஎஸ்என்எல் நிறுவனத்தில் இன்னமும் முழுமையாக  4ஜி சேவை வழங்கப்படாத நிலை உள்ளது. இந்நிலையில் ஒன்றிய அரசு 5 ஜி சேவையை தொடங்கியுள்ளது. 5 ஜி சேவையில் அரசுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல். நிறுவனத்துக்கு வாய்ப்பு அளிக்கப்பட வில்லை. தனியார்துறை மட்டுமே 5 ஜி தொழில்நுட்ப சேவை அளிக்கப்படும் சூழலே உள்ளது.  இந்தியாவில் 1995இல் அலைபேசி சேவையும், இணைய சேவையும் தொடங்கப்பட்டன. தொடர்ந்து, 2-ஜி, 3-ஜி, 4-ஜி இணைய சேவைகள் அடுத்தடுத்து அறிமுகமாகின. இந்த வரிசையில் டில்லி, மும்பை, சென்னை உள்ளிட்ட 13 பெருநகரங்களுக்கான 5-ஜி தொலைத்தொடர்பு சேவையை    1.10.2022 அன்று டில்லியில் பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். ஒன்றிய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பேசுகையில், “அடுத்த 6 மாதங்களில், 200 நகரங்களில் 5-ஜி சேவை அறிமுகமாகும். அடுத்த 2 ஆண்டுகளில் நாட்டின் 90 சதவீத பகுதிகளுக்கு 5-ஜி சேவை விரிவுபடுத்தப்படும். பிஎஸ்என்எல் சார்பில் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி 5-ஜி சேவை தொடங்கப்படும்" என்றார்.


No comments:

Post a Comment