தெலங்கானா குதிரை பேரம் : சாமியார் உட்பட 3 பேர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 28, 2022

தெலங்கானா குதிரை பேரம் : சாமியார் உட்பட 3 பேர் கைது

அய்தராபாத்,அக்.28- பாஜக அல்லாத எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங் களில் ஆளும் கட்சி சட்டமன்ற உறுப்பினர் களிடம் பேரம் பேசி அரசியல் குழப்பத்தை ஏற்படுத்தி, ஆட்சியைக் கவிழ்ப்பது, அதில் பாஜக அரசியல் ஆதாயத்தை பார்ப்பது என்று கிஞ்சிததும் அரசியல் நாகரி கம், ஜன நாயகத்தின் மாண்புகளைப்பற்றி கவலைப்படாமல் ஆயா ராம் காயாராம் குதிரை பேரங்களை பாஜக நடத்தி வருவது குறித்து அவ்வப்போது தகவல்கள் வெளியாகிவருகின்றன.

பாஜக அல்லாத எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஜனநாயக விரோதமாக ‘ஆபரேஷன் தாமரை’ என்கிற பெயரில் எதிர்க்கட்சிகளின் ஆட் சியை பாஜக கவிழ்க்கும் முயற்சியை தொடர்ந்து கொண்டிருக்கிறது. மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சியை உடைத்து ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா கட்சி சட்ட மன்ற உறுப்பினர்களை பிளவுபடுத்தி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சிவசேனா கூட்டணி ஆட் சியை பாஜக கவிழ்த்தது.

இதைத்தொடர்ந்து, டில்லியில் ஆம் ஆத்மி கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் 40 பேருக்கு தலா ரூ.20 கோடி என ரூ.800 கோடிக்கு பாஜக பேரம் பேசியதாக டில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம்சாட்டி இருந்தார். இதேபோல், பஞ்சாப் ஆம் ஆத்மி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களிடம் பாஜக பேரம் பேசியதாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால், பஞ்சாப் மாநி லத்தில் நடத்தப்பட்ட ஆபரேஷன் தாமரை தோல்வியடைந்தது. பீகாரில் பாஜக கூட்டணியிலிருந்து விலகி முதல மைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் ராஷ்டிரிய ஜனதா தளத்தின் ஆதர வுடன் அரசு அமைந்துள் ளது. இதுபோன்று பாஜகவின் அரசியல் தந்திரங்கள் தொடர்ந்து தோல்வி அடைந்து வரு கின்றன.  தற்பொழுது தெலங்கானா மாநிலத் தில் முதலமைச்சர் சந்திர சேகரராவ் தலைமையில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி யின் உறுப்பினர்களை பாஜக விலைபேசிய விவ ரம்  வெளியாகியுள்ளது.

தெலங்கானாவில் சந்திரசேகர ராவ் ஆட் சியை கவிழ்க்க பாஜக முயற்சியாக டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த சட்ட மன்ற உறுப்பினர்கள் நால்வரிடம் ரூ.400 கோடி பேரம் பேசப்பட்டது மற்றும் அவர்களிடமி ருந்து, ரூ.15 கோடி பறிமுதல் செய்யப்பட்டு; சாமியார் உள்பட மூவர் கைது செய்யப்பட்ட தக வல் வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநி லத்தில் ஆளும் டிஆர்எஸ் கட்சிக்கும், பாஜகவுக்கும் இடையே கடும் அரசியல் மோதல்கள் அரங்கேறி வருகின்றன. (தெலங் கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) என்ற பெயர் அண்மையில் பாரத் ராஷ்டிர சமிதி (பிஆர் எஸ்) என்று மாற்றப் பட்டது குறிப்பிடத் தக்கது).

காங்கிரசு கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கோமட்டிரெட்டி ராஜ கோபால் பாஜகவுக்கு தாவியதைத் தொடர்ந்து வரும் நவம்பர் 3ஆம் தேதி தெலங்கானா மாநி லம், முனுகோடு சட்டப் பேரவைத் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடை பெற உள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் (26.10.2022) இரவு, டிஆர்எஸ் கட்சி யின் தாண்டூரு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பைலட் ரோஹித் ரெட்டி கொடுத்த தகவலின்படி, இவருக்குச் சொந்தமான பண்ணை வீட்டில் மெயினாபாத் காவல்துறையினர் அதிரடியாக நுழைந்து, அங்கிருந்த டில்லியைச் சேர்ந்த சத்தீஷ் ஷர்மா என்ற ராமச்சந்திர பாரதி, அய்தராபாத்தைச் சேர்ந்த நந்த கிஷோர் மற்றும் திருப்பதியைச் சேர்ந்த சாமியார் சிம் ஹயாஜி ஆகியோரைக் கைது செய்தனர்.

இதுகுறித்து ராஜேந் திர நகர் காவல் உதவி ஆணையர் சிறீநிவாஸ் செய்தியாளர்களிடம் கூறும்போது, "ஆளுங் கட்சி சட்டமன்ற உறுப் பினர்களை விலைக்கு வாங்க பேரம் பேசப்பட் டுள்ளது. இது தொடர் பாக முன்கூட்டியே ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் பைலட் ரோஹித் ரெட்டி கொடுத்த புகாரின் பேரில், காவல்துறையினர் மறைந்திருந்து 3 பேரைக் கைது செய்தோம்.

இவர்கள், பாஜகவில் இணையும் டிஆர்எஸ் கட்சி சட்டமன்ற உறுப்பி னருக்கு தலா ரூ.100 கோடி கொடுப்பதாகவும், உடன் சேரும் மற்ற உயர்மட்ட நிர்வாகிகள் ஒவ்வொரு வருக்கும் தலா ரூ.50 கோடி கொடுப்பதாகவும் பேரம் பேசினர். இதில், டிஆர்எஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் நால்வர் விலை பேசப்பட்டனர். கைது  செய்யப்பட்டவர் களிடமிருந்து அலை பேசிகளைப் பறிமுதல் செய்துள்ளோம்" என் றார்.

சைபராபாத் காவல் துறை ஆணையர் ஸ்டீ பன் ரவீந்திரா கூறிய தாவது: 

ஆளும் டிஆர்எஸ் கட்சியின் 4 சட்டமன்ற உறுப்பினர்களிடம் தலா ரூ.100 கோடி ரொக்கம் மற்றும் பல்வேறு காண்ட் ராக்ட் வழங்குவதாக தங் களை விலைக்கு வாங்க பேரம் பேசுவதாக சட்ட மன்ற உறுப்பினர்கள்  காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், அஜீஸ் நகரில் உள்ள பண்ணை வீட்டில் சோதனை நடத் தப்பட்டது. அப்போது, டிஆர்எஸ் கட்சி சட்ட மன்ற உறுபபினர்கள் பைலட் ரோஹித்ரெட்டி, ரேகா காந்தாராவ், குவ் வாலா பாலராஜூ மற் றும் பீரம் ஹர்ஷவர்தன் ஆகியோரிடம் இந்த பேரம் நடந்தது. இதற் காக, டில்லியை பூர்வீக மாக கொண்ட, பரிதா பாத்தில் சாமியாராக உள்ள ராமச்சந்திர பாரதி, திருப்பதியை சேர்ந்த சிறீமநாத ராஜூ வின் பீடாதிபதி சிம்ம யாஜி, பாஜக தலைவர் நந்தகுமார் ஆகியோர் சட்டமன்ற உறுப்பினர் களிடம் பேரம் பேசிக் கொண்டிருந்தனர். 4 டிஆர்எஸ் கட்சியின் சட் டமன்ற உறுப்பினர்க ளுக்கு பெரும் தொகை வழங்கி பாஜகவுக்கு கட்சி மாற பேச்சுவார்த்தை நடந்துள்ளது. சாமியார் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். 

-இவ்வாறு அவர் கூறினார்.

டில்லியை பூர்வீகமாக கொண்ட பரிதாபாத்தில் சாமியாராக உள்ள ராமச்சந்திர பாரதி ஒன்றிய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் இருப்பது போன்றும், திருப்பதியை சேர்ந்த சிறீமநாத ராஜூவின் பீடாதிபதி சிம்மயாஜி, உத்தரப்பிர தேச முதலமைச்சர் சாமி யார்ஆதித் யநாத்துடன் இருப்பது போன்றும், தொழிலதிபர் நந்தகுமார் ஒன்றிய அமைச்சர் கிஷன்ரெட்டியுடன் இருக்கின்ற படங்களை டிஆர்எஸ் கட்சி சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. பேரம் பேசியதாக கைது செய் யப்பட்டுள்ள இவர்கள் அனைவரும் பாஜக கட்சி தலைவர்களுடன் நெருக் கமாக இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.


No comments:

Post a Comment