தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களிலும் இ-சேவை மய்யங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, October 21, 2022

தமிழ்நாட்டில் 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவலகங்களிலும் இ-சேவை மய்யங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

சென்னை, அக்.21 தமிழ்நாட்டின் 234 சட்டப்பேரவை உறுப்பினர் அலுவல கங்களிலும் இ-சேவை மய்யங்களை தொடங்கி வைத்து, அம்மய்யங் களுக்கான நவீன மேசை கணினிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங் கினார். தலைமைச் செயலகத்தில் நடை பெற்ற இந்த நிகழ்ச்சியில் சட்டப் பேரவைத் தலைவர் அப்பாவு முன்னி லையில், 9 சட்டமன்ற உறுப்பினர்களுக்கு நவீன மேசை கணினிகள், பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லையும் வழங் கினார். இதனைத் தொடர்ந்து, கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலு வலகத்தில் இ-சேவை மய்யத்தை தொடங்கிடும் வகையில் முதல மைச்சரும், கொளத்தூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான மு.க. ஸ்டாலின் நவீன மேசை கணினி, பயனர் எண் மற்றும் கடவுச்சொல்லை தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை  ஆகிய வற்றை தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு மின் ஆளுமை முகமை, அரசு இ -சேவை மய்யங்களை தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலம் நடத்தி வருகிறது. இதனை மேம் படுத்தும் வகையில், மாநிலத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற உறுப்பினர் அலுவலகங்களிலும் இ - சேவை மய்யங்கள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக சட்டமன்ற பேரவைச் செய லகத் துறை சார்பாக 234 சட்டப்பேரவை உறுப்பினர்களின் அலுவலகங்களிலும் இ-சேவை மய்யங்கள் அமைப்பதற்காக நவீன மேசை கணினிகள் வழங்கப் படுகிறது.

இந்த வசதிகளை பயன்படுத்தி இ-சேவை வலைதளத்திலிருந்து  tnesevai.tn.gov.in இணைய வழிச் சேவைகளை மக்களுக்கு வழங்க 234 சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் பயனர் எண் மற்றும் கடவுச்சொல் (User ID & Password)  தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் உருவாக்கி அளிக்கப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment