‘ரோஜ்கார் மேளா' 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு விளக்கம் தருமா ஒன்றிய அரசு? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, October 24, 2022

‘ரோஜ்கார் மேளா' 18 மாதங்களில் 10 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு விளக்கம் தருமா ஒன்றிய அரசு?

ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்து ஆட்சிக் கட்டிலில் ஏறினார் நரேந்திர மோடி. அதன்படி பார்க்கப் போனால், இந்த 8 ஆண்டுகளில் 16 கோடி பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கப்பட்டு இருக்க வேண்டும் - அளிக்கப்பட்டதா?

இப்பொழுது 10 லட்சம் பேருக்கு அரசுப் பணி வழங்கும் ‘ரோஜ் கார் மேளாவை' பிரதமர் மோடி தொடங்கி வைத்தார் என்று கொட்டை எழுத்துகளில் ஊடகங்கள் தலைப்புச் செய்தியாக வெளியிட் டுள்ளன.

75 ஆயிரம் பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

யு.பி.எஸ்.சி.மூலம் விளம்பரப்படுத்தப்பட்டு அதில் தேர்ச்சி பெற்றவர்களா இவர்கள்? எந்த ஆண்டு விளம்பரப்படுத்தப்பட்டது? எப்பொழுது தேர்வு நடத்தப்பட்டது? தேர்வு முடிவுகள் எப்பொழுது வெளியிடப்பட்டன?

அதுபோல ரயில்வே பணியளர் தேர்வாணையம், எஸ்.எஸ்.சி. தேர்வுகள் எப்பொழுது அறிவிக்கப் பட்டன. இவற்றில் எல்லாம் எத்தனை ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்? தேர்ச்சி பெற்றவர்கள் எத்தனைப் பேர்? இட ஒதுக்கீடு அடிப்படையில் எந்தெந்த பிரி வினருக்கு எத்தனை எத்தனை இடங்கள் கிடைத்தன என்ற விவரத்தையும் ஒன்றிய அரசு வெளியிட்டால், மக்கள் தெரிந்துகொள்ள வசதியாக இருக்கும்.

ஒன்றிய அரசு இந்த விவரங்களை வெளியிடுமா?

No comments:

Post a Comment