திருப்பத்தூரில் டிசம்பர் 17இல் முப்பெரும் விழா ஈ.வெ.கி.ச.இளங்கோவன், கவிஞர் கனிமொழி எம்.பி., அமைச்சர் எ.வ.வேலு, பேரா.சுப.வீரபாண்டியன் பங்கேற்பு - கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, October 23, 2022

திருப்பத்தூரில் டிசம்பர் 17இல் முப்பெரும் விழா ஈ.வெ.கி.ச.இளங்கோவன், கவிஞர் கனிமொழி எம்.பி., அமைச்சர் எ.வ.வேலு, பேரா.சுப.வீரபாண்டியன் பங்கேற்பு - கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

திருப்பத்தூர், அக். 23- 17.12.2022 அன்று திருப்பத்தூரில் சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி.கோபால் நூற்றாண்டு விழா, தமிழர் தலைவர் ஆசிரி யர் அவர்களின் 90ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா, உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடு தலை சந்தா வழங்கும்  விழா ஆகிய முப்பெரும் விழா நடத் துவது குறித்து திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் 22.10.2022 அன்று காலை 11.00 மணியளவில் திருப்பத்தூர் ஆனந்தன் சாந்தி திருமண மண்டபத்தில்  நடைபெற்றது. 

இக் கலந்துரையாடல் கூட் டத்திற்கு கழகப் பொதுச்செய லாளர்     வீ.அன்புராஜ் தலைமை வகித்தார் . 

மாநில அமைப்பாளர் உரத்த நாடு குணசேகரன்,  மாநில அமைப்புச்செயலாளர்கள் ஊமைஜெயராமன், வி. பன்னீர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

மாவட்ட இணைச்செயலா ளர் பெ.கலைவாணன் அனை வரையும் வரவேற்றார். 

இவ்விழா ஏற்பாடுகள் குறித்து திருப்பத்தூர் மாவட் டத் தலைவர் கே.சி.எழிலரசன், மாநில அமைப்புச்செயலாளர் கள் ஊமை ஜெயராமன் மற் றும் வி. பன்னீர்செல்வம்,  மாநில தொழிலாளரணி செயலாளர் 


மு. சேகர், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்ச் செல்வி, மாநில மகளிரணி அமைப்பாளர் குடியாத்தம் ந. தேன்மொழி, மாநில மகளிரணி பொருளாளர் அகிலா எழிலர சன், மாநில ப. க. துணைத் தலைவர் அண்ணா சரவணன், மாநில திராவிடர் கழக இளைஞ ரணி அமைப்பாளர் இரா. செந்தூர பாண்டி, மண்டல தலைவர் (வேலூர்)  வி. சடகோபன், மாநில ப.க எழுத்தாளர் மன்ற துணைத் தலைவர் கவிதா இளங்கோவன், தருமபுரி மாவட்ட ப. க. தலைவர் அரூர் இராஜேந்திரன், வேலூர் மாவட்ட தலைவர் இரா. அன்பரசன்,  கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல்வம்,  மாநில மகளிரணி அமைப்பாளர் தேன்மொழி, வேலூர் மாவட் டத் தலைவர் அன்பரசன்,  மாவட்ட ப. எ. மன்றத் தலைவர் கவிஞர் சுப்புலட்சுமி, கிருஷ்ண கிரி மாவட்ட மகளிரணி செயலாளர் இந்திரா காந்தி,  மாவட்ட ப. க. தலைவர்  சி.தமிழ்ச் செல்வன், வாணியம்பாடி நகர தலைவர் அன்புச்சேரன், மாவட்ட ப. க. தலைவர் நத்தம் அன்பு, கந்திலி ஒன்றிய தலைவர் கனக ராஜ், ஆம்பூர் நகர தலைவர் ரவி, மத்தூர் கழக சார்பாக ஆசிரியர் வெங்கடேசன், ஊத் தங்கரை  கழக சார்பாக பொன் முடி ஆகி யோர் முப்பெரும் விழா ஏற்பாடுகள் குறித்து செயல் விளக்கங்களும், தங்கள் கருத் துக்களையும் பகிர்ந்து கொண் டார்கள். 

விழாக்குழு

இவ்விழா மிகச் சிறப்பாக நடைபெற அனைத்துக் கட்சி களை சார்ந்த பொறுப்பா ளர்கள் அடங்கிய விழாக் குழு அமைக்கப்பட்டது. 

விழாக் குழு விவரம்:

புரவலர்கள்:- கவிஞர் கலி. பூங்குன்றன், கழக துணைத் தலைவர், 

வீ.அன்புராஜ்,- கழகப் பொதுச் செயலாளர். 

ஒருங்கிணைப்பாளர்கள்: -  உரத்த நாடு இரா. குணசேகரன் (கழக மாநில அமைப்பாளர்), ஊமைஜெயராமன் (கழக மாநில அமைப்புச் செயலா ளர்), அண்ணா சரவணன் (மாநில துணைத் தலைவர் ப. க.) தலைவர்: - கே. சி. எழிலரசன் (மாவட்ட  தலைவர்). செயலாளர்: - பெ. கலை வாணன் (மாவட்ட இணைச் செயலாளர்). 

துணைத் தலைவர்கள்-: வி.ஜி.இளங்கோ (மாவட்ட செயலாளர்), சி. தமிழ்ச்செல் வன் (மாவட்ட தலைவர்  ப. க.), ஏ. டி. ஜி. சித்தார்த்தன் (நகர செயலாளர்)

துனணச்செயலாளர்கள்: நத்தம் அன்பு, ஆம்பூர் பன்னீர் செல்வம், ஜிம் சுரேஷ்குமார் (மாவட்ட இளைஞரணி தலை வர்).

பொருளாளர்: - தோழர் காளிதாஸ் (நகர தலைவர்). 


உறுப்பினர்கள்: - அகிலா எழிலரசன் (மாநில பொருளா ளர் மகளிரணி), மா. கவிதா (மாநில து. தலைவர் ப. க. எழுத் தாளர் மன்றம்), கணேஷ்மல் (நிறுவநர், தலைவர் காமராஜர் நூற்றாண்டு நினைவு அறக் கட்டளை), வ. கண்ணதாசன் (மாவட்டச் செயலாளர் ம. தி. மு.க.), இரா. சுபாஷ் சந்திர போஸ் (மாவட்ட செயலாளர் வி. சி. க.), வி. சடகோபன் (மண் டல கழக தலைவர்), பி.பட்டாபி ராமன் (மண்டல  செயலாளர்), எழில் சிற்றரசன் (மண்டல இளைஞரணி செயலாளர்), பெ. இரா கனகராஜ் (ஒன்றிய தலைவர்), வெற்றிக் கொண் டான் (ஒன்றிய தலைவர் மாத னூர்), நரசிம்மன் (மாவட்ட அமைப்பாளர்), இரவி (நகர தலைவர் ஆம்பூர்), அன்புச் சேரன் (நகர தலைவர் வாணி யம்பாடி), க.மதியழகன் (நகர தலைவர் சோலையார் பேட்டை), ராஜேந்திரன் (ஒன் றிய தலைவர் சோலையார் பேட்டை),  க.கற்பகவள்ளி (மாவட்ட தலைவர் மகளிரணி), ஆனந்தன் (மாவட்ட தலைவர் திராவிட தொழிலாளர் அணி), ஞான பிரகாசம் (மாவட்ட தலைவர் விடுதலை வாசகர் வட்டம்), கவிஞர் நா.சுப்பு லட்சுமி (மாவட்ட தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம்), அ.உலகன் (மாவட்ட தலைவர் மாணவர் கழகம்), தே.பழனிசாமி (மாவட்ட செயலாளர் இளைஞரணி) ஆகியோர்கள் விழாக் குழு பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். 

முப்பெரும் விழா குறித்து கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்  தலைமை உரை யாற்றினார். அவர் தம் உரை யில் "தி. மு. க.  துணைப் பொதுச்செயலாளர் கவிஞர் கனிமொழி  எம்.பி, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி மாநில பொதுச்செயலாளர் ஈ.வெ.கி.ச. இளங்கோவன், தமிழ்நாடு பொதுப்பணித்துறை அமைச் சர் மாண்புமிகு எ. வ. வேலு, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டியன்  மற்றும் பன்னாட்டுத் தலைவர்கள் முப்பெரும் விழாவில்  பங்கு கொண்டு சிறப்பிப்பார்கள்" என்று அறிவித்தார். 

மேலும், முப்பெரும் விழாச் செலவுகளை அனைத்து மாவட்டத் தோழர்கள் பகிர்ந்து கொள்ளும் விதமாக  கலந்துரையாடல் கூட்டத்தில் ஊமை ஜெயராமன் (மாநில அமைப்புச் செயலாளர்)  - ரூ.10,000,  இந்திரா காந்தி கிருஷ்ணகிரி (மாவட்ட தலைவர் மகளிரணி)  -  ரூ.10,000,  தாமரைக்கனி  மகளிரணி  ரூ.10,000, கற்பகவள்ளி மாவட்ட மகளிரணி தலைவர் - ரூ.10,000,  அரூர் இராஜேந்திரன் தருமபுரி மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் - ரூ. 5000, தோழர் காளிதாஸ் சுப்புலட்சுமி  நகர தலைவர் - ரூ. 2000,  சடகோபன் மண்டல தலைவர்  - ரூ. 2000, கனகராஜ் கந்திலி ஒன்றிய தலைவர் - ரூ. 2000,  அன்புச்சேரன் வாணியம்பாடி நகர தலைவர் - ரூ. 2000,  முருகம்மாள் மகளி ரணி - ரூ.1000  ஆகியோர் விழா நிதியினை கழகப் பொதுச் செயலாளரிடம் வழங்கினர்.  அதை பெற்று திருப்பத்தூர் மாவட்ட திராவிடர் கழக தலைவரிடம் வழங்கினார். 

மேலும், ஆசிரியர் வெங்க டேசன் மத்தூர், ஆசிரியர் பழனி நடுப்பட்டு, ஆசிரியர் பழனி போச்சம்பள்ளி ஆகி யோர் இணைந்து  ரூ.1,000,00 (ஒரு லட்சம்) நிதியை வழங்கு வதாக உறுதி அளித்தனர்.  இப்படி பல தோழர்கள் விழா சிறப்பாக நடைபெற தங்கள் பங்களிப்பாக நிதியை தர உறுதி அளித்தனர். 

அடுத்ததாக ஏ. சிற்றரசு மண்டல இளைஞரணி செய லாளர்  முப்பெரும் விழா கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை வாசித்தார். 

நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

1. 08.10.2022 அன்று சென்னை பெரியார் திடலில் தமிழர் தலைவர் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட் டத்தின் முடிவுகளை செயலாக் குவது என தீர்மானிக்கப்படு கிறது. 

2. 17.12.2022 திருப்பத்தூரில் சுயமரியாதைச் சுடரொளி ஏ.டி.கோபால் நூற்றாண்டு விழா தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 90ஆவது ஆண்டு பிறந்த நாள் விழா, உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடு தலை சந்தா வழங்குதல் உள் ளிட்ட முப்பெரும் விழாவினை மிகச் சிறப்பாக நடத்துவது என தீர்மானிக்கப்படுகிறது. 

3. முப்பெரும் விழாவை திருப்பத்தூரில் நடத்துவதற்கு வாய்பளித்த தமிழர் தலைவர் அவர்களுக்கு இக்கூட்டம் உளம் கனிந்த நன்றியை தெரிவித்துக் கொள்ளுகிறது. 

4. உலகின் ஒரே பகுத்தறிவு நாளிதழ் விடுதலைக்கு சந்தாக் கள் சேர்த்து தமிழர் தலைவ ருக்கு 90ஆவது ஆண்டு பிறந்த நாள் பரிசாக மாவட்ட கழகத் தின் சார்பில் வழங்குவது என தீர்மானிக்கப்படுகிறது. 

5. டிசம்பர் 17 - ஆம் தேதி யன்று காலை 9.00 மணிக்குத் தொடங்கி   மாபெரும் ஊர் வலத்துடன் இரவு 9.00 மணி வரை நிகழ்ச்சிகள் நடைபெறும். முப்பெரும் விழாவில் உல கெங்கும் வாழும் பெரியார் பெருந்தொண்டர்கள்,மனித நேயர்கள், சமூக நீதியாளர்கள், அனைவரும் பங்கேற்க வேண்டு மெனக் கேட்டுக்கொள்ளுவது டன் முப்பெரும் விழா வெற்றி பெற மாவட்டக் கழகத் தோழர் கள் முறையான பங்களிப்பை வழங்க வேண்டுமென இக் கூட்டம்  கேட்டுக் கொள்ளு கிறது - என  5 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 

இம்முப்பெரும் விழா கலந்துரையாடல் கூட்டத்தில் சுமார் 100க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண் டார்கள். 

இறுதியாக தோழர் காளி தாஸ் (திருப்பத்தூர் நகர தலை வர்) நன்றி கூறிட, கலந்துரை யாடல் நிறைவு பெற்றது.


No comments:

Post a Comment