அக்.15க்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு சலுகை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, October 12, 2022

அக்.15க்குள் சொத்து வரி செலுத்துவோருக்கு சலுகை: சென்னை மாநகராட்சி அறிவிப்பு

சென்னை, அக். 12- சென்னை மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் உள்ள சொத்து உரிமையாளர் கள் 2022-2023ஆம் நிதி யாண்டின், முதல் அரை யாண்டிற்கான சொத்து வரியினை 30.9.2022க்குள் செலுத்த வேண்டும். அதன்படி, 2022-2023 ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டிற் கான சொத்துவரியில் ரூ.696.97 கோடி சொத்து உரிமையாளர்களிடமி ருந்து, வசூல் செய்யப் பட்டுள்ளது. முதல் அரையாண்டிற்கான சொத்துவரி செலுத்த வேண்டிய இறுதி நாளான 30.9.2022 அன்று மட்டும் ரூ.55.30 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

சொத்துவரி செலுத்த வேண்டிய ஒவ்வொரு அரையாண்டின் தொடக் கத்திலும் முதல் 15 தினங் களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு, அவர்கள் செலுத்தும் சொத்து வரியில் 5விழுக் காடு அல்லது அதிகப் பட்சமாக ரூ.5 ஆயிரம் ஊக்கத் தொகையாக வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது சொத்து உரிமையாளர்கள் 2022--2023ஆம் ஆண்டிற்கான தங்களின் இரண்டாம் அரையாண்டு சொத்து வரியினை 1.10.2022 முதல் செலுத்தவேண்டும். 1.10.2022 முதல் 10.10.2022 வரை 10 தினங்களில் சென்னை மாநகராட் சிக்கு உட்பட்ட பகுதி களில் உள்ள 13 லட்சம் சொத்து உரிமையாளர் களில் சுமார் 4 லட்சம் சொத்து உரி¬ மயாளர் களிடமிருந்து, இரண் டாம் அரையாண்டிற் கான சொத்துவரி ரூ.50.16 கோடி வசூலிக்கப்பட்டு உள்ளது. இதுவரை சொத்துவரி செலுத்திய சொத்து உரிமையாளர் களுக்கு ரூ.1.25 கோடி ஊக்கத் தொகையாக அளிக்கப்பட்டுள்ளது.

சொத்து உரிமையா ளர்கள் சொத்துவரியினை கீழ்க்கண்ட முறைகளில் ஏதேனும் ஒரு வழிமுறை யின் மூலம் செலுத்தலாம்.

சென்னை மாநக ராட்சி வருவாய் அலுவ லரின் பெயரில் காசோ லைகள் மற்றும் வரை வோலைகள், கடன், பற்று அட்டை மூலமாக சென்னை மாநகராட்சி யின் வரி வசூலிப்பவர்களி டம் செலுத்தி, செலுத்தப் பட்டதற்கான வரிசீட் டினை (ரிசிப்ட்) பெற் றுக்கொள்ளலாம்.

சென்னை மாநகராட் சியால் வழங்கப்படும் சொத்துவரி ரசீதுகளில் உள்ள க்யூ.ஆர். கோடு பயன்படுத்தி சொத்துவரியினை செலுத்தலாம்.

சென்னை மாநகராட் சியின் வலைதளம் (www.chennaicorporation.gov.in) மூலமாக, எவ்வித பரி மாற்ற கட்டணமில்லா மல் சொத்துவரி செலுத் தலாம்.

தே ர்ந்தெடுக்கப்பட்ட வங்கிகளின் மூலம் நேரடி யாக பணமாகவும் சொத்து வரியினை செலுத்தலாம்.

‘நம்ம சென்னை’ மற்றும் ‘பே.டி.எம்.’ முதலிய கைபேசி செயலி மூலமா கவும் செலுத்தலாம்.

BBPS - (பாரத் பில் கட்டண முறை) மூலமா கவும் சொத்துவரி செலுத்தலாம்.

2022--2023ஆம் நிதி யாண்டின் இரண்டாம் அரையாண்டு தொடக் கத்தின் முதல் 15 தினங் களுக்குள் சொத்துவரி செலுத்தும் சொத்து உரிமையாளர்களுக்கு 5 விழுக்காடு ஊக்கத் தொகை சலுகை வழங்கப்பட்டு வருகிறது. சொத்துவரி யில் 5விழுக்காடு ஊக்கத் தொகை பெற இன்றுடன் 5 தினங்களே உள்ளது.

எனவே, சொத்து உரி மையாளர்கள் 15.10.2022க்குள் தங்களின் இரண்டாம் அரையாண் டிற்கான சொத்து வரியினை செலுத்தி 5விழுக் காடு ஊக்கத்தொகையினை பெற்று பயனடையு மாறு கேட்டுக் கொள்ளப் படுகிறது.

No comments:

Post a Comment