தி.மு.க. முப்பெரும் விழா: தாய்க்கழகத்தின் வாழ்த்து! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 11, 2022

தி.மு.க. முப்பெரும் விழா: தாய்க்கழகத்தின் வாழ்த்து!

திராவிடர் இயக்கக் கொள்கையாளர்களாக வாழும் லட்சிய வீரர்களின் தொண்டினைப் பாராட்டி ஆண்டுதோறும் முப்பெரும் விழாவில் தி.மு.க. விருதுகள் வழங்கிச் சிறப்பித்து வருகின்றது!

அதனை இன்றைய ஆற்றல்மிகு தி.மு.க. தலைவர் மானமிகு மு.க.ஸ்டாலின் அவர்களும், தொடர்ந்து   தக்கவர்களை ஆண்டு தோறும் அடையாளம் கண்டு - பெருமைப்படுத்தி வருவது மிகவும் எடுத்துக்காட்டானது.

இவ்வாண்டு விருதாளர்களான பெரியார் விருது - திருமதி சம்பூர்ணம் சாமிநாதன்.

அண்ணா விருது - கோவை இரா.மோகன்

கலைஞர் விருது - தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி.,

பேராசிரியர் விருது - குன்னூர் சீனிவாசன்

பாவேந்தர் விருது - புதுச்சேரி சி.பி.திருநாவுக்கரசு

ஆகிய தொண்டறச் சான்றுகள் பெறவிருக்கும் திராவிடச் செம்மல்களை தாய்க்கழகம் நெஞ்சாரப் பாராட்டி வாழ்த்தையும் தெரிவிக்கிறது.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

11.9.2022


No comments:

Post a Comment