பெரியார் மண்ணைப் பிரிவது வருத்தம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 11, 2022

பெரியார் மண்ணைப் பிரிவது வருத்தம்!

தமிழ்நாடு நடைப்பயண முடிவில் ராகுல்காந்தி உருக்கம்!

தலைச்சன்விளை, செப்.11 ‘‘தமிழ் நாட்டில் பெரியார் மண்ணை விட்டுப் பிரிந்து செல்வது வருத்தமாக உள்ளது; ஆனாலும், தமிழ்நாட்டில் நான்கு நாள்கள் நடைப்பயணம் வெற்றிகரமாக அமைந்தது'' என்று காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார். 

இந்திய ஒற்றுமை நடைப்பயணத் தின் 4 ஆவது நாளில் மார்த்தாண்டத் தில் ஓய்வெடுத்த ராகுல் காந்தி, மீண் டும் மாலையில் குழித்துறை வழி யாக கேரள எல்லையான தலைச் சன் விளையில் நடைப்பயணத்தை நிறைவு செய்தார். அங்கு ராகுல்காந்தி திறந்த வேனில் நின்றபடி பேசும் போது, “தமிழ்நாட்டில் பெரியார் மண்ணை விட்டுப் பிரிந்து செல்வது வருத்தமாக உள்ளது. அதேசமயம், இனி நாராயண குரு பிறந்த கேரளத்துக்குள் செல்லவிருப்பதை எண்ணி மகிழ்கிறேன். தமிழ்நாட்டில் 4 நாட்கள் நடைப்பயணம் வெற்றி கரமாக அமைந்தது” என்றார்.

தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல் காந்தியின் 4 நாள் நடைப்பயணம் நிறைவடைந் தது. இன்று முதல் 19 நாட்களுக்கு கேரள மாநிலத்தில் 7 மாவட்டங்கள் வழியாக அவர் நடைப்பயணம் மேற்கொள்கிறார் தமிழ்நாடு எல் லையை ஒட்டியுள்ள பாறசாலையில் கேரள காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.சுதாகரன், கேரள எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன், மேனாள் முதலமைச்சர் உம்மன்சாண்டி, மூத்த தலைவர் ரமேஷ் சென்னிதலா உள்ளிட்ட கேரள மாநில காங்கிர ஸார் நேற்றே திரண்டனர்.

இன்று பாறசாலையில் பிரம் மாண்ட வரவேற்புக்கு  ஏற்பாடு செய் யப்பட்டுள்ளது. பாறசாலை-திரு வனந்தபுரம்-திருச்சூர் வரை தேசிய நெடுஞ்சாலை வழியாகவும், திருச் சூரில் இருந்து நிலாம்பூர் வரை மாநில நெடுஞ்சாலைகள் வழியாக வும் ராகுல் காந்தி நடைப்பயணம் மேற்கொள்கிறார்.

No comments:

Post a Comment