இங்கிலாந்து சென்ற ஹிந்துத்துவ மதவெறி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

இங்கிலாந்து சென்ற ஹிந்துத்துவ மதவெறி

இங்கிலாந்தில் உள்ள லெய்செஸ்டர் நகரில் ஹிந்துவ அமைப்பினர் இஸ்லாமியர் களை ஜெய்சிறீராம் என்று கூறிக்கொண்டே. திங்கள்கிழமை (செப்.19) மாலை  தாக்குதல் நடத்தியுள்ளனர்.

லெய்செஸ்டரில் என்ன நடக்கிறது?

இங்கிலாந்தின் கிழக்கு லாய்செஸ்டரில் இந்த மோதல் முதன் முதலில் வெடித்துள் ளது. இது குறித்து தகவல் அறிந்ததும் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப் பட்டனர். மேலும் அப்பகுதி சுயேச்சை எம்.பி., கிளா டியா வெப், “அனைவரும் அமைதியாக கலைந்து அவரவர் வீட்டுக்கு செல்ல வேண்டும்” எனக் கோரிக்கை விடுத்தார். இந்தப் பிரச்சினை சனிக்கிழமை தொடங்கி ஞாயிற்றுக்கிழமை (19.9.2022) பெரிதாகி, திங்கள் கிழமை வன்முறையாக வெடித்துள்ளது என இங்கிலாந்து காவல் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் இதுபோன்ற வன்முறை மற்றும் குழப்பங்களை பொறுத்துக் கொள்ள மாட்டோம் எனத் தெரிவித்த காவலர்கள் இந்தப் பிரச்சினையில் இருவரை கைது செய்துள்ளோம் என்றும் கூறினர்.நகரில் அமைதியின்மை ஏன்? துபாயில் நடந்த ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதல் கிழக்கு லாய்செஸ்டரிலும் எதிரொலித்தது. அங்குள்ள இந்தியர்கள் இந்தியாவின் வெற்றியை கொண்டாடினர்.

அப்போது ஜெய் சிறீ ராம் என ஒலிக்கப்பட்டது பின்னர் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்தினர்..

இது தொடர்பான காணொலி காட்சி களை சேகரித்து வைத்துள்ளனர்.  குறிப் பிட்ட சமூகத்தினரின் வழிபாட்டுத்தலங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் தாக்கப்பட்ட வுடன் எதிர்தரப்பினரும் தாக்குதல் நடத் தினர் இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் விளையாட்டுகளின் போது பொதுவாக இரு தரப்பு மக்களுமே விளையாட்டாக மட்டுமே பார்த்துக்கொள்வார்கள். ஆனால் இம்முறை வன்முறையில் இறங்கியுள்ளார் கள்

சமூகத் தலைவர்கள் என்ன கூறுகிறார்கள்?

இரு சமூகமும் நல்லிணக்கத்துடன் வாழ வேண்டும் என்பதை அச்சமூக தலைவர் கள் உணர்ந்துள்ளனர். ஆனால் இளைஞர் கள் ஆபத்தில் சிக்கிக் கொள்கின்றனர். இதற்கிடையில் வன்முறை எதற்கும் தீர் வல்ல. சமூக ஊடகங்களின் தவறான தக வல்களுக்கு மக்கள் பலியாக வேண்டாம். தற்போது நமக்கு தேவை அமைதி. இது அமைதிக்கான நேரம் என பட்டேல் என் பவர் கூறினார்.

லெய்செஸ்டரின் மக்கள்தொகை விவரம்

இங்கிலாந்தின் லெய்செஸ்டரில் இந்துக் கள் மற்றும் இஸ்லாமியர்கள் ஏறத்தாழ ஒரே மாதிரியான அளவில் வாழ்கின்றனர். இவர்களின் மக்கள் தொகை 7.4 மற்றும் 7.2 சதவீதம் ஆக உள்ளது. அடுத்தப்படியாக சீக்கியர்கள் 2.4 சதவீதம் பேர் உள்ளனர். கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 54 சதவீதம் ஆக உள்ளது. அதேநேரத்தில் இங்கு சொல்லிக் கொள்ளும்படி யூதர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபகாலமாக இந்தியாவில் உள்ள ஹிந்து அமைப்புகள் வெளிநாடுகளில் வாழும் ஹிந்து இளைஞர்களிடம் செய்து வரும் மூளைச்சலவை வெளிநாடுகளிலும்   மதவெறுப்பை பரப்பி உள்ளது.

No comments:

Post a Comment