திருவாரூர் மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் சிறப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 9, 2022

திருவாரூர் மாநாட்டில் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் சிறப்புரை

 பெரியார் மண்ணை சனாதன மண்ணாக மாற்றுவோம் என்று கொக்கரிக்கக் கூடிய  கும்பலுக்கு அண்ணன் தளபதி அவர்களே அஞ்சவேண்டாம்!

தமிழர் தலைவர் ஆசிரியர் எங்களையெல்லாம் அழைத்திருக்கிறார் - நாங்கள் உங்களோடு இருக்கின்றோம்!

திருவாரூர் செப்.9 பெரியார் மண்ணை சனாதன மண் ணாக மாற்றுவோம் என்று கொக்கரிக்கக் கூடிய  கும் பலுக்கு அண்ணன் தளபதி அவர்களே அஞ்சவேண்டாம்; தமிழர் தலைவர் அவர்கள் எங்களையெல்லாம் அழைத் திருக்கின்றார், நாங்கள் உங்களோடு இருக்கின்றோம் என்றார் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள்.

திருவாரூர்: சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாடு

கடந்த 4.9.2022 அன்று மாலை திருவாரூரில் நடைபெற்ற சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாட்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

எழுச்சியுரை ஆற்றவிருக்கின்ற 

தமிழர் தலைவர்

திராவிடர் கழகம் நடத்தும் சனாதன எதிர்ப்பு - திராவிட மாடல் ஆட்சி விளக்க மாநாட்டை தலைமை வகித்து சிறப்பித்துக் கொண்டிருக்கின்ற, நிறைவாக நம்மிடையே எழுச்சியுரையை ஆற்றவிருக்கின்ற திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களே,

நம் அனைவரையும் வரவேற்று சிறப்பித்து இருக்கிற திராவிடர் கழகத்தின் திருவாரூர் மாவட்ட செயலாளர் தலைவர் மானமிகு வீ.மோகன் அவர்களே,

இம்மாநாட்டினை நெறிப்படுத்திக் கொண்டிருக்கின்ற திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் மானமிகு தஞ்சை இரா.ஜெயக்குமார் அவர்களே,

இந்நிகழ்வில் பங்கேற்று முன்னிலை வகித்து சிறப் புரை வழங்கி, இம்மாநாட்டிற்குச் சிறப்பு சேர்த்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் நகர செயலாளர் வாரை எஸ்.பிரகாஷ் அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப் பினர், திருத்துறைப்பூண்டி மாரிமுத்து அவர்களே,

தமிழ்நாடு அரசின் தாட்கோ தலைவர், மேனாள் அமைச்சர் மதிப்பிற்குரிய அண்ணன் மதிவாணன் அவர்களே,

தமிழ்நாடு அரசின் மீன் வளர்ச்சிக்கழகத் தலைவர் நாகை மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக செயலாளர் அண்ணன் கவுதமன் அவர்களே,

திராவிட முன்னேற்றக் கழகத்தின் திருவாரூர் மாவட் டக் கழகச் செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் மதிப் பிற்குரிய அண்ணன் பூண்டி கலைவாணன் அவர்களே,

இந்நிகழ்வில் பங்கேற்று மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிறப்புரை வழங்கி, இம்மாநாட்டிற்கு சிறப்பு சேர்த்திருக்கின்ற அரசியல் ஆய்வு மய்ய செயலாளர் மதிப்பிற்குரிய தோழர் மு.செந்திலதிபன் அவர்களே,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மதிப்பிற்குரிய அண்ணன் இரா.முத்தரசன் அவர்களே,

உரையாற்றி விடைபெற்றுச் சென்றிருக்கின்ற மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் மதிப் பிற்குரிய தோழர் கே.பாலகிருஷ்ணன் அவர்களே,

அண்ணன் அழகிரிக்குப் பதிலாக இந்த நிகழ்வில் பங்கேற்று, சிறப்புரை வழங்கி, இந்த மாநாட்டிற்குச் சிறப்பு சேர்த்திருக்கின்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் அன்புச் சகோதரர் துரை.வேலன் அவர்களே,

திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர்

எனக்கு முன்னர், இங்கே சிறப்புரையாற்றி, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள்தான் திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவராக, எஞ்சியிருக்கும் தலைவராக இருக்கிறார் - அவரே இந்த அறப்போரை தலைமை யேற்று முன்னின்று நடத்தவேண்டும் என்கின்ற வேண்டுகோளை வைத்து உரையாற்றி அமர்ந்திருக்கின்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் அமைப்புச் செய லாளர் பெருமதிப்பிற்குரிய அண்ணன், அண்மையில் பவள விழா கண்ட அண்ணன் ஆர்.எஸ்.பாரதி அவர்களே,

நன்றியுரையாற்றவிருக்கின்ற மானமிகு வீர.கோவிந்தராஜ் அவர்களே,

இந்நிகழ்வில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் பங்கேற்று இதனை சிறப்பித்துக் கொண்டி ருக்கின்ற மாவட்டச் செயலாளர் வடிவழகன் அவர்களே,

துணைப் பொதுச்செயலாளர் தம்பி ரஜினிகாந்த் அவர்களே, தெற்கு மாவட்டச் செயலாளர் வி.த.செல்வன் அவர்களே, மயிலாடுதுறை மாவட்டச் செயலாளர் 

ப.ரவிச்சந்திரன் அவர்களே, நாகை மாவட்டச் செயலாளர் பொறுப்பு ப.கதிர்நிலவன் அவர்களே, தஞ்சை மய்ய மாவட்டச் செயலாளர் சொக்கா ரவி அவர்களே, தம்பி ஈழவளவன் அவர்களே, காரைக்கால் பொறுப்பாளர் தோழர் பொன்.செந்தமிழ்ச்செல்வன் அவர்களே, மண்டல அமைப்புச் செயலாளர் வழக் குரைஞர் ச.விவேகானந்தன் அவர்களே, இளஞ்சிறுத் தைகள் எழுச்சிப் பாசறையின் மாநில செயலாளர் குடந்தை தமிழினி அவர்களே, பட்டுக்கோட்டை சதா.சிவக்குமார் அவர்களே, மண்டல அமைப்புச் செயலாளர் வேலு.குணவேந்தன் அவர்களே, தலைமை நிலைய செயலாளர் ஆ.பாலசிங்கம் அவர்களே, தம்பி இரா.கிட்டு அவர்களே, உறவழகன் அவர்களே, பொன்.ஆசைத் தம்பி அவர்களே, தங்கத்தமிழ்ச்செல்வன் அவர்களே, வெற்றி அவர்களே மற்றும் இயக்கத்தின் முன்னோடி களே, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் நிர்வாகிகளே, தோழமை இயக்கங்களைச் சார்ந்த மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் பொறுப்பாளர்களே, கண்ணுக்கெட்டிய தூரம்வரை  கடலெனத் திரண்டிருக்கின்ற சனாதன எதிர்ப்பு ஜனநாயக சக்திகளே, என் உயிரின் உயிரான விடுதலைச் சிறுத்தைகளே உங்கள் அனைவருக்கும் என்னுடைய பணிவான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

10 மணிக்குள் இந்த மாநாட்டை நிறைவு செய்ய வேண்டும்; தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா அவர் களும் உரையாற்றவேண்டும். எப்படியாவது 8 மணிக்கு வந்துவிடலாம் என்று எவ்வளவோ முயன்றேன், இயலவில்லை. வந்தவாசியில் காலையில், புரட்சியாளர் அம்பேத்கரின் திருவுருவச் சிலை திறப்பு விழா நிகழ்வில் பங்கேற்று, அதனை முடித்துக்கொண்டு புறப்படுவதற்கே மாலை 4 மணி ஆகிவிட்டது.

ஆசிரியர் அய்யாவின் அன்புக் கட்டளை!

இரண்டொரு நாள்களுக்கு முன்புதான், ஆசிரியர் அய்யா அவர்கள் தொலைப்பேசியில் தொடர்புகொண்டு, திருவாரூர் மாநாட்டினை தள்ளி வைத்திருக்கின்றோம், மழை காரணமாக. நம்முடைய தி.மு.க. மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் அவர்களும் உங்கள் வரவை எதிர்பார்க்கிறார். ஆகவே, என்ன வேலை இருந்தாலும், எல்லா வேலைகளையும் தள்ளி வைத்து விட்டு, நீங்கள் திருவாரூர் வந்து சேருங்கள் என்று அன்புக் கட்டளையிட்டார்.

அய்யா அவர்களின் அன்புக் கட்டளையை ஏற்று, உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கின்றேன்.

சனாதன சக்திகளை விரட்டியடிக்கவேண்டிய பெரும் பொறுப்பு!

இது காலத்திற்குப் பொருத்தமான, தேவையான ஒரு நிகழ்வு. தமிழ்நாட்டையும், கேரளாவையும் தற்போது குறி வைத்திருக்கின்ற சனாதன சக்திகளை விரட்டியடிக்க வேண்டிய பெரும் பொறுப்பு இன்றைக்கு நம் முன்னால் ஒரு சவாலாக இருக்கிறது.

சனாதன சக்திகள் யார் என்பதை விளக்குவதற் காகவும், அண்ணன் தளபதி அவர்களின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற தமிழ்நாடு அரசு, ஒரு திராவிட மாடல் ஆட்சி என்பதை விளக்குவதற்காகவும், நம்முடைய தமிழர் தலைவர் அவர்கள், நம்முடைய தோழமைக் கட்சித் தலைவர்களையெல்லாம் அழைத்து, ஒருங்கிணைத்து, இம்மாநாட்டினை வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருக்கிறார்.

மழை வந்துவிடுமோ என்கிற அச்சத்தால், இந்தப் பிரம்மாண்டமான பந்தலைப் போட்டு, இன்றைக்கு நமக்குப் பாதுகாப்பாக உரையாற்றுகின்ற வாய்ப்பைத் தந்திருக்கின்றார்.

நேற்றைக்கு இங்கே இதே வீதியில் ஒரு ஊர்வலம் நடந்தது. அதனால், நேரத்திற்குள் இந்த இடத்தில் பந்தல் போட முடியாத ஒரு சூழல். இன்று காலை தொடங்கி, வேக வேகமாக இந்தப் பந்தலைப்போட்டு, இந்த மாநாட்டினை நடத்திக் கொண்டிருக்கின்றோம்.

எதையும் சாதிக்கக் கூடிய ஆற்றலுக்கு 

இது ஒரு சான்று!

எதையும் சாதிக்கக் கூடிய ஆற்றல் திராவிட முன் னேற்றக் கழகத்தைச் சார்ந்த தளபதிகளுக்கும், திராவிடர் கழகத்தைச் சார்ந்த தளபதிகளுக்கும் உண்டு என்பதற்கு இது ஒரு சான்று.

இந்த மாநாட்டுப் பந்தலும், இந்த மாநாட்டு எழுச்சியும். சனாதன சக்திகளுக்கு இது மிகப்பெரும் அச்சத்தை, நடுக்கத்தை ஏற்படுத்தும். அவர்கள் ஆயிரம், இரண்டாயிரம் பேரைத் திரட்டி, இதே இடத்தில் ஓர் ஆர்ப்பாட்டத்தை நடத்தி, ஏதோ சாதித்துவிட்டதுபோன்ற ஓர் இறுமாப்பில் இருக்கிறார்கள்.

தந்தை பெரியாரின் கருத்துகளும், அண்ணாவின் உரையும் ஏற்படுத்திய தாக்கம்!

எதற்காக அந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தினார்கள் என்றால், திருவாரூரில், இந்தத் தெற்கு வீதியில், தனது 13, 14 வயதில், அரசியல் என்றால் என்னவென்று தெரியாத அந்தப் பிஞ்சு வயதில், தமிழ் உணர்ச்சியும், தந்தை பெரியாரின் கருத்துகளும், அண்ணாவின் உரையும், தனக்கு ஏற்படுத்திய தாக்கத்தின் விளைவாக, 13, 14 வயதில் இந்தத் தெற்கு வீதிக்கு வந்து,

‘‘ஓடி வரும் இந்திப் பெண்ணே கேள் -

நீ நாடி வரும் நாடு இதுவல்ல -

திரும்பிப் போ!''

என்று அந்த 13 வயதிலே பாடிய கலைஞர், அன் றைக்கு அரசியலில் பதவிக்கு வருகின்ற நோக்கத்தோடு வீதிக்கு வந்தவர் அல்ல.

கவுன்சிலர் ஆக முடியும்; அல்லது சட்டமன்ற உறுப் பினராக முடியும் என்கின்ற கனவுகூட  அவருடைய அந்தப் பிஞ்சு  வயதில் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை.

தெற்கு வீதியில் நின்றுதான் இந்திக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார்!

ஆனாலும், அந்த வயதில், இந்தியை எதிர்க்க வேண்டும் என்கின்ற போர்க்குணம், பெரியார், அண்ணா ஆகியோரின் சிந்தனைகளால் ஒரு போராளியாக உருவெடுத்து, இந்த வீதியில் நின்றுதான், இந்திக்கு எதிராகக் குரல் கொடுத்திருக்கிறார்.

அவர்தான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அய்ந்து முறை ஆட்சியில் அமர்ந்திருக்கின்றார். அய்ம்பதாண்டு காலம் தமிழ்நாட்டு அரசியலின் தலைப்புச் செய்தியாக, தமிழ்நாடு அரசின் அச்சாணியாக விளங்கினார்.

13 வயதில், இப்படி ஒரு நிலையை எட்டுவோம் என்கின்ற எண்ணம் அவருக்கு இருந்திருக்காது.

சனாதனக் கும்பல்தான் 

தமிழ்நாட்டைக் குறி வைத்திருக்கிறார்கள்!

இன்றைக்குத் தமிழ்நாடு கண்டிருக்கும் இந்த மாற்றத் திற்கும், வளர்ச்சிக்கும் தலைவர் முத்தமிழ் அறிஞர் கலைஞர்தான் வித்திட்டார் என்பதை யாரும் மறுத்துவிட முடியாது.

அவருடைய பெயரை இந்தத் தெற்கு வீதிக்குச் சூட்டியது தவறு என்று ஒரு கும்பல் ஆர்ப்பாட்டம் நடத்தியதே, அந்தக் கும்பல்தான் சனாதனக் கும்பல். அந்த சக்திகள்தான் சனாதன சக்திகள். அந்த சனாதனக் கும்பல்தான் தமிழ்நாட்டைக் குறி வைத்திருக்கிறார்கள்.

திராவிட இயக்க அரசியலைத் தூக்கி எறிவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள்.

இந்த வீதிக்கு கலைஞரின் பெயரை வைக்கவேண்டும் என்று திருவாரூர் நகர மன்றம் தீர்மானம் நிறைவேற்றி இருக்கிறது.

அண்ணன் தளபதி அவர்களே, 

நாங்கள் உங்களோடு இருக்கின்றோம்!

அண்ணன் தளபதி அவர்களே, எதற்கும் தயக்கம் வேண்டாம்; எடுக்கின்ற முடிவின்படி, நீங்கள் முன்னேறிச் செல்லுங்கள்; வேகமாகச் செல்லுங்கள் என்று ஊக்க மூட்டுவதற்காகத்தான் தமிழர் தலைவர் அவர்கள் எங்களையெல்லாம் அழைத்திருக்கின்றார், நாங்கள் உங்களோடு இருக்கின்றோம்.

திருவாரூர் தெற்கு வீதி, இனி முத்தமிழ் அறிஞர் கலைஞர் வீதி என்று அழைக்கப்படும். நான் நின்று பேசுகின்ற இந்த வீதி, திருவாரூரில் இருக்கின்ற வீதி, முத்தமிழ் அறிஞர் கலைஞர் வீதி - சனாதன எதிர்ப்பு மாநாடு நடப்பது - முத்தமிழ் அறிஞர் கலைஞர் வீதி - திராவிட மாடல் ஆட்சியை விளக்குகின்ற மாநாடு நடப்பது - முத்தமிழ் அறிஞர் கலைஞர் வீதி - தமிழர் தலைவர் அய்யா ஆசிரியர் அவர்களின் தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த இந்த மாநாடு நடப்பது - முத்தமிழ் அறிஞர் கலைஞர் வீதி.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமைக் கட்சித் தலைவர்கள், அண்ணன் முத்தரசன் அவர்கள், தோழர் பாலகிருஷ்ணன் அவர்கள், அண்ணன் ஆர்.எஸ்.பாரதி அவர்கள், காங்கிரஸ் பேரியக்கத்தின் தலைவர் அண்ணன் அழகிரி அவர்களின் பிரதிநிதி அண்ணன் துரைவேலன் அவர்கள், அண்ணன் புரட்சிப் புயல் வைகோ அவர்களின் பிரதிநிதி செந்திலதிபன் அவர்கள், லட்சசோப லட்சக்கணக்கான விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் திருமாவளவன் - நின்று உரையாற்றுகிறோமே - உரையாற்றினோமே - உரையாற்றிக் கொண்டிருக்கின்றோமே, இந்த வீதி - முத்தமிழ் அறிஞர் கலைஞர் வீதி.

தமிழ்நாடு பெரியார் மண் - 

இங்கே யாருக்காகவும் 

அஞ்சத் தேவையில்லை!

நாளைக்கு இந்த இடத்தில், விடுதலைச் சிறுத்தைகள் இந்த வீதியை - முத்தமிழ் அறிஞர் கலைஞர் வீதி என்று எழுதுவார்கள். அண்ணன் தளபதி அவர்கள் பொறுத்துக் கொள்ளவேண்டும். யாருக்காகவும் பின்வாங்கவேண்டாம்; யாருக் காகவும் தயங்கவேண்டாம்; எதற்காகவும் அஞ்சவேண்டாம்; இந்த மண் பெரியார் மண் - இது பெரியார் மண் - இங்கே யாருக்காகவும் அஞ்சத் தேவையில்லை.

அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சவேண்டும்!

அச்சம் வேண்டும் -

அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது

அஞ்சல் அறிவார் தொழில்

திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார்.

அஞ்ச வேண்டியவற்றிற்கு அஞ்சவேண்டும். ஆங் கிலத்திலே அதற்கு Moral Fear என்று பொருள்.

ஒரு நீதி அச்சம் என்பது தேவை.

அஞ்சுவது அறிவார் தொழில் -

அஞ்சவேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால், இந்த அரைவேக்காடுகளுக்கு எல்லாம் அஞ்சவேண் டாம்; அற்பர்களுக்கெல்லாம் அஞ்சவேண்டாம்;  அற்பர் களின் அச்சுறுத்தலுக்காக அஞ்சவேண்டாம்; பெரியார் மண்ணை சனாதன மண்ணாக மாற்றுவோம் என்று கொக்கரிக்கக் கூடிய அந்தக் கும்பலுக்கு அஞ்ச வேண்டாம்.

13 வயதில், அந்த பிஞ்சு வயதில் இந்த மண்ணில், தமிழ்க் கொடி ஏந்தி, 

ஓடிவரும் இந்திப் பெண்ணே கேள் -

நீ நாடி வரும் நாடு இதுவல்ல

திரும்பிப் போ! 

என்று அன்றைக்கு அவர் திருப்பி விரட்டுகிற போராட்டத்தில், அன்றைக்கு அவர்கள் விரட்டாமல் இருந்திருந்தால், 

1938 இல் தந்தை பெரியார் தலைமையிலே இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடக்காமல் இருந்திருந்தால்,

1965 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டம் நடக்காமல் இருந்திருந்தால்,

இன்றைக்கு நாம் இந்தி பேசக்கூடியவர்களாக மாறியிருப்போம்; மோடியின் அடிவருடிகளாக மாறி யிருப்போம்.

(தொடரும்)


No comments:

Post a Comment