அரசியல் திருப்பம் : நாளை டில்லியில் ராகுல் - நிதிஷ்குமார் - கெஜ்ரிவால் சந்திப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 4, 2022

அரசியல் திருப்பம் : நாளை டில்லியில் ராகுல் - நிதிஷ்குமார் - கெஜ்ரிவால் சந்திப்பு

புதுடில்லி, செப்.4 பாஜகவிற்கு எதிராக எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைப்ப தற்காக பீகார் முதலமைச்சர் திங் களன்று டில்லி செல்கிறார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் முக்கிய கட்சியாக இருந்த அய்க்கிய ஜனதா தளம் சமீபத்தில் கூட்டணியை விட்டு வெளியேறியது. இந்த கட்சியின் தலைவரும், பீகார் முதலமைச்சருமான நிதிஷ் குமார், ராஷ்டிரீய ஜனதாதளம், காங்கிரஸ் கட்சிகளுடன் இணைந்து புதிய அரசை அமைத்தார். பாஜக வுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட அவர், 2024ஆ-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவிற்கு எதிராக எதிர்க் கட்சி கூட்டணியை உருவாக்கப் போவதாகவும் அறிவித்தார். இதற்கான பணிகளையும் அவர் மேற்கொண் டுள்ளார். இது ஒருபுறம் இருக்க, மணிப்பூரில் அய்க்கிய ஜனதாதளம் சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்த 6 சட்டமன்ற உறுப்பினர்களில் 5 பேர் பாஜகவில் இணைந்துவிட்டனர். தங்கள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் களை பாஜக அபகரித்திருப்பது நிதிஷ்குமாருக்கு பெரும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக  செய்தியாளர் களிடம் பேசிய அவர், பாஜகவை கடு மையாக சாடினார். அவர் கூறுகையில், 'மற்ற மாநிலங்களில் கூட்டணியில் உள்ள அய்க்கிய ஜனதாதளம் சட்ட மன்ற உறுப்பினர்களுக்கு பா.ஜ.க. எந்த பதவியும் வழங்கவில்லை. இதனால் அவர்கள் கட்சியை விட்டு வெளி யேறினர்' என தெரிவித்தார்.

முன்பு எப்போதும் இல்லாத வகை யில் இது ஒரு முற்றிலும் வேறுபட்ட புதிய கலாச்சாரமாக இருப்பதாகவும், அரசியல் சாசனத்துக்கு எதிரான இந்த நடவடிக்கை பா.ஜ.க.வின் குணத்தை காட்டுவதாகவும் கூறினார். அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்தால் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் சிறப்பாக இருக்கும் என கூறிய நிதிஷ்குமார், 5-ஆம் தேதி (நாளை) டில்லி செல்ல இருப்பதாகவும் தெரிவித்தார்.

 நிதிஷ்குமாரின் 3 நாள் டில்லி பயணத்தின்போது, பல்வேறு எதிர்க் கட்சித் தலைவர்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி இருக் கிறது. அந்த வகையில் காங்கிரஸ் தலைவர் சோனியா மற்றும் ராகுல், டில்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரிவால் மற்றும் இடதுசாரி தலைவர்களையும் சந்தித்து பாஜகவிற்கு எதிராக அணி திரட்டும் முயற்சியில் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. 

இதற்கிடையே அய்க்கிய ஜனதா தளம் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் நேற்று (3.9.2022) நடந்தது. இதன் தொடர்சியாக தேசிய கவுன்சில் கூட்டம் இன்றும் நடைபெறுகிறது. 

2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் வியூகங்களை வகுப்பது குறித்து இந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்படுவதாக கூறப்படு 

கிறது.


No comments:

Post a Comment