கடவுள் சக்தி இவ்வளவுதானா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 9, 2022

கடவுள் சக்தி இவ்வளவுதானா?

கிரகணங்களையொட்டி திருப்பதி கோயில் மூடப்படுகிறதாம்

திருப்பதி, செப்.9- சூரிய கிரகணம், சந்திர கிரகணம் உள்ளிட்ட வானியல் நிகழ்வுகளுக்கு அறிவியல் பூர்வமான விளக்கங்கள் உள்ளன. மேலும், அந்த நேரங்களில் உணவு உட்கொள் ளக்கூடாது என்கிற மூடத்தனங்கள் மக்களி டையே பரப்பப்பட்டு வந்துள்ளன. அதனை முறியடிக்கும் பகுத்தறிவு செயல் விளக்கங் களை திராவிடர் கழகம் தொடர்ந்து செயல் படுத்திக்காட்டி வருகிறது.

எவ்வளவு அறிவியல்பூர்வமான தகவல் கள் வெளியானாலும், அவற்றை சிறிதும் பொருட்படுத்தாமல் பழைமையில் மூழ்கிக் கிடப்பதும், மக்களை பழைமைச் சேற்றி லேயே மூழ்கடித்து அறிவுக்கு வேலை கொடுக்காமல் பகுத்தறிவுக்கு முட்டுக்கட்டை போட்டுவருவதே பக்தி, மதம் பெயரால் தொடர்ந்து வருகிறது. கல்வி அறிவற்றவர்கள், கல்வி பெற்றவர்கள் என்கிற பேதங்கள் ஏது மின்றி பகுத்தறிவு இல்லையென்றால் எல்லாம் பாழ் என்பதுதான் நிரூபணமாகி வருகிறது.

கடவுள், பக்தியின் பெயரால் மத நிறு வனங்களாக உள்ள தேவஸ்தானங்கள், மடங் கள், கோயில்களில் இதுபோன்ற மூடத்தனங் கள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருவதும், அப்பாவி மக்களை சிந்திக்க விடாமல் மூடத் தனங்களை அவர்களிடையே திணித்து வரு வதும்தான் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் வெளியிட்ட தகவலின்படி, வரும் அக்டோபர் 25 ஆம் தேதி மாலை 5.11 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சூரிய கிரகணம் நிகழ்கிறது. எனவே அக்டோபர் 25 ஆம் தேதி திருப்பதி ஏழுமலையான் கோவில் கதவுகள் காலை 8.11 மணியில் இருந்து இரவு 7.30 மணிவரை 11  மணிநேரம் மூடப்பட்டு இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல நவம்பர் 8-ஆம் தேதி மதியம் 2.39 மணியில் இருந்து மாலை 6.27 மணி வரை சந்திர கிரகணம் நிகழ்வதை ஒட்டியும், அன்று காலை 8.40 மணியில் இருந்து இரவு 7.20 மணி வரை 10 மணிநேரம் கோயில் மூடப்பட்டு இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அரசமைப்புச்சட்டம் பிரிவு 51 (ஏ-எச்) கூறுகின்ற அறிவியல் மனப்பான்மையை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை அனை வருக்கும் உண்டு என்பதை ஏனோ மறந்து விடுகிறார்கள்.

No comments:

Post a Comment