நூல் மதிப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

நூல் மதிப்புரை


இந்து மதத் தத்துவமும் மனுதர்மமும்

டாக்டர் பி. ஆர். அம்பேத்கர்

 பெரியார் சுயமரியாதை பிரச்சார நிறுவன வெளியீடு -  முதல் பதிப்பு 1998 

 பக்கங்கள் 60 - நன்கொடை ரூ. 45

  •  இந்தியாவின் இணையற்ற சிந்த னையாளர் டாக்டர் அம்பேத்கர்! 
ஜாதியின் கொடுமைகளை, தானே அனுபவித்தவர். தாழ்த்தப்பட்ட சமூகத் தினருக்காக தனது கல்வியையும் அறிவை யும் பயன்படுத்தி அவர்களை அடிமைத் தளையிலிருந்து விடுவிக்க தன் வாழ் நாளை அர்ப்பணித்தவர்!

  • தென்னகத்தின் தந்தை பெரியாரும் வடபுலத்தின் டாக்டர் அம்பேத்கரும் ஒரே கொள்கைக்காக பாடுபட்டவர்கள்! சமத்துவம், சகோதரத்துவம், சுதந்திரத்திற் காக குரல் கொடுத்தவர்கள் . இருவரும் வர்ணாசிரமம், மனுநீதிக்கு எதிராக போராடியவர்கள்! 
பெரியாரும் அம்பேத்கரும் மனுநீதி நூலை எரித்து சரித்திரம் படைத்தவர்கள்!
  •  இந்த சிறிய நூலில் - அம்பேத்கரின் நூல் தொகுப்பு 6ஆம் தொகுதியிலிருந்து, வர்ணாசிரமத்தை அதிகார பூர்வமாக கூறி டும், ' மனுஸ்மிருதி ' பற்றி அம்பேத்கர் விளக் கமாக தந்துள்ள கருத்துக்களை தொகுத்து ஒரு ஆவணமாக தரப்பட்டு நீள்ளது!
நூலின் பொருளடக்கம் :
சமூக சமத்துவத்தை இந்து மதம் அங்கீகரிக்கிறதா? | மனுவின் மத சமத்துவ மின்மை: சான்றுகள் | இந்து மதத்தில் சுதந்திரம் இல்லை | இந்து மதம் சகோ தரத்தை ஏற்கிறதா? | இந்து சமூக அமைப் பில் பிராமணர்க்குரிய நிலைபற்றி மனு |

  •   சமூக சமத்துவத்தை இந்து மதம் அங்கீகரிக்கிறதா ? என்ற கட்டுரையில் அம்பேத்கர் மிகத் தெளிவாக விளக்கு கிறார் - "பல்வேறு ஜாதிகளும் ஒரே தரத் தில் கிடைமட்ட வரிசையில் அருகருகே அமர்த்தப்படவில்லை! பல்வேறு சாதிக ளும் ஒன்றன் மீது ஒன்றாக செங்குத்தான வரிசையில் அமர்த்தப் பட்டதொரு அமைப்பு! " 
  •   " இந்த வருணத்தின் புனிதத்து வத்தை மனு போதித்தார்! ஆகவே வரு ணமே  ஜாதி அமைப்பின் தாய்! ஜாதியின் தோற்றத்திற்கான கர்த்தாவாக மனு விளங் கினார்! " ... மனித நேயத்தோடு சிந்திக்கும் எவரும் ஏன் மனுநீதியை எதிர்க் கின்றார்கள் என்பதற்கான காரணம் இதுவே!
  • அம்பேத்கர் மேலும் விளக்குகிறார் - " மனுவின் திட்டப்படி பிராமணன் முதல் தரத்தில் வைக்கப்பட்டான் . அதற்கு அடுத்து க்ஷத்திரியர். அவருக்கு கீழே வைசியர். அவருக்கு கீழே சூத்திரர்கள் . சூத்திரர்க்கும் கீழே ஆதி சூத்திரர்கள் ( தீண்டாதவர் ) " ...
  •  " இந்த தரவரிசை அமைப்பானது சமத்துவமற்ற கோட்பாட்டினை எடுத்து ரைப்பதாகும் . எனவே இந்து மதம் சமத்து வத்தை அங்கீகரிக்கவில்லை! " ..இந்த கார ணத்தினால்தான் அம்பேத்கர் இந்து மதத்தை வெறுத்து புத்த மதத்தை தழு வினார்! 
அம்பேத்கரின் மத மாற்றத்திற்கு மனுநீதி காரணமில்லையா ?

  •   டாக்டர் அம்பேத்கர் இந்த கட்டு ரைகளில் சான்றுகளாக தந்த மனுநீதி சுலோகங்களில் சிலவற்றை அதன் தொகுதி மற்றும் சுலோக வரிசை எண்ணுடன் தந்துள்ளேன் .
இன்றைய பார்ப்பனீய ஆதரவு மன நிலையில் உள்ளோருக்கு, இந்த ஆதாரங்கள் பதில் சொல்லட்டும்!

  •   சூத்திரன் இருபிறப்பாளரை ( பிராம ணரை) கடுஞ் சொற்களால் நிந்தித்தால், அவன் நாக்கை அறுக்க வேண்டும்! ஏனெனில் பிரமனின் கீழான பாகத்தில் (பாதத்தில் ) அவன் பிறந்தவன்! - (8 : 270)
  •   பிராமணன் எத்தகைய பாவமோ கலப்போ செய்த போதிலும் அவனைக் கொல்லக் கூடாது! ஏனையோருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! - ( 8 : 379 )
  • பிராமணனைக் கொல்வதைவிட உலகத்தில் பெரியதொரு பாவம் வேறு இல்லாததால், பிராமணனைக் கொல்வது பற்றி அரசன் மனதளவில் நினைக்க கூடாது! - ( 8 : 381 )
  • சூத்திரன் தன்னால் பொருள் திரட்ட முடியும் போதும் அவ்வாறு திரட்டி செல்வம் சேர்க்க கூடாது! ஏனெனில் செல்வந்தனான சூத்திரன் பிராமணர்களுக்கு துன்பம் தரு கிறான்! - ( 10 : 129 )
  •   வேதம் கற்றலும் கற்றுத்தரலும் கட வுளால் பிராமணர்களுக்காக ஒதுக்கப்பட்ட வையாகும்! - ( 1 : 88 )
  • சூத்திரர்கள் முன்னிலையில் இரு பிறப்பாளர் வேதத்தை படித்துக் காட்ட கூடாது! - ( 4 : 99 )
  •  சூத்திரன் மனப்பாடம் பண்ணும் நோக்கத்துடன் வேதம் படிப்பதை கேட்டால், அவனது காதுகளில் காய்ச்சிய ஈயத்தையும் அரக்கையும் ஊற்ற வேண்டும்! வேதத்தில் முழுத் தேர்ச்சி அடைந்தால் அவனது உடம்பை துண்டு துண்டாக வெட்டிச் சிதைக்க வேண்டும்! - ( 12 : 4 )
  •  பார்த்தீர்களா மனுவின் ஜாதி வெறியை! பார்ப்பனீயத்தின் கொடூரமான முகம் தான் மனுநீதி! சூத்திரன் வேதம் படித்து விடக்கூடாது என்பதற்காக தான் அவனை அர்ச்சகராக அனுமதிக்க மறுக் கிறார்கள்.. பார்ப்பனர்கள் சொல்லும் ஆகம விதிகள் என்பது மனுநீதியையும் சேர்த்து தான்! 
  • பிராமணர்கள் மனுநீதி நூலுக்கு ஏன் வக்காலத்து வாங்குகிறார்கள் என்றால் - மனுநீதி சாஸ்திரங்களில் அவர்களை இமயத்தின் உச்சியில் உட்கார வைத்து மற்ற ஜாதியினரை அவர்களுக்கு அடி பணிய செய்கிறது.. ஜாதிய ஏற்றத்தாழ்வை ஒரு கட்டுக் கோப்பான நிறுவனமாக்கியது மனுநீதியே!
  • மனுநீதி கூறுகிறது - பிறவியினால் உயர்ந்த இடத்திலிருந்து தோன்றியதாலும், உயர்ந்த குலத்தாலும், வேதங்களை பிழையறக் கற்றுணர்ந்த அறிவினாலும், பூணூல் தரித்த சிறப்பினாலும், பிராமணன் அனைத்து வருணத்தாருக்கும் தலைவனாக உள்ளான்! - ( 10 : 3 )
  •  அரசன் காலையில் துயிலெழுந்து, மூன்று வேதங்களையும் அற நூல்களையும் ஆய்ந்துணர்ந்த பிராமணரை வணங்கி, வழிபட்டு, அவர் அறிவுரையை பின்பற்றி நடப்பானாக! - ( 7 : 37 )
  •  இவ்வாறு சூத்திரர்களை அடிமைக ளாகவும் பிராமணர்களை அரசருக்கும் மேலாக வைத்து, சமூக அமைப்பை கட்டி காத்து வருவது மனுநீதி சாஸ்திரம் என்பதை அம்பேத்கர் பல ஆதாரங்களோடு விளக்கு கிறார்! 
  • இறுதியாக இந்து மதம் பற்றி டாக்டர் அம்பேத்கர் சொன்னதை கேளுங்கள் :
" இந்து மதத்தின் தத்துவம் இத்தகை யதுதான்! அது உயர்ந்த ஜாதி மனிதனின் சொர்க்கம் ; சாமானிய மனிதனின் மீள முடியாத நரகம்! " ...
தி  வர்ணாசிரமம் பற்றி நச்சென்று நாலு வரிகளில் நான் சொல்வது :
தி பிறப்பின் போதே ஜாதியை திணித்தது - வர்ணாசிரமம்!
திபிறந்த பிறகோ ஜாதியால்
பிரித்தது - வர்ணாசிரமம்!
தி சனாதனம் சாஸ்திரங்கள் 
தந்ததோ - வர்ணாசிரமம்!
தி வர்ணாசிரம சாஸ்திரங்கள்
தருவதோ - வாழ்வில் சிரமம்!

- பொ. நாகராஜன்,
பெரியாரிய ஆய்வாளர்,

No comments:

Post a Comment