வழக்கம்போல் விநாயகர் ஊர்வலத்தில் கல் வீச்சு - திருச்சியில் மோதல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 4, 2022

வழக்கம்போல் விநாயகர் ஊர்வலத்தில் கல் வீச்சு - திருச்சியில் மோதல்

திருச்சி, செப்.4 சிறுகனூர் அருகே விநாயகர் சிலைகள் ஊர்வலத்தின் போது கல்வீசியதால் 20 பேர் காயம் அடைந்தனர். அங்கு பதற்றம் ஏற்பட்டதால் காவலர்கள் குவிக்கப்பட்டனர்.  திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள குமுளூரில் விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி 3 இடங்களில் ஒரு பிரிவினர் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடு நடத்தினர். அந்த சிலைகளை கரைப்பதற்காக உடையார் தெரு வழியாக புஞ்சை சங்கேந்தி பகுதியில் உள்ள நீர் நிலைக்கு மேளதாளங்களுடன் ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். இந்தநிலையில் மற்றொரு பிரிவை சேர்ந்தவர்கள் விநாயகர் சிலைகளை உடையார்தெரு வழியாக எடுத்து செல்லக்கூடாது என்று தெரிவித்தனர். இதனால் இருபிரிவினர் இடையே வாக்குவாதமாகி மோதல் ஏற்பட்டது. அப்போது சிலர் கற்களை வீசினர். இதனால் ஊர்வலத் தில் பங்கேற்றவர்கள் நாலாபுறமும் சிதறி ஓடினர்.   இந்த சம்பவத்தை தொடர்ந்து அங்கு பதற்றம் ஏற்பட்டது. இதில் கல்வீசியதில் 

20-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர். இதனையடுத்து காயம் அடைந்தவர்கள் லால்குடி மற்றும் சிறீரங்கம் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். தகவல் அறிந்த சிறுகனூர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். 

மேலும் அசம்பாவித சம் பவங்கள் நடைபெறாமல் தடுக்கும் வகையில் அங்கு ஏராளமான காவல் துறை பாதுகாப்பு பணிக்காக குவிக்கப் பட்டனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.


No comments:

Post a Comment