ரேஷன் கடைகளில் 'கூகுள் பே' - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 4, 2022

ரேஷன் கடைகளில் 'கூகுள் பே'

சென்னை, செப்.4 தமிழ்நாட்டில் உள்ள ரேசன் கடைகளில் யுபிஅய் வசதி மூலம் பணம் செலுத்தி பொருட்களை வாங்க கூகுள் பே மற்றும் பேடிஎம் வசதிகள் அறிமுகம் செய்து படிப்படிப்படியாக விரி வாக்கம் செய்யப்படும் என்று கூட் டுறவுத்துறை அமைச்சர் அய்.பெரிய சாமி  தெரிவித்தார். மேலும், ஓவ் வொரு மாவட்டத்துக்கும் 10 கடைகளை மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

இது குறித்து தமிழ்நாடு கூட்டுறவுத்துறை அமைச்சர் அய்.பெரியசாமி செய்தியாளர்களிடம் பேசியதாவது: தமிழ்நாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே மற்றும் பேடிஎம் வசதிகள் ஏற்படுத்தப்படும்.தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டத்திலும் 10 நியாயவிலைக் கடைகளை மாதிரி நியாயவிலைக் கடைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ்நாட்டில் உள்ள குறிப்பிட்ட நியாயவிலைக் கடைகளில் எல்.பி.ஜி சமையல் எரிவாயு உருளை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். 5 கிலோ மற்றும் 2 கிலோ எடையுள்ள எரிவாயு உருளைகளின் விற்பனை விரைவில் தொடங்கும்.

மக்களின் வசதிக்காக, நியாயவிலைக் கடைகளில் கூகுள் பே மற்றும் பேடிஎம் வசதி அறிமுகம் செய்து படிப்படியாக விரிவாக்கம் செய்யப்படும்.

அத்தியாவசியப் பொருள்களை வாங்க, நியாயவிலைக் கடைகளுக்கு 2 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்க வேண்டிய நிலை பொதுமக்களுக்கு இல்லாமல் தடுக்கும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.” என்று கூட்டுறவுத் துறை அமைச்சர் அய். பெரியசாமி கூறினார்.

யானை தந்தத்தால் ஆன சிற்பத்தின் பாகம் கண்டெடுப்பு

 அரியலூர், செப்.4  அரியலூர் மாவட்டம், கங்கை கொண்ட சோழபுரம் அருகே உள்ள மாளிகைமேடு பகுதியில் தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணி நடந்து வருகிறது. இந்த பணியின்போது கடந்த மார்ச் மாதம் 

4-ஆம் தேதி பழங்கால தங்கக்காப்பு கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மார்ச் 25-ஆம் தேதி பழங்கால மண்பானை, மண்ணாலான கெண்டி செம்பின் மூக்குப்பகுதி மற்றும் ஏற்கெனவே கண்டுபிடிக்கப்பட்ட அரண்மனையின் தொடர்ச்சியாக 22 அடுக்கு கொண்ட செங்கல் சுவரும் கண்டுபிடிக்கப்பட்டது. 

 இதன் தொடர்ச்சியாக 2.9.2022 அன்று யானை தந்தத்தால் ஆன மனித உருவ சிற்பத்தின் பாகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்த சிற்பத்தின் பாகம் இடுப்பின் கீழ் பகுதியில் இருந்து கால்கள் வரை உள்ளது. அதன் உயரம் 1.8 செ.மீட்ட ரும், அகலம் 1.5 செ.மீட்டரும்,  எடை 1 கிராம் 100 மில்லி அளவிலும் உள்ளது. சோழர்களின் கலையை பின்பற்றி, அக்காலத்தில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத் தக்கது. இதில் அணிகலன்கள், ஆடை அலங்காரங்கள் போன்ற அமைப்பு களும் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று தொல்லியல் துறையினர் தெரிவித்தனர். 


சிறு தொழில் முனைவோர்களுக்கான மின்னணு செயலி அறிமுகம்

சென்னை, செப்.4 சிறு வியா பாரிகளுடன் நுகர்வோரை செயலி மூலமாக இணைக்கும்  பைசாடோ  என்ற புதிய மின்னணு செயலி துவக்கவிழா சென்னையில் நடை பெற்றது. இதில் பேசிய வணிகர் சங்க பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, பெருநிறுவனங்களின் வர்த்தக நட வடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ள சிறு வியாபாரிகளுக்கு தொடர்ந்து வர்த்தக வாய்ப்புகளை வழங்க இந்த செயலி பயன்படும் என்றார். 

இந்தசெயலியால் வியாபரிகளும் நுகர்வோரும் பயனடைவார்கள்  பெரும்பாலான செயலிகள் அல்லது யுபிஅய் கட்டண செயலிகள், வாடிக்கையாளர்களுக்கு வவுச்சர்கள், 'கேஷ்பேக்' கூப்பன்கள் மற்றும் 'பாயிண்ட்ஸ்' அடிப்படையில் கேஷ் பேக்கை வழங்குவதாக அறிவித் தாலும் அதற்காக அவை விதிக்கும் நிபந்தனைகள் அதிகம் என்று பைசா டோவின் நிறுவனர் தீபக் கூறினார்.  இந்த செயலியை மற்றவர்களுக்கு பரிந்துரைத்தால் பரிந்துரைத்த நபருக்கு புள்ளிகள் அடிப்படையில் குறிப்பிட்ட தொகை தொடர்ந்து கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.  சென்னை ஆபரணங்கள் விற்பனையாளர்கள்  சங்கத்தின் தலைவர் ஜெயந்திலால் சல்லானி, தென் மண்டல ரீடெய்லர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா சில்லறைப்பிரிவு தலைவர்  டி.வெங் கடராமன் மற்றும் அடையார் ஆனந்த பவன் நிர்வாக இயக்குநர் கே.டி.சிறீனிவாச ராஜா உள்ளிட் டோர் பைசாடோ-வின் செயலியை அறிமுகப் படுத்தினார்கள்.


No comments:

Post a Comment