பெரியார் சிலையை அகற்றுவது குறித்து ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியது சரியா...?! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

பெரியார் சிலையை அகற்றுவது குறித்து ஸ்டன்ட் மாஸ்டர் கனல் கண்ணன் பேசியது சரியா...?!

“நான் சொல்கிறேன் என்பதற்காக அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டிய தில்லை. நான் சொல்வது பற்றி நீ சிந்தித்து, உன் அறிவுக்கு சரியெனப்பட்டதை மட் டும் ஏற்றுக்கொள்’’ என்று சொன்ன சிந்தனையாளர் தந்தை பெரியார். 

எந்தக் கருத்தையும் சொல்லக்கூடாது என்று நினைப்பவர்கள் பாசிஸ்ட்டுகள். சினிமாவில் மார்க்கெட் போன கனல் கண்ணன், தன் பிழைப்புக்காக ஏதோ ஒரு பக்கம் ஒதுங்கி, அங்கே சொல்லிக் கொடுத்ததை மேடையில் பேசியிருக் கிறார். 

திருவரங்கம் கோவில் தெற்கு ராஜ கோபுரம் உள்ள தெருவில் பெரியாருக்கு உரிய அரசு அனுமதியுடன் அன்றைய முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட சிலை இருக்கிறது. கடவுள் இல்லை என்று சொன்னவரின் சிலை அங்கே இருப்ப தால் கோவிலுக்கு வரும் லட்சக்கணக் கான பக்தர்களின் மனதைப் புண்படுத்து கிறதாம், அந்தச் சிலை அகற்றப்படும் போதுதான் இந்துக்களிடம் எழுச்சி ஏற்படுமாம். இதுதான் மார்க்கெட் போன மாஜி ஸ்டன்ட் மாஸ்டரின் பேச்சு. 

அவர் உள்பட பெரும்பான்மையான இந்துக்களை சூத்திரன் என்றும், பஞ்சமன் என்றும் இழிவுபடுத்தி, காலம் கால மாக மனதைப் புண்படுத்திக் கொண்டி ருப்பதைப் பெரியார் கேள்வி கேட்டார். இந்துத்வா சக்திகளின் ஆட்சியில் மாட் டுக்கறி சாப்பிட்டதாகக் கூறி அதே இந் துக்கள் உடல்ரீதியாகவும் புண்படுத்தப் பட்டு, துன்புறுத்தப்படுகிறார்கள். இந்துக் கள் மீது அக்கறை இருந்தால் கனல் கண்ணன் இது பற்றி பேசியிருப்பார். ஆனால், கடவுள் இல்லை என்ற பெரியார் தான் இதைப் பேசினார். திருவரங்கம் கோவிலுக்குள் அல்ல, கோவில் கரு வறைக்குள்ளும் கனல் கண்ணன் போன் றவர்கள் நுழையும் உரிமை வேண்டும் என்று போராடி, இன்று அது சட்டமா னதற்குக் காரணமும் அதே பெரியார் தான்.

- ‘நக்கீரன்', 10.8.2022

 

No comments:

Post a Comment