பசுப்பாதுகாப்பு என்ற வேடம் நமக்கு மட்டும் தான் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

பசுப்பாதுகாப்பு என்ற வேடம் நமக்கு மட்டும் தான்

பசுப்பாதுகாவலர் கள்ளப்பணம் புகழ் சாமியார் ராம்தேவ் தனது பதஞ்சலி நிறு வனம் சார்பில் வளைகுடா மற்றும் இந்தி யர்கள் அதிகம் வசிக்கும் அய்ரோப்பிய நாடுகளுக்கு மாட்டிறைச்சி பிரியாணி மசாலா ஏற்றுமதி செய்கிறார். 

மங்களூரில் ஒரு விவசாயி தனது மகளின் திருமண நிச்சயதார்த்த விழாவிற்கு தனது நெருங்கிய உறவினர்களுக்கு மாட்டிறைச்சி விருந்து கொடுத்தார். அது பொதுவாக அந்த ஊரில் நடப்பதுதான், ஆனால் இம்முறை மாட்டிறைச்சி விருந்து கொடுத்த விவசாயி, அவருக்கு மாட்டி, றைச்சி கொடுத்த ஜெயராம் ஹனந்து, மற்றும் தியானேஷ் பஞ்சாரா என்ற மூவர் மீதும் அப்பகுதி ஹிந்து அமைப்பு புகார் கொடுக்க மத நம்பிக்கைகளை புண்படுத்தி விட்டதாக அவர்களைக் கைதுசெய்து நீதி மன்றத்தில் நிறுத்தி 14 நாள் சிறைக்காவலும் வாங்கிகொடுத்துவிட்டனர். 

ஆனால் இவர்கள் எல்லாம் புனிதர் என்று நினைக்கும் சாமியார் ராம் தேவ் ஆஸ்திரேலியா, அய்ரோப்பா மற்றும் வளைகுடாநாடுகளில் வாழும் ஹிந்துக்கள் சுவையாக செய்து உண்பதற்காக மாட்டி றைச்சி பிரியாணி மசாலா ஏற்றுமதி செய் கிறார். 

இந்தியர்களைத் தவிர வெளிநாட்டவர் கள் பிரியாணி உணவில் மசாலாத்தனம் அதிகம் இருப்பதால் மிகவும் அரிதாகவே சாப்பிடுவார்கள். ஆனால் வெளிநாட்டு வாழ் ஹிந்துக்களுக்கு இந்தியாவின் உணவு என்றாலே மாட்டிறைச்சி பிரியாணிதான். அவர்களின் விருப்பத்தை முழுமையடைய செய்யும் வகையில் சாமியார் ராம் தேவ் மாட்டிறைச்சி பிரியாணி மசாலா ஏற்றுமதி செய்கிறார்.

No comments:

Post a Comment