நவீன தீண்டாமை - சைவ ரயில் பெட்டிகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 24, 2022

நவீன தீண்டாமை - சைவ ரயில் பெட்டிகள்

‘சாத்விக் கவுன்சில் ஆப் இந்தியா’ என்ற தனியார் நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்தும் கேரளாவின் வடக்குப் பகுதியில் இருந்தும் மும்பையில் செட்டில் ஆன பெரும் பணக்கார ஆச்சாரமிக்க பார்ப்பனர்களால் உருவாக்கப்பட்ட நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் பழங் கால வேதக் கொள்கை களின் அடிப் படையில் உணவுத் தரநிலை களை உருவாக்குவதற்காகவும் ஹிந்து கலாச்சாரம் உணவுவகைகளை மீண்டும் அனைவரிடமும் கொண்டு செல்லும் கொள்கையை கொண்டு செயல்படும் அமைப்பு என்றும் கூறிக் கொள்கிறது. 

இந்த நிறுவனத்துடன்தான், ‘சுத்த சைவ அனுபவத்தை பயணிகளுக்குத் தருகி றோம்’ என்ற பெயரில், இந்திய ரயில்வேயின் அய்.ஆர்.சி.டி.சி. கரம் கோர்த்துள்ளதாக கூறப்படுகிறது. ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட சில ரயில்களில் ஏற்கெனவே சைவ உணவு ஏற்பாடு உள்ளது.

 இந்நிலையில், புனித தலங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு மட்டுமன்றி, சோப்புகள் மற்றும் பிற பொருட் களும் சைவப் பொருட் களாக இருக்கும்; உணவு பரிமாறும் பணியாளர்கள் அசைவ உணவைக் கையாள மாட்டார்கள், அவர்கள் தயாரிக்கும் சமையலறையில் சைவப்பொருட்களைத் தவிர வேறு எதையும் கையாள அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. 

அவ்வளவு ஏன், இந்த ரயில்களில் பணியாற்றும் துப்புரவு முகவர்கள் கூட சைவத்தைக் கையாள்பவர்களாகவே இருப்பார்கள் என்று ‘சாத்விக் கவுன்சில் ஆப் இந்தியா’வின் நிறுவனர் அபிஷேக் விஸ்வாஸ் தெரிவித்துள்ளார். இதன்படி, வந்தே பாரத்தில் தொடங்கி, ஜம்மு -காஷ் மீரில் உள்ள கட்ரா வரை புனித இடங்க ளுக்குச் செல்லும் சில ரயில்களுக்கு, சாத் விக் கவுன்சில் தொண்டு நிறுவனத் தின் சுத்த சைவச் சான்றிதழை அய்.ஆர்.சி.டி.சி. பெறும். புனிதத் தலங்களுக்கு ரயிலில் பயணம் செய்வோர் அய்.ஆர்.சி.டி.சி.-யை நம்பலாம். அவர்கள் உங்களுக்கு சுத்தமான சைவ அனுபவத்தை தருவார்கள் என்று சாத்விக் கவுன்சில் ஆப் இந்தியா பயணிக ளுக்கு உத்தரவாதம் வழங்க உள்ளது.

ரயில்களுக்கு சான்றளிக்க மட்டும் அல்லாது; எதிர்காலத்தில் டில்லி மற்றும் கட்ராவில் உள்ள உணவு விடுதிகள் சுத்த சைவமாக இருக்கும் என்றும் அய்.ஆர். சி.டி.சி. கூறுகிறது

இந்த ரயிலில் பயணிப்பவர்கள் வெளி யில் இருந்து உணவைக்கூட ஆர்டர் செய்ய முடியாது. கொண்டுவரவும் கூடாது. சமையல் முறை, சமையலறைகள், பாத்திரங் கள், உணவு வைத்திருக்கப்படும் முறை ஆகியவற்றை சோதித்த பின்னர் சான்றிதழ் வழங்கப்படும் என்று இந்திய சாத்வீக மன்றம் கூறியது. இன்னும் 18 ரயில்களில் சைவ உணவு முறையைக் கொண்டு வரத் திட்டமுள்ளதாக மன்றம் தெரிவித்துள்ளது. தற்போது தென்னக ரயில்வேயிலும் ஆன்மீக சுற்றுலா ரயில்களில் சுத்த சைவ முறை அதாவது நவீன தீண்டாமை ரயில் வலம் வர உள்ளது. 

இவர்களது சுத்த சைவ ரயில் கோரிக்கை ஆங்கிலேயர்களால் நிரகரிக்கப்பட்ட வர லாறு உண்டு. இந்தியாவில் ஆங்கில அரசில் இரயில்வே துறை துவக்கப்பட்டு தொடர் வண்டிகள் ஓடத் துவங்கியபோது, கரும்புகையோடு வருவதை அபசகுனம் என்றும் தீயவர்களின் கண்டுபிடிப்பு என்று சொல்லி எதிர்த்த கூட்டம் தான் இந்த பார்ப்பன கூட்டம்

1851இல் முதல்முறையாக பாம்பே இர யில்வே துறை துவக்க திட்டம் அறிவிக்கப் பட்டது. 1853 ஏப்ரல் மாதம் பாம்பே போரி பந்தர் நிலையத்திலிருந்து தானே நிலையத் திற்கு முதல் முதல் ரயில் ஓடியது

இப்போது மதராஸ் என்று அழைக்கப் பட்ட சென்னையில் இருந்து ஆற்காடு வரை 1856 ஜூலை மாதம் முதல் ரயில் இயக்கப்பட்டது. அடுத்து மதராஸ் -இல் இருந்து 1871இல் அரக்கோணம் வரையும் 1883 மேட்டுப்பாளையம் வரையும் ரயில் கள் ஓடத் துவங்கியது. இந்த இரயில்களில் மக்கள் யாவரும் ஒன்றாக மதிக்கப்பட்டு 'ஜாதி மத வேறுபாடு' இல்லாமல் சமமாக உட்கார்ந்து பயணம் செய்தனர். அனைவ ரோடும் சரி சமமாக அமர்ந்து பயணிப்பது குறித்து பார்ப்பனர்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. 

 காலம் காலமாக தங்களைக் கண்டாலே துண்டை கக்கத்தில் வைத்துக்கொண்டும் பார்ப்பனர் அல்லாதவர் நிழலைக்கூட தங்கள் அக்ரகாரப் பகுதியில் விழவிடாமல் ஆச்சாரமாக இருந்தவர்கள் ரயிலில் அனைவரோடும் சமமாக பயணிப்பது பார்ப்பனர்களுக்கு பெரும் பிரச்சினையாக இருந்தது. 

நவம்பர் 2 - 1914 ஆம் ஆண்டு நியூ இந்தியா நாளிதழில் ரயிலில் அனைவரும் பொதுவாக அமர்ந்து செல்வது பற்றி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து Reserved Railway Carriage or Clean Peoples  என்ற தலைப்பில், பார்ப்பனர்கள் மிகவும் சுத்தமானவர்கள் அவர்கள் சுத்தமில்லாத இதர ஜாதியினருடன் சமமாக அமர்ந்து பயணம் செய்ய விரும்பவில்லை. எனவே அவர்கள் தனியாக அமர்ந்து பயணம் செய்ய  Reserved Railway Carriage  ஒதுக்கவேண்டும் என்ற கோரிக்கை வைத்து எழுதினர். ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் அதனை காதில் வாங்காமல் கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது, 

 இதனால் முதல்வகுப்புகளில் அதிக செலவு செய்து அவர்கள் செல்ல ஆரம் பித்தனர். வெகுஜனங்களுக்கு முதல்வகுப்பு ரயில் பெட்டிக்கான பணத்திற்கு வசதி இல்லாததால் அவர்கள் பொதுப்பெட்டி களில் பயணித்தனர். சுதந்திரத்திற்குப் பிறகும் முதல்வகுப்பு, அதன் பிறகு வந்த குளிர்சாதன ரயில் பெட்டிகளில் மறை முகமாக பார்ப்பனர்களுக்கு ஒதுக்கப்பட்டு பார்ப்பனர் அல்லாதோர் பயணிப்பதாக இருந்தாலும் வெயிட்டிங் லிஸ்ட் என்று எல்லாம் போட்டுப்பார்த்தனர். 

 ஆனால் அனைவருக்குமே கல்வி வேலை வாய்ப்பைத்தந்ததால் அனைவ ருமே முதல்வகுப்பு குளிர்சாதனப் பெட்டி களில் பயணம் செய்ய ஆரம்பித்துவிட்டனர். இந்த நிலையில் சுமார் 200 ஆண்டுகள் கழித்து சைவ உணவு சாப்பிடுபவர்களின் உணர்வுகளை மதித்து அவர்களுக்கு தனி ரயில் பெட்டி கோரிக்கை எழுந்துள்ளது

சென்னை-மும்பை உள்ளிட்ட நகரங் களில் மார்வாடிகள் மற்றும் பார்ப்பனர்கள் அடுக்குமாடிக் கட்டடங்களை முழுமை யாக ஆக்ரமித்து 40 மாடிகள் உள்ள கட்டடம் முழுவதுமே சைவம் மட்டுமே என்றும், வாங்குபவர்களோ வாடகைக்கு வருபவர்களோ சைவ பழக்கம் உடைய வராக இருக்கவேண்டும் என்று வெளிப் படையாகவே விளம்பரம் செய்கின்றனர். இப்போது ரயில்வேயிலும் இந்த தீண்டாமை நுழைந்துவிட்டது.

No comments:

Post a Comment