மாணவர்கள் எந்த சூழலிலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது : அன்பில் மகேஷ் பொய்யாமொழி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, September 9, 2022

மாணவர்கள் எந்த சூழலிலும் தன்னம்பிக்கையை இழக்கக்கூடாது : அன்பில் மகேஷ் பொய்யாமொழி

திருச்சி, செப்.9 மாணவர்கள் எந்த சூழலிலும் தன்னம்பிக்கையை இழக்கக் கூடாது என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினார்.   

தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி திருச்சி _ திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதியில் நிறைவேற்றப்பட வேண் டிய முக்கிய பிரச்சினைகள் குறித்து தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமாரை சந்தித்து கோரிக்கை மனுவை அளித் தார். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர் களிடம் கூறியதாவது:-

திருவெறும்பூர் தொகு தியில் முக்கிய பிரச்சினையாக பட்டா பிரச்சினை இருக்கிறது. மேலும், தொகு தியில் வேலை வாய்ப்பு முகாம்களும் நடத்த கோரிக்கை விடுத்துள்ளோம். திருச்சி-துவாக்குடி அணுகுசாலை தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது. இது தொடர்பாக அணுகு சாலை மீட்பு குழுவினர் சமீபத்தில் என்னை சந்தித்து பேசினார்கள். அணு குசாலை அமைப்பது குறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று விரைந்து நடவடிக்கை எடுக் கப்படும். இலவசங்கள் வழங்குவதை வேறு கண்ணோட்டத்துடன் பார்க்கக்கூடாது. இலவசங் களை சமூக நீதியாகத்தான் பார்க்க வேண்டும். சமூக நீதி என்பது அனை வருக்கும் சமமாக இருக்க வேண்டும். பணம் இருப்பவர் களுக்கு ஒரு கல்வி, பணம் இல்லாத வர்களுக்கு ஒரு கல்வி என்று இருக்கக் கூடாது. எல்லோருக்கும் சமத்துவமான வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். 'நீட்' தேர்வில் தேர்ச்சி விகிதம் குறைந்து இருப்பதாக கூறி இருக்கிறார்கள்.

'நீட்' தேர்வை ரத்து செய்ய சட்ட போராட்டம் ஒருபக்கம் நடந்தாலும், 'நீட்' தேர்வு இருக்கும் வரை மாண வர்களை தயார் செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் மாணவ-மாணவி களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வரு கிறது. மனரீதியாகவும் மாணவர்களுக்கு கலந்தாய்வு அளிக்கப்படுகிறது. ஒவ் வொரு பள்ளியிலும் உயர்கல்வி வழி காட்டு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது. மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள மாண வர்கள் அங்கு கவுன்சிலிங் எடுத்து கொள்ளலாம். அதுமட்டுமின்றி 'ஹெல்ப் லைன்' எண்களும் மாண வர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதில் பல மாணவர்கள் தொடர்ந்து பேசிக் கொண்டு இருக்கிறார்கள். எந்த சூழலிலும் மாணவர்கள் தன்னம் பிக்கையை இழக்கக்கூடாது. உயிரை மாய்த்துக் கொள்ளும் வேலையில் ஈடுபட வேண்டாம். அதனால் நீங்கள் ஒன்றும் சாதிக்கப்போவது இல்லை. மாறாக பெற்றோருக்கும், இந்த சமூகத்துக்கும் நீங்கள் கவலையை கொடுத்துவிட்டு செல்கிறீர்கள் என்பதே உண்மை. 'நீட்' தேர்வை ரத்து செய்ய ஒட்டுமொத்த கட்சி வேறுபாட்டை கடந்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் வரை கொண்டு சென்று இருக்கிறோம். சமீபத்தில் கேரளா வந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் 'நீட்' தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோரிக்கை விடுத்துள்ளோம். நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். முன்னதாக  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன், காவல்துறை கண்காணிப்பாளர்  சுஜித்குமார் மற்றும் அதி காரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினார்.


No comments:

Post a Comment