நூல் மதிப்புரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 17, 2022

நூல் மதிப்புரை

ஒப்பற்ற தலைமை

 - கி. வீரமணி - 

திராவிடர் கழக வெளியீடு 

 முதல் பதிப்பு 2020

பக்கங்கள் 192

 நன்கொடை ரூ. 180/-

* தமிழகத்தின் தலைசிறந்த சொற்பொழிவாளர்களில் முதன்மையானவர் ஆசிரியர் கி. வீரமணி. 10 வயதில் தனது முதல் மேடைப் பேச்சை துவக்கியவர். அன்றிலிருந்து அவர் பேசாத நாளில்லை; பேசாத ஊரில்லை; பேசாத பொருளில்லை! கரோனா காலத்தில் ஊரடங்கால் முடங்கிப் போன நாட்களிலும் காணொலி மூலமாக தொடர் சொற்பொழிவுகளை மேற் கொண்டார். அய்ந்து நாட்களாக (ஜூன் - ஜூலை 2020) அவர் நடத்திய தொடர் சொற் பொழிவின் தொகுப்பே இந்த நூல்!

* தந்தை பெரியாருடன் ஆசிரியர் ஏறத்தாழ 30 ஆண்டுகள் மிக அரு காமையில் இருந்து பழகும் வாய்ப்பை பெற்றவர். பெரியாரின் சிந்திக்கும் திற னாற்றலை; சிக்கனமாக நடத்தும் வாழ்க் கையை; சிரமங்களை சந்திக்கும் துணிவை; தோழர்களை அரவணைத்து அழைத்து செல்லும் பாங்கை நேரிலே கண்டவர். பெரியாரின் தலைமைப் பண்பை ஆசிரியரை விட துல்லியமாக வேறு ஒருவர் கணித்திட முடியாது . அந்த கணிப்பின் வெளிப்பாடே இந்த தொடர் சொற்பொழிவு!

* இந்த தொடர் சொற்பொழிவுகள் அய்ந்து நாட்களில் அய்ந்து தலைப்பு களில் நடத்தப்பட்டன :

தந்தை பெரியாரின் தலைமைப் பண்பு 

* பெரியார் சந்தித்த எதிர்ப்புகள், பெரியாரைத் தாக்கிய நோய்கள், பெரியார் சந்தித்த துரோகங்கள், துரோகி களை வென்ற பெரியார், தந்தை பெரியாரின் வரலாற்று நிகழ்வுகளையும் தமிழகத்தின் வரலாற்று தகவல்களையும் ஒரு சேர அறிந்து கொள்ள ஏதுவான ஆவணம் இந்த நூல்!

* தந்தை பெரியாரின் தலைமைப் பண்பு என்ற உரையில் ஆசிரியர் மேற்கோளாக காட்டிய தகவலில் - பனகல் அரசர் மறைவுக்குப் பின்னே, பெரியார் எழுதி வெளியிட்ட இரங்கல் மடல் ( 1928) 

ஒரு இரங்கல் இலக்கியம் என சொல்லும் அளவிற்கு சிறப்பாக இருந்தது. அது பனகல் அரசரின் மாண்பை மட்டு மல்ல, ஒப்பற்ற தலைமையின் சிறப்பு பற்றியும் தெரிவிக்கிறது. பனகல் அரசர் பட்ட இன்னல்களை பெரியார், " நெருப் பின் மேல் நின்று கொண்டு வேலை செய்வது போல் வெகு கஷ்டமான துறையில் வேலை செய்தவர் ! " என புகழ் மரியாதை செலுத்தினார்! 

* மேலும், தந்தை பெரியாரின் தலை மைப் பண்பைப் பற்றி விவரிக்கும் போது ஆசிரியர் கூறுகிறார் - " அய்யா ஒன்றை சொல்வார்! களத்தில் இருக்கும் போது வெற்றி அடைவோமோ? தோல்வி அடைவோமோ? என்று நினைக்க கூடாது. வெற்றியா - தோல்வியா என்று நினைத்தால், போராட்டக் களத்தில் தெளிவான முடிவு எடுக்க முடியாது! என்று சொல்லுவார். ஒரு நல்ல தலை மைக்கு இதுதானே அடையாளம்!"  என்று விளக்கம் தருகிறார்.

* தந்தை பெரியாரின் பேச்சுகளி லிருந்தும், எழுத்துக்களிலிருந்தும், செயல் களிலிருந்தும் நாம் என்ன அறிந்து கொள் கிறோம் என்ற கேள்வியை எழுப்பி அதற்கான பதிலை தனது சொற்பொழிவில் பதிவு செய்துள்ளார் ஆசிரியர்.

அந்த பதில் இதுதான் :

* ஒப்பற்ற தலைமை என்பது - தெளிவு; முடிவு; தன்னல மறுப்பு; விருப்பு வெறுப்பற்ற பார்வை; சுயசிந்தனை; யாரையும் அரவணைத்து செல்லுதல்; எளிமையாக மற்றவர்களை சந்திப்பது; போரில் தலைவன் எப்படி வெற்றி தோல்வி என்பது பற்றி கவலையேயில்லாமல் பணியாற்ற வேண்டும் என்பனவற்றை கொண்ட தலைமையாகும்! அந்த வகையில் இயல்பாகவேயே ஒப்பற்ற தலைமை என்பது தந்தை பெரியாருக்கு இயற்கையாகவே அமைந்து விட்டது ! 

* பெரியாரின் ஒப்பற்ற தலைமைப் பண்பைப் பற்றி அவரது வாழ்வில் நடந்த நிகழ்வுகளுடன் இணைத்துப் பார்த்து ஆசிரியர் தந்த இந்த தொடர் சொற் பொழிவுகள் நமக்கு ஒரு நல்ல வழிகாட்டி நூலாக அமைந்துள்ளது!

* பணம், பதவி, பவர் இவைகளை அடைய அரசியல் களத்தில் குடியிருப்பது - ஒற்றைத் தலைமை!

பகுத்தறிவு, சுயமரியாதை, முற்போக்கு இவைகளை அடைய சமுதாய தளத்தில் வீற்றிருப்பது - ஒப்பற்ற தலைமை!!

- பொ. நாகராஜன்

பெரியாரிய ஆய்வாளர், சென்னை

No comments:

Post a Comment