திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ் அவர்களது அன்னை திருமதி இருதயமேரி மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 28, 2022

திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ் அவர்களது அன்னை திருமதி இருதயமேரி மறைவு கழகத் தலைவர் ஆசிரியர் இரங்கல்

திருச்சி மாவட்டத் தலைவர் மானமிகு ஆரோக்கிய ராஜ் அவர்களது தாயார் திருமதி இருதயமேரி அவர்கள் (வயது 84) உடல் நலக் குறைவினால் மறைந்தார் என்பதை அறிந்து துயரம் அடைகிறோம்.

9 பிள்ளைகளுக்கு (5 ஆண்கள், 4 பெண்கள்) தாயான அன்னை இருதயமேரி அவர்கள் கழகக் கொள்கையில் ஈர்ப்பு உள்ளவர்.

மூத்த மகன் ஆரோக்கியராஜ் அவர்கள் திருச்சி மாவட்ட திராவிடர் கழகத் தலைவர்.

மறைந்த அம்மையாரை இழந்து வருந்தும் அவரது பிள்ளைகள், குடும்பத்தினர்களுக்கு நமது ஆறுதலையும், ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

குறிப்பு: நாளை காலை (29.9.2022) இறுதி நிகழ்வு திருச்சியில் அவரது இல்லத்தில் நடைபெறும்  என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
28.9.2022  


 


No comments:

Post a Comment