இளம்பெண் கடத்தி கொலை: உத்தராகண்ட் பா.ஜ.க. மாநில தலைவரின் மகன் உட்பட 3 பேர் கைது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, September 25, 2022

இளம்பெண் கடத்தி கொலை: உத்தராகண்ட் பா.ஜ.க. மாநில தலைவரின் மகன் உட்பட 3 பேர் கைது

டேராடூன்,செப்.25- உத்தராகண்ட் மாநிலம், பவுரி மாவட்டத்திற்குட்பட்ட விடுதி ஒன்றில் அங்கிதா பண்டாரி என்ற 19 வயது இளம் பெண் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார். இவரை திடீரென கடந்த சில நாட்களுக்கு முன்பு காண வில்லை. இதையடுத்து தனது மகளைக் காண வில்லை என பெற்றோர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ஆனால் காவல்துறையினர் இந்த வழக்கில் மெத்தனமாக இருந்து வந்துள்ளனர்.

பின்னர் காணாமல் போன அங்கிதா பண்டாரியின் பெற்றோர் சமூகவலைதளத்தில் உருக்கமான காட்சிப் பதிவு ஒன்றை வெளியிட்டனர். இந்தக் காட்சிப்பதிவு உத்தராகண்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து காவல்துறையினர் வழக்கில் தீவிரமாக விசாரணை செய்தனர். பின்னர் அங்கிதா பண்டாரி வேலை செய்துவந்த விடுதியின் சி.சி.டி.வி. காட்சிகளை காவல்துறையினர் ஆய்வு செய்தனர். அப்போது விடுதி யின் உரிமையாளர் புல்கித் ஆர்யா, அங்கிதா பண்டாரி மேலும் இரண்டு பேர் வெளியே செல்லும் காட்சி பதிவாகியிருந்தது.

ஆனால் திரும்பி வரும்போது அங்கிதா பண்டாரியை மட்டும் காணவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் விடுதி உரிமையாளரிடம் விசாரணை நடத்தியபோது பகீர் தகவல் வெளிவந்தது. புல்கித் ஆர்யா, விடுதிக்கு வரும் விருந்தினர்களுடன் பாலியல் உறவில் ஈடுபட அங்கிதா பண்டாரியை வற்புறுத்தியுள்ளார். இதற்கு அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இது தொடர்பாகப் பேசுவதற்காகத்தான் புல்கித் ஆர்யா, அங்கிதா பண்டாரி உள்ளிட்ட 4 பேர் வெளியே சென்றுள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் அங்கிதா பண்டாரியை கொலை செய்து கால்வாயில் அவரது உடலை வீசியது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதையடுத்து அங்கிதா பண்டாரியின் உடலை காவல்துறையினர்  கால்வாயிலிருந்து  கைப்பற்றினர். பின்னர் புல்கித் ஆர்யா உள்ளிட்ட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தராகண்ட் மாநில பா.ஜ.க தலைவர் வினோத் ஆர்யாவின் மகன்தான் இந்த கொலைக்குற்றவாளியான விடுதி உரிமையாளர் புல்கித் ஆர்யா. உத்தராகண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.  அம்மாநில பா.ஜ.க. தலைவரின் மகனே இளம் பெண் கொலை வழக்கில் கைதாகியுள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது.

பச்சிளம் குழந்தைகளுக்கான தடுப்பூசியை குறைத்தது ஒன்றிய பாஜக அரசு

சென்னை, செப். 25 தமிழ்நாட்டில் பச்சிளம் குழந்தை களுக்குப் போடப்படும் நிமோ கோக்கல் காஞ்சுகேட் தடுப்பூசி தேவையை ஒன்றிய பாஜக அரசு பாதி யாக குறைத்துவிட்டதால் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தமிழ்நாட்டில் கடந்த வாரங்களில் மருந்து தட்டுப்பாடு தொடர்பாக புகார் எழுந்தது. இது தொடர்பாக பேசிய  மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன், தமிழ்நாட்டில் மருந்து தட்டுப்பாடு இல்லை என்று தெரிவித்தார்.   இந்நிலையில், தமிழ்நாட்டில் பச்சிளம் குழந்தை களுக்குப் போடப்படும் நிமோகோக்கல் காஞ்சுகேட் தடுப் பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பிறந்த குழந்தைகளை நிமோனியா, மூளைக் காய்ச்சல் ஆகிய நோய்களில் இருந்து பாதுகாக்க நிமோ கோக்கல் தடுப்பூசி போடப்படுகிறது. இதன்படி, குழந்தை களுக்கு 6-ஆவது வாரம், 14-ஆவது வாரம் மற்றும் 9-ஆம் மாதத்தில் இந்த தடுப்பூசியை போட வேண்டும். இந்த நிலையில், தமிழ்நாட்டில்  தட்டுப்பாடு காரணமாக குழந்தை களுக்கு முழுமையாக தடுப்பூசி செலுத்த முடியாத நிலை உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  

இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில், “இந்த தடுப்பூசி அரசு மருத்துவமனைகளில் போடு வதன் மூலம் ஒரு வருடத்திற்கு சுமார்  10 லட்சம் குழந்தைகள் பயன் பெறுவார்கள். ஒரு குழந்தைக்கே மூன்று தவணை தடுப் பூசி போட வேண்டும். ஆனால், அதற்கேற்ற தடுப்பூசி தற்போது கைவசம் இல்லை. இதனால்  தடுப்பூசி பற்றாக் குறை நிலவி வருகிறது”என்கின்றனர். இது குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அதிகாரிகள் கூறுகையில், “தமிழ் நாட்டிற்கு ஓர் ஆண்டிற்கு 30,53,000 தடுப்பூசிகள் தேவை. இது தொடர்பாக  ஆகஸ்ட் 25ஆம் தேதி ஒன்றிய சுகாதார  அமைச்சகத்திற்கு கடிதம் எழுதப்பட்டது. ஆனால், ஒன்றிய அரசு வெறும் 6,00,000 தடுப்பூசிகளை மட்டும் தான் தற்போது வரை வழங்கியுள்ளது. தமிழ்நாடு சுகா தாரத் துறை கோரிய தடுப்பூசியில் பாதி அளவைக்கூட ஒன்றிய அரசு கொடுக்கவில்லை” என்கின்றனர்.

கதிரியக்கப் புற்றுநோயியலின் 

வியூக அறிவியல் மருத்துவ மாநாடு

சென்னை, செப்.25 இந்திய கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்கள் சங்கத்துடன்  டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனை  இணைந்து, 37ஆவது ஆண்டு கிஸிளிமிசிளிழி 2022 என்ற மாநாட்டை இவ்வமைப்பின் தமிழ்நாடு, புதுச்சேரி கிளை ஏற்பாடு செய்துள்ளது. அய்.டி.சி. கிராண்ட் சோழா அரங்கில் நேற்று மற்றும் இன்றும் (செப்டம்பர் 24, 25) கதிரியக்கப் புற்றுநோயியலின் வியூக அறிவியல்'  என்கிற தலைப்பில் இந்த மாநாடு நடைபெற்றது.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற ஏ.ஆர்.ஓ.அய். (AROI) அமைப்பின் தலைவர் டாக்டர் விஜய் ஆனந்த் ரெட்டி நினைவு மலரை வெளியிட்டு தொடக்க உரை ஆற்றினார். இம்மாநாட்டில் சிறப்பு விருந்தினர்கள் மற்றும் பிற முக்கிய மருத்துவ நிபுணர்கள் பங்கேற்றனர். மாநாட்டின் ஏற்பாட்டுக் குழுவில் இடம் பெற்றுள்ள டாக்டர் காமாட்சி நினைவு மருத்துவமனையின் நிறுவனர் மற்றும் தலைவர் டாக்டர். டி.ஜி. கோவிந்தராஜன் கடந்த இருபது ஆண்டுகளாக அனைத்து பொருளாதார அடுக்குகளிலும் உள்ள நோயாளிகளுக்குப் பயன்படும் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவைக் கட்டியெழுப்ப தன்னை அர்ப்பணித்துக் கொண்டுள்ளார். 

மேலும் இந்த ஏற்பாட்டுக் குழுவில் இம் மருத்துவமனையின் தலைமை கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் டாக்டர். ஜெ. சுரேந்திரன், செயல்பாடுகள் மற்றும் நிதிப் பிரிவு இயக்குநர் டாக்டர். டி.ஜி. சிவரஞ்சனி கோவிந்தராஜன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர் என அவர் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment