சதுரகிரியில் மூச்சுத் திணறல் - 2 பக்தர்கள் சாவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 26, 2022

சதுரகிரியில் மூச்சுத் திணறல் - 2 பக்தர்கள் சாவு

விருதுநகர், செப்.26 சதுரகிரி மலையில் ஏறிய போது 2 பக்தர்கள் மூச்சு திணறி இறந்தனர்.   

சுந்தர மகாலிங்கம் கோவி லுக்கு மகாளய அமாவாசையையொட்டி   நேற்று (25.9.2022) அதிகாலை கோவை மாவட்டம் சீரநாயக்கன்பாளை யத்தை சேர்ந்த கோவிந்தராஜன் (வயது 47) என்பவர் வந்தார்.   அவர் வனத்துர்க்கை கோவில் அருகே நடந்து சென்றார். அப்போது திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார். பின்னர் அவரின் உடல் டோலி மூலம் தாணிப்பறை அடிவார பகுதிக்கு கொண்டுவரப்பட்டு கூறாய்வுக்காக உசிலம்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப் பட்டது. இந்த சம்பவம் குறித்து சாப்டூர் காவல்துறையினரிடம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.   ஈரோடு மாவட்டம் பெருந்துறையை சேர்ந்த நாகராஜ்(55) தனது குடும்பத் தினருடன் சதுரகிரிக்கு வந்தார்.  அவர் மலைப்பாதை வழியாக கோரக்கர் குகை அருகே நடந்து சென்று கொண்டு இருந் தார். அப்போது திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக சம்பவ இடத்திலே அவர் பரிதாபமாக உயிரிழந் தார். இதையடுத்து அவரது உடல் டோலி மூலம் தாணிப்பறை அடிவாரப் பகுதிக்கு கொண்டு வரப்பட்டு உடற் கூறாய்வு உசிலம்பட்டி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். இந்தசம் பவம் குறித்து சாப்டூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். மலை ஏறும் போது  2 பேர் இறந்தது   சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


No comments:

Post a Comment