மதுவால் தற்கொலை 10,500 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 6, 2022

மதுவால் தற்கொலை 10,500

பெங்களூரு,செப்.6- நாட்டில் கடந்த 2021-ஆம் ஆண்டில் போதைப் பொருள் மற்றும் மதுப் பழக்கத்தின் காரணமாக 10 ஆயிரத்து 500 பேர் தற்கொலை செய்து கொண்டது தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை மூலம் தெரிய வந்துள்ளது.

அண்மையில் வெளியான 2021-ஆம் ஆண்டின் தேசிய குற்றஆவணக் காப்பகத்தின் அறிக்கையில் போதைப் பொருள் மற்றும் மதுப் பழக்கத்தின் காரணமாகதற்கொலை செய்துகொண்டவர் கள் பற்றிய அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதாவது சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒன்றுக்கு மேற்பட்டோர் தற்கொலை செய்து கொள்வது கவலையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் 2020-இல் 9 ஆயிரத்து 169 பேர் போதைப் பொருள் மற்றும் மதுப் பழக்கத்தின் காரணமாக தற்கொலை செய்துகொண்டனர்.

இந்த எண்ணிக்கை 2021-ஆம் ஆண்டில் 10,500 ஆக அதிகரித்திருக்கிறது. மகாராட்டி ராவில் அதிகப்பட்சமாக 2,818 பேர்தற்கொலை செய்து கொண்டதால் அந்த மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது.

அடுத்த நிலையில் மத்தியப் பிரதேசம் (1,614 பேர்), தமிழ்நாடு (1,319 பேர்), கருநாடகா (902 பேர்) ஆகிய மாநிலங்கள் இருக்கின்றன. 2015ஆம் ஆண்டில் 100க்கும் குறைவான வழக்குகளைக் கொண்டிருந்த கர்நாடகா, கடந்த 2021இல் 902 வழக்குகளை கொண் டிருப்பது கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மனநல மருத்துவர்கள் கூறுகையில், ‘‘தற்கொலைகள் ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காக மட்டும் நடக்காது. அதற்கு பல பிரச்சினைகள் காரணமாக இருக்கும். போதைப்பொருள், மது பழக்கம் ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டு பார்த்தால் இந்த தீய பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு மனச்சோர்வு அதிகமாக இருக்கும். போதைப் பொருளைஅதிகமாக உட்கொண்டால் இன்னும் மனச்சோர்வு அதிகரிக்கும். அதனால் தற்கொலை முடிவை பிறரை காட்டிலும் அதிகம் எடுக்கின்றனர்’’ என்றனர்.

No comments:

Post a Comment