அரசமைப்புச் சட்டம் 103 ஆவது சட்டத் திருத்தம் செல்லுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 15, 2022

அரசமைப்புச் சட்டம் 103 ஆவது சட்டத் திருத்தம் செல்லுமா?

உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் விசாரணை தொடர்கிறது!

நமது சிறப்பு செய்தியாளர்

இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதலா வது திருத்தத்தின்படி, வகுப்புரிமை - சமூகநீதி - பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் சரி வர செயல்படுத்த முடியாத உயர்நீதிமன்ற, உச்சநீதி மன்றத் தீர்ப்புகள் தடைக்கல்லாக அமைந்ததை மாற்றியமைக்க தந்தை பெரியார் போராடி பெற்றதன் விளைவாகவே அரசமைப்புச் சட்டத்தின் 15(4) பிரிவு உருவாக்கப்பட்டது.

இந்திய நாடு முழுவதும் ஒடுக்கப்பட்ட மக்கள் சமூகநீதி- இட ஒதுக்கீடு பெற அது கதவு திறந்தது!

இதனைப் பறிக்க முதல் கட்டமாக அரச மைப்புச் சட்டப் பிரிவுகளில் கூறாத - மாறான பொருளாதார அடிப்படையை ஒன்றிய பா.ஜ.க. அரசு இரண்டாம் முறை பதவிக்கு வருவதற்கு சற்று முன்பு நாடாளுமன்றத்தில் போதிய அவகாசம் ஏதும் தராமலேயே, அவசரக் கோலம் அள்ளித் தெளித்த கதையாக 103 ஆவது இந்திய அரசமைப்புச் சட்டத் திருத் தத்தை நிறைவேற்றி, குடியரசுத் தலைவரின் ஒப்புதலையும் பெற்று, பல மாநிலங்கள் அதை நடைமுறைப்படுத்தின!

தமிழ்நாட்டில் அது நடைபெறவில்லை; மத்திய பல்கலைக் கழகங்களில் செயல்படுத்த முடியவில்லை. இந்த அரசமைப்புச் சட்டத் திருத்தத்தை எதிர்த்து, உச்சநீதிமன்றத்திற்கு இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் வழக்கு கள் போடப்பட்டன.

தமிழ்நாட்டில் திராவிடர் கழகம், திராவிட முன்னேற் றக் கழகம், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பிற்படுத்தப்பட்டோர் கூட்டமைப்பு முதலியனவும் அதில் அடங்கும்.

இப்போது அந்த வழக்கு உச்சநீதிமன்ற அய்வர் அமர்வில், தலைமை நீதிபதி லலித் தலைமையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு, கடந்த சில நாள்களாக வாதங்கள் நடத்தப்பட்டுவருகின்றன.

அரசமைப்புச் சட்ட விரோதம்

மனுதாரர்கள் சார்பில் வாதாடிய மூத்த வழக்குரைஞர்கள் எம்.என்.ராவ், ரவிவர்ம குமார், சல்மான் குர்ஷித், வில்சன் (எம்.பி.) ஆகியோரின் வாதங்களை அடுத்து, நேற்று (14.9.2022) உச்சநீதிமன்றத்தில் கருநாடக மேனாள் அட்வகேட் ஜெனரல் ரவிவர்ம குமார் அவர்கள், சுமார் 3.15 மணிநேரம் இந்தப் பொருளாதார அடிப்படையில், அதுவும் முன் னேறிய ஜாதிக்காரர்களுக்கு மட்டும் (வருமான அடிப்படையில்) தருவது அரசமைப்புச் சட்ட விரோதம் என்பதை விளக்கி, தனது அடுக் கடுக்கான வாதங்களை வைத்தார்.

நீதிபதிகள் கேட்ட கேள்விகளுக்கும் சிறப் பாக பதிலளித்தார்.

பலரும் இவரது வாதங்களைக் கேட்டுப் பாராட்டினர். இவர் தந்தை பெரியார், அம் பேத்கர் போன்ற தலைவர்களின் கருத்தி னையும், தொண்டினையும்கூட சிறப்பாக வாதங்களின் நடுவில் எடுத்துரைத்து, வாதிட் டார்!

மூத்த வழக்குரைஞர் வில்சன் அவர்களும் சமூகநீதி வரலாறு தேவைப்பற்றியும், பொரு ளாதார அடிப்படையில் என்பது முரணானது என்றும் விளக்கினார்.

வழக்கு விசாரணை தொடருகிறது!

No comments:

Post a Comment