நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தமிழ்நாடு வஞ்சிப்பு தி.மு.க. போர்க் குரல் : மக்களவை ஒத்திவைப்பு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 2, 2022

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் தமிழ்நாடு வஞ்சிப்பு தி.மு.க. போர்க் குரல் : மக்களவை ஒத்திவைப்பு!

புதுடில்லி,ஆக.2- என்.எல்.சி. நிறுவன பணிகளில் தமிழ்நாட் டைச் சேர்ந்த வர்களுக்கே வேலை வழங்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் தி.மு.க. வலியுறுத்தியுள்ளது.

மக்களவை நேற்று (1.8.2022) கூடிய துமே என்.எல்.சி., யில் தமி ழர்களைப் புறக்கணித்து வடமாநிலத்தவர்களை நியமனம் செய்வதற்கு தி.மு.க. எதிர்ப்பு தெரிவித்தது.

இதுகுறித்து பேசிய மக்களவை கழகக் குழுத் தலைவர் டி.ஆர்.பாலு, என்.எல்.சி.,க்கு நிலம் வழங்கிய உள்ளூர் மக்களுக்கு இந்நிறுவனத்தில் வேலை வழங்கப்படும் என்ற ஒப்பந்தத்தை மீறி தற்போது வடமாநிலத்தவர்களுக்கு பணி வழங்கப்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார். என்.எல்.சியில் நியமிக்கப் படவுள்ள 299 பொறியியல் பட்ட தாரிகளில் ஒருவர் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் இல்லை என்றும் அவர் புகார் தெரிவித்தார்.

என்.எல்.சி. பணிக்கான தேர்வு முறையில் மாற்றம் செய்து 100 சதவி கிதம் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் களையே பணியமர்த்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். என்.எல். சி.,க்கு நிலம் கொடுத்த உள்ளூர் மக்களுக்கு வேலையில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், என்.எல்.சி.யில் பணி வழங்க ‘கேட்’ தேர்வை கட்டாய மாக்கக் கூடாது என்றும் வலியுறுத் தினார். இந்த விவகாரம் குறித்து விவாதம் நடத்த வேண்டும் என் றும், ஒன்றிய அமைச்சர் பதிலளிக்க வேண் டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.ஆனால் இதுகுறித்து தொடர்ந்து பேச அனுமதி மறுக்கப்பட்டது. 

எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம்!

நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப் பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்ட தற்கு காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன. இதனால் அவையில் அமளி ஏற்பட்டது. இத னால் தொடங்கிய சில நிமிடங் களிலேயே மக்களவை நண்பகல் 12 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோ தும் இதே பிரச்சினையை எழுப்பி உறுப்பினர்கள் முழக்கமிட்டதால் மக்களவை பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இதேபோல் மாநிலங்களவையும் ஒத்திவைக்கப்பட்டது.


No comments:

Post a Comment