பூமி ஏன் வேகமாகச் சுற்றுகிறது? என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 13, 2022

பூமி ஏன் வேகமாகச் சுற்றுகிறது? என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

நேரம் வேகமாக பறக்கிறது என்று சொல் வது உண்டு. சமீபத்திய சான்றுகளில் இது உண்மையாகத் தெரிகிறது - உண்மை யில், இப்போதெல்லாம், நாளை என்பது வேகமாக வருகிறது - அது ஒரு நொடி நேரம் முன்னதாக இருந்தாலும் வேகமா கத்தானே வந்துள்ளது. ஜூன் 29 ஆம் தேதி பூமி தனது வழக்கமான 24 மணிநேரத் தைவிட 1.59 மில்லி விநாடிகளில் ஒரு முழு சுழற்சியை முடித்து ஒரு நாளை நிறைவு செய்தது. பூமியின் சுழற்சி வேகத்தை அளவிட விஞ்ஞானிகள் முதன்முதலில் துல்லியமான அணுக் கடிகாரங்களைப் பயன்படுத்தத் தொடங்கிய 1960 களில் இருந்து பதிவு செய்யப்பட்ட மிகக் குறுகிய நாள் இது.

இப்போதெல்லாம் இது மிகவும் அடிக் கடி நிகழ்கிறது - சமீபத்திய ஆண்டுகளில், பூமி சற்று வேகமாக சுழன்று வருகிறது. ஜூலை 26 ஆம் தேதி அன்று பூமியின் முழு சுழற்சியான ஒரு நாள் 1.50 மில்லி விநாடிகளுக்கு முன்னதாக முடிந்தது. மிகக் குறுகிய நேரம் கொண்ட நாள் என்று பூமி செய்த சாதனையை ஜூன் 29 ஆம் தேதி அதுவே முறியடித்தது

மேலும், 2020 ஆம் ஆண்டில், உலகம் முழுவதும் கரோனா வைரஸைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தபோது, ​​​​பூமி அதன் மிகக் குறுகிய நாளை பதிவு செய்தது என்பது 28 நாட்களைத் தாண்டியது என்று timeanddate.com  என்ற இணையதளம் தெரிவித்துள்ளது. 2020 ஆம் ஆண்டில் பதிவான மிகக் குறுகிய நேரம் கொண்ட நாட்களில் ஜூலை 19 ஆம் தேதி மிகக் குறுகிய நாளாக 1.47 மில்லி வினாடிகள் வேக மாக முடிவடைந்து பதிவானது.

ஒரு மில்லி விநாடி என்பது ஒரு வினா டியின் ஆயிரத்தில் ஒரு பங்கு. இந்த கண் ணோட்டத்தைப் பொறுத்தவரை, ஒரு முறை கண் சிமிட்டுவது ஒரு வினாடியில் பத்தில் ஒரு பங்கு, அதாவது 100 மில்லி விநாடிகளுக்கு நீடிக்கும். 1984 லாஸ் ஏஞ்சல்ஸில் நடந்த ஒலிம்பிக்கில் பி.டி. உஷா வெண்கலப் பதக்கத்தை ஒரு நொடியில் நூறில் ஒரு பங்கு வித்தியாசத்தில் தவற விட்டார். 400 மீட்டர் தடை ஓட்டப் பந்தயத் தில் உஷா 55.42 வினாடிகளில் ஓடினார். வெண்கலப் பதக்கம் வென்ற ருமேனியா வின் கிறிஸ்டியானா கோஜோகாரு 55.41 வினாடிகளில் முடித்தார். 5ஆவது இடத்தில் உள்ள சுவீடனின் ஆன் லூயிஸ் ஸ்கோக் லண்ட் 55.43 வினாடிகளில் ஓடி முடித்தார்.

பூமி வேகமாக இருப்பது புதிய விடயமா என்றால் உண்மையில் அப்படி இல்லை. சமீப ஆண்டுகளில், பூமி அதன் சுழற்சியை வேகமாக முடித்துக்கொண்டிருக்கும் வேளையில், மிக நீண்ட காலமாக பார்க்கும் போது, ​​நமது கோள் உண்மையில் மெதுவாக சுழல்கிறது.

ஆய்வாளர்கள் இந்த அறிவியல் புதிரில் முற்றிலும் உறுதியாக இல்லை. இது நிச்சய மாக வித்தியாசமானது என்று டாஸ் மேனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரி யர் மாட் கிங் ஏபிசி நியூஸிடம் கூறினார். “1970களில் துல்லியமான வானொலி வானி யல் தொடங்கியதிலிருந்து நாம் பாக்காத வகையில் ஏதோ மாறிவிட்டது” என்று கூறினார்.

காலநிலை மாற்றத்தால் தூண்டப்பட்ட மேற்பரப்பு மாறுபாடுகள், பூமி சுழலும் விதத்தில் தாக்கத்தை ஏற்படுத்துவது ஒரு காரணமாக இருக்கலாம் என்று அவர் அனுமானித்தார். இந்த மேற்பரப்பு மாறு பாடுகளில் கிரீன்லாந்து மற்றும் அண் டார்டிகாவில் உள்ள பனிக்கட்டிகள் உருகு தல், கடல் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களும் அடங்கும்.

“பூமியின் சுழற்சியின் முடுக்கத்திற்கான காரணம் எங்களுக்குத் தெரியாது. எங்க ளிடம் கருதுகோள் மட்டுமே உள்ளது...” என்று பன்னாட்டு வானியல் மய்யத்தில் உள்ள பாரிஸ் ஆய்வகத்தின் கிறிஸ்டியன் பைஸார்ட் சீன தொலைக்காட்சி சிநிஜிழி நெட்வொர்க் இடம் கூறினார். “இதற்கான காரணம் பூமியின் உள் மற்றும் பூமியின் மய்யத்தின் இயக்கத்தில் உள்ளது என்று நாங்கள் கருதுகிறோம்” என்று அவர் கூறினார்.

No comments:

Post a Comment