தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வணிக பெருமக்கள் உற்சாக வரவேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 22, 2022

தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்து வணிக பெருமக்கள் உற்சாக வரவேற்பு

தஞ்சாவூர், ஆக.22 தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் 60 ஆண்டுகால விடுதலை ஆசிரியர் பணியைப் பாராட்டி 60 ஆயிரம் விடுதலை சந்தா வழங்கப்படும் என தீர்மானிக்கப்பட்டு, அதனடிப்படையில் தமிழ் நாடு முழுவதும் கழகப் பொறுப்பாளர்கள், தோழர்கள் இலக்கை அடைய இடைவிடாது உழைத்து வருகின்றனர். 

இந்நிலையில், "இனத்தின் மானத்தை காக்கும் பேராயுதமும் - போராயுதமுமான விடுதலைக்கு சந்தா  திரட்ட கடை வீதியில் நன்கொடை கேட்டு நானே வருகின்றேன்" என்று கூறி தமிழர் தலைவர் ஆசிரியர் 

கி.வீரமணி அவர்கள் தஞ்சை கடை வீதிகளில் 20.08.2022 அன்று வலம் வந்தார். திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மண்டல தலைவர் மு.அய்யனார், மண்டல செயலாளர் க.குருசாமி, மாவட்ட தலைவர் சி.அமர்சிங், மாவட்ட செயலாளர் அ.அருண கிரி ஆகியோர் உடன் இருந்தனர். 

காங்கிரஸ் கட்சி தஞ்சை மாவட்ட தலைவர் து.கிருஷ்ண சாமி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சொக்கா ரவி உள்ளிட்ட காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தோழர்கள் ஊர்வலத்தின் இறுதிவரை பயணித்து சிறப்பித்தனர்.

இந்நிகழ்வு தஞ்சை பழைய பேருந்து நிலையம் தொடங்கி ஆற்றுப் பாலம் தந்தை பெரியார் நினைவுத் தூண் வரை நடைபெற்றது. ஆற்றுப் பாலம் ஜமாத் சார்பில் தமிழர் தலைவர் அவர்களை வரவேற்று தேநீர் வழங்கி சிறப்பித்தனர்.

விடுதலைக்கு சந்தா வழங்கிய பெருமக்கள்

தஞ்சை சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் ரூ.10,000, பாம்பே ஸ்வீட்ஸ் உரிமையாளர் சுப்பிரமணியம் ரூ.20,000, நிலா பிரமோட்டர்ஸ் உரிமையாளர் திவாகர் ரூ.2,50,000, காங்கிரஸ் கட்சி மாநகர மாவட்ட செயலாளர் பி.ஜி.இராஜேந்திரன் - ரூ.20,000, வழக்குரைஞர் மாணிக்கவேல் பாண்டியன் - ரூ.20,000, மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூர பாண்டியன் - ரூ.13,000, தஞ்சை வடக்கு ஒன்றியம் - ரூ.12,000, குடும்ப விளக்கு நலநிதி நிருவாகி வேணுகோபால் - ரூ.10,000, மகாராஜா துணியக உரிமையாளர் ஆசிப்அலி - ரூ.10,000, வளநாடு சில்க்ஸ் - ரூ.10,000, மாநகர அமைப்பாளர் தமிழ்ச்செல்வன் - ரூ.10,000, பொதுக்குழு உறுப்பினர் ஸ்டாலின் - ரூ.5,000, சாலியமங்கலம் ஒன்றிய செயலாளர் ஜவகர், இராஜேந்திரன் - ரூ.4,000, ஞானம் ஓட்டல் உரிமையாளர் எஸ்.பி. செல்வராஜ் - ரூ.2,000 தஞ்சை மாமன்ற உறுப்பினர் சரீப் - ரூ. 2,000, மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி - ரூ.2,000, வழக்குரைஞர் சூரி(எ)சண்முகசுந்தரம் - ரூ.2,000, அன்பு ஸ்வீட்ஸ் உரிமையாளர் - 

ரூ.2,000, குறிஞ்சி ரெடிமெட்ஸ் - ரூ.1,000, சரஸ்வதி துணியகம் - ரூ.1,000, ஸ்பீடு டைலர்  - ரூ.1,000 மாதவராசன் - ரூ.1,000, மாநகர தலைவர் பா.நரேந்திரன் - ரூ.6,000, அன்பு ஸ்வீட்ஸ் உரிமையாளர் சாதிக்பாட்சா ரூ.2,000, மருத்துவர் இளம்பரிதி ரூ.1,000 உள்ளிட்ட வணிகப் பெருமக்கள், பொதுமக்கள் விடுதலை சந்தாக்களை வழங்கி ஆதரவளித்தனர்.

இந்நிகழ்வில் கலந்துகொண்டவர்கள்

மாநில ப.க. ஊடக பிரிவு தலைவர் மா.அழகிரிசாமி, மாநில ப.க.துணை தலைவர் கோபு.பழனிவேல், மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் சேகர், தெற்கு ஒன்றிய செயலாளர் நெல்லுபட்டு அ.இராமலிங்கம், அமைப்பாளர் அ.தனபால், தஞ்சை மாநகர செயலாளர் கரந்தை அ.டேவிட், மாவட்ட தொழிலாளரணி தலைவர் ச.சந்துரு, மண்டல மகளிரணி செயலாளர் அ.கலைச்செல்வி, தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் முனைவர் வே.இராஜவேல், மாவட்ட இளை ஞரணி துணை தலைவர் பா.விஜயக்குமார், துணை செயலாளர் அ.சுப்பிரமணியன், மகளிரணி தோழர் ஏ.பாக்கியம், மாணவர் கழகத் தோழர்கள் விடுதலையரசி, சிந்தனை செல்வம், நிலவன், தி.மு.க. பகுதி செயலாளர் ஆர்.கே.நீலகண்டன், மு.சிந்தனை செல்வம், மற்றும் கழகத் தோழர்கள் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment