மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டம்

சென்னை, ஆக. 11- தமிழ்நாட்டில் ஏழை எளிய பின்தங்கிய சமூகப் பிரிவைச் சேர்ந்த, தொழில் சார்ந்த படிப்புகளைத் தொடரும் தகுதியுள்ள மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை ஜியோஜித் நிதி சேவை நிறுவனம் அறிவித்துள்ளது.

உதவித்தொகையை பெறவிரும்பும் விண்ணப்பதாரர் 12ஆம் வகுப்பில் 75% மதிப்பெண்களுக்கு மேல் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஜியோஜித்தின் சமூகப் பொறுப் புணர்வுப் பிரிவான ஜியோஜித் அறக்கட்டளையின் வித்யா தானம் திட்டம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்க ளுக்கு அவர்களின் கல்விக் கட்டணம், தேர்வுக் கட்டணம் போன்றவற்றிற்காக ஆண்டுக்கு ரூ. 25,000/-ஜியோஜித் அறக்கட்டளை வழங்கும்.

"இளைஞர்களின் சுயமேம்பாட்டிற்கு கல்வி ஒரு முக்கிய அம்சமாக இருக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்,  நாங்கள் இந்த மாநிலத்தில் வலுவான இருப்பைக் கொண் டுள்ளதன் காரணாமாக இந்த திட்டத்திற்கு தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்தோம், மேலும் தேர்ச்சி பெறும் மாணவர்களின் சிறப்பான எதிர்காலத்திற்கு உதவுவோம் என்று நம்புகி றோம்" என்று இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சி.ஜே ஜார்ஜ் கூறினார்.

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி ஆகஸ்ட் 31, 2022. மேலும் விவரங்களுக்கு 99954 83998 என்னும் தொலை பேசியையோ அல்லது  deepak_john@geojit.com  என்னும் மின்னஞ்சலையோ தொடர்பு கொள்ளவும்.


No comments:

Post a Comment