கூடங்குளம் முழு மின்சாரமும் தமிழ்நாட்டுக்குத் தேவை ஒன்றிய அரசின் மின் துறைக்கு தமிழ்நாடு மின்வாரியம் கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 11, 2022

கூடங்குளம் முழு மின்சாரமும் தமிழ்நாட்டுக்குத் தேவை ஒன்றிய அரசின் மின் துறைக்கு தமிழ்நாடு மின்வாரியம் கடிதம்

சென்னை, ஆக. 11- தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின் தேவையைக் கருத்தில்கொண்டு, கூடங்குளம் அணுமின் நிலையத்தின் 3 மற்றும் 4ஆவது அலகில் உற்பத்தி செய்யப் பட உள்ள, தலா 1,000 மெகாவாட் மின்சாரம் முழுவதையும் தமிழ் நாட்டுக்கே வழங்க வேண்டும் என்று ஒன்றிய மின் துறைக்கு, தமிழ்நாடு மின் வாரியம் கடிதம் எழுதியுள்ளது.

கூடங்குளம் அணுமின் நிலை யத்தில் தலா 1,000 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்காக 3 மற்றும் 4ஆவது அலகுகள் அமைக் கப்பட்டு வருகின்றன. இதில், 3ஆவது அலகில் வரும் 2025 மே மாதமும், 4ஆவது அலகில் 2025 டிசம்பர் மாதத்துக்குள்ளும் மின் உற்பத்தி தொடங்கப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த 2 அலகுகளில் உற்பத்தி செய்யப்படும் 2,000 மெகாவாட் மின்சாரம் முழு வதையும் தமிழ்நாட்டுக்கே வழங்க வேண்டும் என ஒன்றிய மின் துறை அமைச்சகத்துக்கு, தமிழ்நாடு மின் வாரியம் கடிதம் எழுதியுள்ளது.

இதுதொடர்பாக, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் (டான்ஜெட்கோ), ஒன்றிய மின் துறை அமைச்சகத்துக்கு எழு தியுள்ள கடிதத்தில், ‘‘தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்வதற்காக, கூடங்குளம் 3 மற்றும் 4ஆவது அலகுகளில் உற்பத்தி செய்யப்பட உள்ள 100 சதவீத மின்சாரத்தையும் தமிழ் நாட்டுக்கே ஒதுக்க வேண்டும். இது தொடர்பாக மின் துறை அமைச் சகம், தனது கருத்தை விரைவாக தெரிவிக்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளது.

தமிழ்நாடு மின் வாரியத் தலை வர் ராஜேஷ் லக்கானி, ஒன்றிய மின் துறைச் செயலருக்கு கடந்த ஜுலை மாதம் எழுதிய கடிதத்தில், ‘‘தமிழ்நாட்டின் தற்போதைய ‘பீக் ஹவர்’ மின் தேவை 17 ஆயிரம் மெகாவாட்டாகும். வரும் 2025-2026ஆம் ஆண்டுக்குள் இது 21 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக் கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடங்குளம் அணுமின் நிலையம் தமிழ்நாட்டில் உள்ளது. இந்த மின்நிலையம் சீராக இயங்கத் தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்டுள்ளன. கூடங் குளத்தின் 1 மற்றும் 2ஆவது அல கில் உற்பத்தி செய்யப்படும் 3,150 மெகாவாட் மின்சாரம்100 விழுக் காட்டையும் தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டும் என பலமுறை கோரிக்கை விடுக்கப்பட்டும், வெறும் 55 விழுக்காடு மின்சாரம் மட்டுமே தமிழ்நாட்டுக்கு வழங்கப் படுகிறது’’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையே, தமிழ்நாட்டின் இந்தக் கோரிக்கை குறித்து, தென் மண்டல மின் குழு, தென் மாநிலங் களிடம் இருந்து கருத்து கேட்டுள் ளது.

No comments:

Post a Comment