இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த முது பெரும் தலைவரும், சிறந்த கொள்கை வீரரும், எளிமையின் சின்னமான தொண்டறச் செம்மல் தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு, தமிழ்நாடு அரசு சார்பில் ''தகைசால் தமிழர் விருது'' அறிவிக்கப்பட்டுள்ளது மிகவும் பொருத்தமானது. பாராட்டி வரவேற்கிறோம்!
வாழ்நாள் முழுவதும் கொள்கைப் போராளி யான தோழர் ஆர்.நல்லகண்ணு அவர்களுக்கு இவ்விருதினை அறிவித்த சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர் களுக்கும் இதற்காக திராவிடர் கழகம் பாராட்டி, வாழ்த்துகளைத் தெரிவித்து மகிழ்கிறது.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
6.8.2022

No comments:
Post a Comment